Advertisement

சூடுபிடிக்கும் இரட்டை குழந்தை விவகாரம்.. கண்ணம்மா கேட்ட கேள்வி, சௌந்தர்யா கொடுத்த பதில் – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்

சூடுபிடிக்கும் இரட்டை குழந்தை விவகாரம்.. கண்ணம்மா கேட்ட கேள்வி, சௌந்தர்யா கொடுத்த பதில் – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்

September 7, 2021


இரட்டை குழந்தை குறித்து கண்ணம்மா கேட்க சௌந்தர்யா கொடுத்த பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.



பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் September 7, 2021

Bharathi Kannamma Update 07.09.21 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலி சீமந்தத்திற்கு வந்துள்ள கண்ணம்மா தன்னுடைய மாமியார் சௌந்தர்யாவை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.


ஹேமா யாருடைய மகள்? அவ ஏன் என்னை மாதிரியே இருக்கா? அவளோடு இருந்த அவ்வளவு சந்தோஷமா இருக்கு அவளுக்கும் அப்படித்தான் இருக்கு என கூறுகிறார்.


ஹேமா எனக்கு பிறந்த குழந்தை. அவள என் கிட்டே இருந்து தூக்கிட்டு போய் உங்க புள்ள கிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லி இருக்கீங்க. அதான உண்மை கரெக்ட்டா என கேட்கிறார். இருவரும் என்ன சொல்வது என தெரியாமல் தவித்து விட்டு பின்னர் சௌந்தர்யா நீ வேண்டும்னா வீட்டுக்கு வா அவள தத்தெடுத்ததற்கான சான்றிதழை காட்டுவதாக கூறுகிறார்.


அதன் பின்னர் கண்ணம்மா இன்னொரு கேள்வியை மட்டும் கேட்கிறேன் லட்சுமிக்கும் ஹேமாவுக்கும் எப்படி ஒரே தினத்தில் பிறந்த நாள் வருது என கேட்கிறார். இதற்கு சௌந்தர்யா ஹேமாவின் உண்மையான பிறந்த நாள் யாருக்கும் தெரியாது. அவள தத்தெடுத்த அன்னைக்குதான் லஷ்மி பிறந்ததாக தெரியும். அதனால் அதே தேதியையும் நேரத்தையும் குறித்து விட்டோம் என கூறுகிறார். இதற்கிடையில் பாரதி வந்து எங்களை உள்ளே தேடுவதாக கூப்பிட சௌந்தர்யா தன்னுடைய கணவரை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார்.


இன்னும் சந்தேகம் தீராத கண்ணம்மா மாமியார் சொன்னது உண்மையா பொய்யா என தெரியாமல் தவிக்கிறார். இதற்கிடையில் அசிங்கப்பட்ட வெண்பா வீட்டுக்கு கிளம்புகிறார். அஞ்சலி ஓடிவந்து வெண்பாவை சாப்பிட்டு விட்டுச் செல்லுமாறு கூறுகிறார். பின்னர் பாரதி இதைப் பார்த்துவிட்டு வந்து வெண்பாவை சாப்பிட்டு விட்டு செல்லுமாறு அழைக்கிறார். அப்ப பாரதி வந்து அட்லீஸ்ட் எனக்காக சாப்பிட்டு போ அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு வெண்பா உனக்காக 100 தடவை அசிங்கப்பட்டுட்டேன். இது 101-வது தடவையா இருந்துட்டு போகட்டும் என உள்ளே சென்று விடுகிறார். 


பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் September 7, 2021

அஞ்சலி செய்த தரமான சம்பவத்தை அகிலன் உட்பட அனைவரும் பாராட்டுகின்றனர். பின்னர் லஷ்மி பாரதி கையைப் பிடித்துக் கொண்டு சாப்பிட கூப்பிடுகிறார். முதலில் கையை உதறி தள்ளிய பாரதி பின்னர் குழந்தைக்கு என்ன தெரியும் என நினைத்துக் கொண்டு லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு சாப்பிட அழைத்துக்கொண்டு செல்கிறார்.


அதே போல் ஹேமா கண்ணம்மாவுடன் சாப்பிட வருகிறார். எதேச்சையாக பாரதியும் கண்ணம்மாவும் பக்கத்தில் பக்கத்தில் சாப்பிட உட்கார்ந்தனர். பின்னர் பாரதி, கண்ணம்மா பின்பக்கத்தில் இருப்பதை கண்டு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க முயல்கிறார். இதைப்பார்த்து அஞ்சலி பாரதியை அதே இடத்தில் உட்கார வைக்க திட்டம் போடுகிறார். இந்த திட்டத்திற்கு சௌந்தர்யா அகிலன் அனைவரும் உதவுகின்றனர்.


பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் September 7, 2021


அதன் பின்னர் சௌந்தர்யா வெண்பாவை கூப்பிட்டு பாரதிக்கு எதிரில் அமர வைக்கிறார். வேறு வழியில்லாமல் கண்ணம்மா பக்கத்தில் உட்காரும் பாரதி கண்ணம்மாவை பார்க்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.