Advertisement

அடடா! இது தெரியாமல் இத்தனை நாட்களாக உலர் திராட்சையை அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்கி விட்டோமே! உலர்திராட்சையை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

அடடா! இது தெரியாமல் இத்தனை நாட்களாக உலர் திராட்சையை அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்கி விட்டோமே! உலர்திராட்சையை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

நம்முடைய உடலுக்கு அதிகப்படியான சத்துகளை சேர்க்கும் உலர் திராட்சையை இனி அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டாம். எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான உலர் திராட்சைகளை குறைந்தவிலையில் நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த வேலையை செய்து விட்டால், ஒரு வருடம் ஆனாலும் ஆரோக்கியமான உலர் திராட்சைகள் நம் வீட்டிலிருக்கும். வாங்க உலர் திராட்சையை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

graps2

தேவையான அளவு பச்சை திராட்சை பழங்களை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த திராட்சைகளை ஒவ்வொன்றாக எடுத்து அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அழுகிய திராட்சைகள் ஒன்று கூட இதில் இருக்கக் கூடாது. கவனமாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக தூள் உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைத்து, திராட்சைகளை, மீண்டும் ஒரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்க வீட்ல இருக்கும் இட்லி பானையை எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி பானைக்கு உள்ளே வைக்கும் அளவுக்கு சிறிய கிண்ணத்தில் இந்த திராட்சைகளை போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால், இட்லி தட்டில் கூட ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் கொஞ்சமாக திராட்சைகளை அடுக்கி வைத்து வேக வைக்கலாம்.

graps3

இட்லி பானையில் ஆவியில் வேகவைக்க தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு களவடையை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேலே திராட்சை போட்டு வைத்திருக்கும் சிறிய கிண்ணத்தை வைத்து, இட்லி பானையை மூடி போட்டு 7 லிருந்து 10 நிமிடங்கள் ஆவியில் அந்த திராட்சை பழங்களை வேக வைக்க வேண்டும்.

எப்படி என்றால் அந்த திராட்சை பழங்கள் தோல் சுருங்கி வரும் பதம் வரை ஆவியில் வேகவைத்தால் போதும். மொத்தமாக பத்து நிமிடங்களில் திராட்சைப்பழம் தோல் சுருங்கி வெந்துவிடும். (தோல் சுருங்காத, ஆவியில் வேகாத திராட்சை பழங்கள் வெயிலில் காய்ந்தாலும் உலர்திராட்சையை மாறாது.) ஆவியில் வேகவைத்த இந்த திராட்சை பழங்களை ஒரு வெள்ளை துணியிலோ அல்லது தாம்பூல தட்டிலோ ஒவ்வொன்றாக எடுத்து தனித்தனியாக காய வைக்கவேண்டும்.

graps4

நன்றாக அடிக்கும் வெயிலில் இந்த திராட்சை பழங்களை மொத்தமாக இரண்டிலிருந்து மூன்று நாட்கள் காய வைத்தாலே போதும். முதல் நாள் காய்ந்ததும், இரண்டாவது நாள் திராட்சை பழங்களை திருப்பி வையுங்கள். அப்போதுதான் அடி பக்கத்தில் இருக்கும் திராட்சைப் பழங்கள் சீராக வெயிலில் காயும்.

graps5

காய்ந்ததும் உங்களுக்கு உலர்திராட்சை தயாராகி இருக்கும். கடையில் வாங்க கூடிய டிரை கிரேப்ஸ் போலவே இந்த பழங்கள் கிடைத்திருக்கும். இதை கண்ணாடி பாட்டிலில் அல்லது காற்று உள்ளே புகாத ஏர் டைட் கவரில் பத்திரப்படுத்தி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வருடம் வரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். கெட்டுப்போவதற்கு வாய்ப்பே கிடையாது. எந்தவிதமான கெமிக்கலும் கலக்காத உலர் திராட்சை, அதுவும் குறைந்த விலையில் உங்களுக்கு கிடைத்துவிடும்.

graps6

கருப்பு திராட்சையிலும் இதை செய்யலாம். ஆனால் உள்ளே கொட்டை இருக்கக்கூடாது. பச்சைத் ஆட்சியிலும் உள்ளே கொட்டை இல்லாத பழங்களை தான் தேவை. இட்லி பானையில் ஆவியில் இந்த திராட்சை பழங்களை வேக வைக்கும் போது கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா பழங்களும் தோல் சுருங்கி வந்து உள்ளதா என்பதை செக் பண்ணிட்டு அதன் பின்பு உலர வையுங்கள். தோல் சுருங்க வில்லை என்றால், மீண்டும் இட்லி பானையை மூடி போட்டு 2 நிமிடங்கள் வேக விடலாம் தவறு இல்லை. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.