Advertisement

தவறியும் காற்றில் பறந்து கூட, உங்கள் வீட்டில் இருந்து இனி ஒரு பூண்டு தோலை கூட குப்பைக்கு போக விடமாட்டீங! இந்த விஷயம் மட்டும் தெரிந்தால்!

தவறியும் காற்றில் பறந்து கூட, உங்கள் வீட்டில் இருந்து இனி ஒரு பூண்டு தோலை கூட குப்பைக்கு போக விடமாட்டீங! இந்த விஷயம் மட்டும் தெரிந்தால்!

பூண்டு உரித்த பின்பு பூண்டிலிருந்து கிடைத்த தோலை குப்பையில் போடாமல் என்ன செய்வது. அப்படி இந்த பூண்டு தோலுக்குள் என்னதான் மகத்துவம் மறைந்துள்ளது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. மிகவும் பயனுள்ள சில நல்ல தகவல்களை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இத்தனை நாட்கள் குப்பையில் தூக்கி போட்ட பூண்டு தோலுக்கு சேர்த்து வருத்தப்படும் அளவிற்கு நல்ல விஷயங்கள் இதில் மறைந்து தான் இருக்கின்றது. சரி குறிப்புக்கு செல்வோமா.

poondu

பூண்டை தினம்தோறும் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வாயுத் தொல்லையை நீக்கக்கூடிய தன்மையும் இதற்கு உண்டு. தினமும் ஒரு பூண்டை சாப்பிட்டு வந்தாலே நம் ஆயுள் நீடிக்கும் என்ற பல விஷயங்கள் நமக்குத் தெரிந்திருக்கும்.

இதுதவிர, இந்த பூண்டு தோலுக்கு நம்முடைய தலை பாரத்தை போக்கக்கூடிய சக்தியும் உள்ளது. தலையில் நீர் கோர்த்து இருந்தால் அதை சரி செய்யக் கூடிய சக்தியும் உள்ளது. இந்த பூண்டு தோலினை பயன்படுத்தி சுவாச சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்க முடியும். குழந்தைகளுக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் இந்த பூண்டு தோலினை பயன்படுத்தலாம், என்ற விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா.

dhupam

சாம்பிராணி தூபம் போடும் போது அந்த தூபத்தில் பூண்டு காம்புகள், பூண்டு தோல்கள் இவைகளை சேர்த்து போட்டால் அந்த புகையிலிருந்து ஒருவிதமான வாசம் வரத்தொடங்கும். இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்கலாம். அந்த புகையை நாம் சுவாசிக்கும் போது நமக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பூண்டு தோல் துன்பத்தினை வீட்டில் போட்டு வரலாம்.


கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள், தலைக்கு குளித்தபின்பு அவர்களுக்கு சீக்கிரமே தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும். தலைபாரம் ஏற்படும். அந்த தலை பாரத்தை குறைக்க சாம்பிராணி தூபத்தோடு இந்த பொருட்களை சேர்த்து தூபம் போட்டு தலையை காண்பிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு தலைக்கு குளிப்பாட்டிய பின்பும் கூட இந்த தூபத்தை போடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலையில் இருக்கும் நீர் கோர்த்தல் பிரச்சினைக்கு, நிரந்தர தீர்வு கிடைக்க இந்த பூண்டு தோல் சாம்பிராணி தூபம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

dhupam1

அடுத்தபடியாக ஒரு சிறிய மெல்லிசாக இருக்கக்கூடிய காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த காட்டன் துணியில் பூண்டு தோலை வைத்து, முடிச்சு போல கட்டிக்கொள்ள வேண்டும். இதை உங்களுடைய தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கலாம். அப்படி துவங்கும் போது அந்த பூண்டு தோளில் இருந்து வெளிவரக்கூடிய வாசத்தை நீங்கள் சுவாசித்தால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

cold1

உங்களுடைய குழந்தைகளுக்கு சளி பிடித்திருக்கின்றது. மூக்கடைப்பு இருக்கிறது. அலர்ஜியின் காரணமாக இருமல் இருக்கின்றது. ஆஸ்துமா பிரச்சனை இருக்கின்றது எனும் பட்சத்தில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த முடிச்சினை உங்களுடைய குழந்தையின் கைகளில் கொடுத்துவிட்டு, அடிக்கடி அந்த பூண்டு தோல் முடிச்சை முகர்ந்து பார்க்க சொல்லவேண்டும்.

பெரியவர்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அவர்களும் இந்த பூண்டு தோலை முகர்ந்து பலன் அடையலாம். இப்படி செய்து வந்தால் படிப்படியாக சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். இனி பூண்டு தோலை வீணாகக் குப்பையில் போடுவீர்களா. நம் பூமியில் இயற்கையாக விளையக்கூடிய எந்த ஒரு பொருளுக்கும், மருத்துவ குணமும், மகத்துவமும் சேர்ந்து தான் இருக்கின்றது. அதை நாம் தான் சரியாக புரிந்து கொள்வது கிடையாது.