நீங்க எப்படி இவ்வளவு ஒல்லியானீங்க! அப்படின்னு உங்கள பாக்குறவங்க எல்லோரும் கட்டாயம் கேப்பாங்க. தினமும் காலை உணவாக இதை மட்டும் குடுங்க போதும்.
நம்முடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து, தொப்பை, தொடை பகுதியில் உள்ள சதைகளை படிப்படியாக குறைக்க வைத்து, உடல் எடையை படிப்படியாக குறைக்க வைக்கும் வேலையை ஒரு டம்ளர் இந்த பானம் செய்துவிடும். உடல் எடையை குறைப்பதற்கு செயற்கை ரீதியான எந்த ஒரு முறையையும் பயன்படுத்தக் கூடாது. அது நமக்கு இன்றைக்கு இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். நம்முடைய முன்னோர்கள் குடித்து வந்த ராகி கூழ் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனால் சாதாரணமாக காய்ச்சும் ராகி கூழ் அல்ல இது. கொஞ்சம் வித்தியாசமான முறையில் உடல் எடையை குறைக்க கூடிய பொருட்களை சேர்த்து உடம்புக்கு தேவையான புரோட்டின் சத்தை அதிகரிக்க கூடிய வித்தியாசமான இந்த ரெசிபியை எப்படி செய்வது. தெரிஞ்சுக்கலாம் வாங்க.
முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு கேழ்வரகு மாவை சேர்த்து, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இந்த கேழ்வரகு மாவை கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து 1 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். அந்த தண்ணீர் நன்றாக காயட்டும். தண்ணீர் சூடானதும், கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவை, சுடுதண்ணி ரோடு சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த இடத்தில் கூழுக்குத் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ராகி கூழ் பத்து நிமிடங்கள் நன்றாகக் கொதித்து வெந்து வர வேண்டும். கைவிடாமல் கலக்கிக் கொண்டே இருங்கள். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, இந்த கூழை நன்றாக ஆற வைத்துவிடுங்கள். இது அப்படியே ஆகட்டும்.
ஒரு கேரட்டை எடுத்து தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய துண்டு மாங்காயை எடுத்து துருவி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் துருவிய கேரட், துருவிய மாங்காய், 5 ஸ்பூன் தயிர், கொஞ்சமாக கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் 1, சீரகத்தூள் 1/2 ஸ்பூன், 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி கொள்ளுங்கள். ஆறிகொண்டிருக்கும் கேழ்வரகுக் கூழையும் இதோடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக 5 சின்ன வெங்காயம் பொடியாக வெட்டி, இதன் மேல் தூவி கலந்து காலை உணவாக இரண்டு டம்ளர் இதை குடித்தாலே போதும். உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் வராது.
உடல் எடை படிப்படியாக குறையும். தினம்தோறும் இதை எல்லோரும் குடித்து வரலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் இப்படி அனைவரும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த கூழை குடித்து பயன்பெறலாம். உங்களுக்கு இந்த குறைப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.