OMTEX AD 2

பாயில் இப்படி உறங்கினால் இவ்வளவு நன்மைகளா? இது மட்டும் தெரிஞ்சா இனி மெத்தென்று இருந்தாலும் பெட்டில் படுக்கவே மாட்டீங்க!

பாயில் இப்படி உறங்கினால் இவ்வளவு நன்மைகளா? இது மட்டும் தெரிஞ்சா இனி மெத்தென்று இருந்தாலும் பெட்டில் படுக்கவே மாட்டீங்க!

தமிழர்கள் காலம் காலமாக பாயில் படுத்து வருவது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக பாயில் உறங்கும் பழக்கம் அழிந்து கொண்டே வந்தது. மெத்தையில் உறங்குவது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் ஃபோம் மெத்தையை ஆடம்பரத்திற்காக வாங்கி போட்டால் அதில் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும்? பாயில் இப்படி உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பாயில் இப்படி உறங்கினால் இவ்வளவு நன்மைகளா? இது மட்டும் தெரிஞ்சா இனி மெத்தென்று இருந்தாலும் பெட்டில் படுக்கவே மாட்டீங்க!

பொதுவாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாயில் உறங்குவதை விரும்புகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. 60 வயதிற்கு மேல் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது இல்லை. மல்லாக்க படுத்து, கையையும், காலையும் விலாசமாக நீட்டி சௌகரியமாக படுக்கும் பொழுது உடல் முழுவதும் இரத்த அழுத்தமானது சீராக பாய்ந்து உடலை சோர்வடையாமல் செய்யும். மேலும் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் செய்யும் எனவே முதியவர்கள் பெரும்பாலும் பாயை தேர்ந்தெடுக்கின்றனர்.

கோரைப் பாயில் படுத்து உறங்கினால் கிடைக்கும் ஆரோக்கியம் மெத்தென்று இருக்கும் மெத்தையில் கிடைக்காது என்பதை முதலில் ஆணித்தரமாக நம்ப வேண்டும். நான்கு நாட்கள் பாயிலும், பின் நான்கு நாட்கள் மெத்தையிலும் உறங்கி பாருங்கள் எது சிறப்பென உங்களுக்கே புரிந்துவிடும். பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. எனவே பாயில் படுப்பதால் உடலில் இருக்கும் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி பெறும். உடல் குளிர்ச்சி அடைந்தால் ஆரோக்கியம் பலப்படும்.

paai2

கருவுற்ற தாய்மார்கள் பாயில் உறங்கும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினைகளும் அவர்களுக்கு வெகுவாக குறைந்துவிடும். பாயில் உறங்குவதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. குழந்தை பிறந்த பிறகும் பாயில் உறங்க வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதனால் சிசிவிற்கு கழுத்தில் ஏற்படும் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். பச்சிளம் குழந்தைக்கு பாய் தான் சிறந்த படுக்கையாக அமைய முடியும். இதனால் குழந்தையின் முதுகெழும்பு சீராகி, குழந்தை வேகமாக வளர உதவும். சிசுவின் நலனுக்காகவும், தாயின் நலனுக்காகவும் மெத்தையை தவிர்த்து பாயை பயன்படுத்துவது நல்லது.


படிக்கும் மாணவ, மாணவிகளும் இளம் வயதில் வரக்கூடிய கூண் முதுகு ஏற்படாமலிருக்க தொடர்ந்து பாயில் படுத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கலாம். இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு கூண் விழுவதை பார்த்து இருப்போம். இந்த பிரச்சனை தீர அவர்கள் தொடர்ந்து பாயில் உறங்கி வர பலன் கிடைக்கும். நீங்கள் வாங்கும் பாய் 3 ஆண்டுகள் வரை அதன் தன்மையில் மாறாமல் இருக்கும். அதன் பிறகு பாயின் தரம் குறைந்துவிடும். இதனால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக வாங்குவது நல்லது.

paai1

பழைய பாயை பொதுவாக தைப்பொங்களுக்கு முந்தய போகியில் போட்டு எரிப்பது உண்டு. இரும்பு கட்டில், மரக்கட்டில், ஃபோம் பெட் போன்றவற்றை விட பன்மடங்கு நல்ல பலன்களை, சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது பாய் ஆகும். கல்யாணத்தில் சீர் வரிசை கொடுக்கும் பொழுது பாய் இல்லாமல் ஒரு சீர் வரிசை இருந்ததில்லை. அந்த அளவிற்கு தொன்றுதொட்டு பாய் நம் வீட்டில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. இப்போதும் கூட என்ன தான் பஞ்சு மெத்தை இருந்தாலும் வீட்டில் கட்டாயம் பாய் ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கும், விருந்தினர்களின் வருகையை எதிர்நோக்கியபடியே!

.

OMTEX CLASSES AD