Advertisement

கடையில் விற்கும் எந்த எண்ணையும் வேண்டாம்! கொட்டின இடத்தில் மீண்டும் முடி கடகடன்னு வளர இத தேய்ச்சா போதுமே! பாட்டி காலத்து ரகசிய டெக்னிக் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

கடையில் விற்கும் எந்த எண்ணையும் வேண்டாம்! கொட்டின இடத்தில் மீண்டும் முடி கடகடன்னு வளர இத தேய்ச்சா போதுமே! பாட்டி காலத்து ரகசிய டெக்னிக் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் நீங்கள் என்ன தான் கடைகளில் வாங்கி புதிது புதிதான எண்ணெய்களை தேய்த்தாலும், ஒரு பிரயோஜனமும் இருக்காது. அதில் சேர்க்கப்படும் கெமிக்கல் மற்றும் ரசாயன கலவைகள் மேலும் அதிகமாக முடி கொட்ட தான் செய்யும். இதற்கு நிரந்தர தீர்வு நம்முடைய வீட்டில் செய்யும் மூலிகை எண்ணெய் தான் சிறந்த தேர்வாக இருக்கும். பல நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து, கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி தேய்ப்பதற்கு பதிலாக, நம் பாட்டி காலத்து டெக்னிக்கை பயன்படுத்தினால் ரெண்டு மாதத்தில் கடகடன்னு கொட்டிய இடத்தில் மீண்டும் முடி நிச்சயமாக 100% வளரும். அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

shedding-hair1

முடி கொட்டுவதற்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நிறைய காரணங்கள் உண்டு. இன்று இருக்கும் நவீன யுகத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு குறைந்த வயதிலேயே முடி கொட்டிப் போய் அசிங்கமாக காட்சி அளிக்கிறோம். கண்களுக்கும், மூளைக்கும் நிறைய வேலைகளை கொடுப்பதால் தலையில் இருக்கும் வேர்க்கால்களில் பலம் இழந்து போகிறது. கண்களுக்கும், மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது நிச்சயம் முடி கொட்டும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும்.

மூலிகை எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ – ஒரு கப்,

கரிசலாங்கண்ணி – ஒரு கட்டு,

மருதாணி இலைகள் – ஒரு கைப்பிடி,

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,

சின்ன வெங்காயம் – 15

பெரிய நெல்லிக்காய் – 5

வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்,

கருப்பு எள் – 25g,

வெட்டி வேர் – 5g.

- Advertisement -

மேலே கூறியுள்ள இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கப்பெறும். நீங்கள் வாங்கும் எண்ணெயின் விலையை விட, நிச்சயம் இதனுடைய விலை மலிவாக தான் இருக்கும். சிரமப்படாமல் நம் வீட்டிலேயே ஒருமுறை மட்டும் செய்து தயாரித்து வைத்து விட்டால் ஒரு வருடம் வரை நல்ல பலனை தரும். அடர்த்தியாகவும், கருகருவெனவும், நீண்ட கூந்தலைப் பெறலாம்.

combing-hair

ஆவாரம் பூவை இலைகள் மற்றும் தண்டுகளை விட்டுவிட்டு பூக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். கரிசலாங்கண்ணி மஞ்சள் அல்லது வெள்ளை நிற பூக்கள் மற்றும் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கறிவேப்பிலையை தண்டுகள் நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். விதைகள் நீக்கிய நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். தோலுரித்த சின்ன வெங்காயம், கருப்பு எள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி ஜாரில் கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் வெட்டி வேர் சேர்க்கக் கூடாது.

vettiver

பின்னர் அதனை உருண்டையாக உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள். இதனை இரண்டு நாட்கள் வரை அகலமான பாத்திரத்தில் வைத்து மொட்டை மாடியில் வெயிலில் காய விடுங்கள். பின்னர் அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து லேசாக சூடேற்றி கொள்ளுங்கள். அதில் வெட்டி வேரை சேர்த்து கொள்ளுங்கள். வெட்டிவேர் கூந்தலுக்கு நல்ல மணமும், முடி வளர்ச்சிக்கும் உதவும். அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள மூலிகை தட்டைகளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.

coconut-oil

ஆறியதும் ஒரு மூடி போட்டு இரண்டு நாட்கள் வரை அதனை தொடாமல் அப்படியே விட்டு விடுங்கள். அதில் இருக்கும் மூலிகை பொருட்கள் நன்கு எண்ணெயுடன் ஊற வேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் மூலிகையை மறுமுறை இந்த எண்ணெய் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி தினமும் தடவி வர வேண்டும். வாரம் இருமுறை கட்டாயம் தலைக்கு அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் இரண்டு மாதங்களில் கொட்டிய இடங்களில் முடி தானாகவே மீண்டும் இயற்கையாக முளைக்கும்.