Advertisement

அஞ்சலி வளைகாப்பில் அசிங்கப்பட்ட வெண்பா, சௌந்தர்யாவிடம் கண்ணம்மா கேட்ட கேள்வி – பரபரக்கும் பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட் ‌‌

அஞ்சலி வளைகாப்பில் அசிங்கப்பட்ட வெண்பா, சௌந்தர்யாவிடம் கண்ணம்மா கேட்ட கேள்வி – பரபரக்கும் பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட் ‌‌

September 6, 2021


அஞ்சலி வளைகாப்பில் வெண்பா அசிங்கப்பட அதன்பின்னர் சௌந்தர்யாவிடம் கண்ணம்மா பல கேள்விகளைக் கேட்கிறார்.

Bharathi Kannamma Update 06.08.21

Bharathi Kannamma Update 06.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வெண்பா பாரதியின் மனைவி போல நடந்து கொள்ள முயற்சி செய்தார். இந்த நிகழ்வுகளை பார்த்து கண்ணம்மா வேதனைப்படும் காட்சியைக் கண்ட அஞ்சலி வெண்பா பாரதியின் மனைவி இல்லை என்ற உண்மையை உடைத்தார்.



இதனால் வெண்பா, பாரதி என இருவரும் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். அதன் பின்னர் அஞ்சலி வீட்டார் உறவினர் ஒருவர் நீ டாக்டர் தம்பியோட மனைவி இல்லையா, அப்புறம் எதுக்கு அவரோடு இப்படி உரசிட்டு நிக்குற? இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு வரம்பு இருக்கு, எல்லா இடத்துக்கும் இப்படி வந்துடுவியா? நீ எல்லாம் என்ன ஜென்மமோ என திட்டுகிறார்.


Bharathi Kannamma Update 06.08.21

அதன் பின்னர் அஞ்சலி கண்ணம்மாவை அழைக்கிறார். கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்கின்றனர். சௌந்தர்யா வெண்பாவை இன்னும் வெறுப்பேற்ற குடும்பமா சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று கூறி அந்த போட்டோவை வெண்பாவை எடுக்க சொல்கிறார். அகிலன் வெண்பாவிடம் செல்போனை கொடுத்து போட்டோ  எடுங்க என கூறுகிறார்.


பின்னர் அந்த போட்டோவை பார்த்து சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் சிரித்துக் கொண்டிருக்க அந்த சமயத்தில் கண்ணம்மா அங்கே வருகிறார். சௌந்தர்யாவிடம் பாரதிக்கு வெண்பாகும் கல்யாணம் ஆகலைனு ஏன் என்கிட்ட சொல்லாமல் மறைச்சீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு சௌந்தர்யாவின் கணவர் பாரதி வாங்கிய சத்தியம் தான் காரணம் என கூறுகிறார். அப்படினா நீங்க உண்மையை சொல்லி இருக்கலாமே மாமா எனக்கேட்க நான் உண்மையை சொல்லி இருந்தாலும் அந்த பழி சௌந்தர்யா மேல தான் விழும்‌. அதனாலதான் சொல்லல என கூறுகிறார்.


அப்படின்னா ஹேமாவோட அம்மா யாரு என கண்ணம்மா கேட்க சௌந்தர்யா கோபப்படுவது போல பேசுகிறார். பின்னர் அது ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து வந்த குழந்தை என கூறுகிறார். இதற்கு கண்ணம்மா ஹேமா என்கூட இருந்தா பெத்த பொண்ணு கூட இருக்கிற மாதிரி இருக்கு. அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்குது. என் கூடவே இருக்க ஆசைப்படுறா. என்னை மாதிரியே இருக்கா. அவளைப் பார்க்கும் போது சின்ன வயசுல என்ன பார்த்த மாதிரியே இருக்கு என கண்ணம்மா கேட்க அதற்கு சௌந்தர்யா கடவுள் கிட்ட கேக்க வேண்டியது எல்லாம் என்கிட்ட கேட்கிறியாம்மா எனக் கூறுகிறார்.


Bharathi Kannamma Update 06.08.21

அந்த கடவுளுக்கு கூட சில விஷயங்களுக்கு உண்மை தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் உங்களுக்கு கண்டிப்பா தெரியும். டாக்டர் எனக்கு இரட்டை குழந்தைகள் இரண்டுமே பெண் குழந்தைகள் பிறந்ததா சொன்னாங்க. ஒரு பொண்ணு லட்சுமி அப்போ என்னுடைய இன்னொரு பொண்ணு எங்க என சௌந்தர்யாவிடம் கேட்கிறார். யாரோ உன் கிட்ட பொய் சொல்லி இருக்காங்க என சௌந்தர்யா கூற டாக்டர் எதுக்கு பொய் சொல்லணும் அதற்கு என்ன அவசியம் என கண்ணம்மா கூறுகிறார்.


மேலும் ஹேமா என்னுடைய பொண்ணு, என்ன மாதிரியே இருக்கா. அவளை நீங்க என்கிட்ட இருந்து பிரிச்சுக்கொண்டு போய் பாரதி கிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லி இருக்கீங்க கரெக்டா அதுதானே உண்மை என கேட்க இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.