Advertisement

லட்சுமியை தேம்பி தேம்பி அழ வைத்து விட்டார் கண்ணம்மா!

லட்சுமியை தேம்பி தேம்பி அழ வைத்து விட்டார் கண்ணம்மா!

கோபத்தில் கொந்தளித்த கண்ணம்மா, லட்சுமியை சரமாரியாக திட்டிவிடுகிறாள்.


September 09, 2021, 16:56 IST

சொந்தக்காரர்களை பற்றி கேட்கும் லட்சுமியை கண்ணம்மா சரமாரியாக திட்டி இன்றைய எபிசோட்டில் தேம்பி தேம்பி அழ வைக்கிறாள். 


Bharathi Kannamma Update 06.08.21


பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு எப்போது உண்மையெல்லாம் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அஞ்சலி வளைக்காப்புக்கு சென்ற கண்ணம்மாவுக்கு வெண்பா - பாரதி விஷயம் தெரிந்துவிட்டது. இதுதான் சாக்கு என்று வெண்பாவை ஒரு வழி செய்தார் கண்ணம்மா. அவமானம் தாங்க முடியாமல் நேற்று வெண்பா தற்கொலை முயற்சி வரை போக கடைசி நேரத்தில் பாரதி வந்து வெண்பாவை காப்பாற்றி விடுகிறான். முடிந்தவரை பாரதியை கொம்பு சீவி விட்ட வெண்பா கண்ணம்மா பற்றியும் காதில் போடுகிறார். செம்ம கடுப்பில் கோபத்தை கொட்ட பாரதி வீட்டுக்கு கிளம்புகிறான்.


வளைக்காப்பு முடிந்ததும் அம்மா வீட்டில் இருப்பது தான் முறை என்றாலும் அஞ்சலிக்கு அகிலை பிரிய மனசு இல்லை. எவ்வளவு சொல்லியும் அகிலுடன் சேர்ந்து மாமியார் வீட்டுக்கு கிளம்புகிறார்.பிரசவ தேதி நெருங்க நெருங்க, தான் இறந்து விட போவதை எண்ணி அஞ்சலி பயப்படுகிறாள். அதனால் அகிலுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என நினைத்து அவருடனே வீட்டுக்கு கிளம்புகிறாள். அஞ்சலியின் அம்மா பாக்கியா அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் பலனில்லை. வீட்டுக்கு கிளம்புகிறார் அஞ்சலி.


இங்கே சவுந்தர்யா வீட்டில் கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்றியதை பற்றி எல்லோரும் சேர்ந்து பேசி சிரிக்கின்றனர். அஞ்சலி வீட்டுக்கு வந்ததை அகிலியிடம் அஞ்சலியிடமும் விசாரிக்க , சரியாக பாரதி எண்ட்ரி ஆகுகிறார். மனதில் இருக்கும் அனைத்து கோவத்தையும் கொட்டி தீர்க்கிறார். கண்ணம்மாவை வளைக்காப்புக்கு அழைத்து வந்தது, கல்யாணம் ஆகாத உண்மையை அஞ்சலி மூலம் தெரிய வைத்தது என அனைத்து கோபத்தையும் கொட்டி விட்டு அங்கிருந்து வேகமாக ரூமூக்கு செல்கிறான்.


சீரியலின் கேள்வி நாயகி லட்சுமி, வழக்கம் போல் கண்ணம்மாவிடம் சொந்தக்காரங்களை பற்றியும் “உனக்கு எப்படி அம்மா வளைக்காப்பு நடந்தது” அப்படி இப்படின்னு கண்ணம்மாவுக்கு பழச ஞாபகப்படுத்த கோபத்தில் கொந்தளித்த கண்ணம்மா, லட்சுமியை சரமாரியாக திட்டிவிடுகிறார். இதுவரை அம்மாவை இது மாதிரி பார்க்காத லட்சுமி பயத்தில் தேம்பி தேம்பி அழுகிறார். அழுதுக்கொண்டே அங்கிருந்து ஓடி போகிறார். கடைசியில் அவசரத்தில் மகளை திட்டிவிட்டோம் என்று கண்ணம்மா வறுத்தப்படுகிறாள். அஞ்சலியும் அகிலும் மனம் விட்டு பேடுகின்றனர். தனக்கு இருக்கும் பிரச்சனயை எண்ணி அஞ்சலி ஒவ்வொரு நாளையும் பயத்திலே கழிக்கிறாள். இதனால் அகிலிடமும் நெருங்கி பழகுகிறாள். இவர்களின் உரையாடல் உடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்: cinemugam.com