Advertisement

தோல் சம்பந்தப்பட்ட எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் உடனடி தீர்வை கொடுக்கும் ஒரு கைப்பிடி மண்! உங்களுடைய சருமத்தை பாதுகாக்க இந்த சிகிச்சைக்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது.

தோல் சம்பந்தப்பட்ட எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் உடனடி தீர்வை கொடுக்கும் ஒரு கைப்பிடி மண்! உங்களுடைய சருமத்தை பாதுகாக்க இந்த சிகிச்சைக்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது.

நம்முடைய சருமத்தை பாதுகாப்பதற்கு இன்றைய சூழ்நிலையில் எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால், அந்த பல லட்ச வழிகளில், சருமத்தை பாதுகாக்கும் பல வகையான பொருட்களில் முதன்மையான இடம் இந்த ஒரு கைப்பிடி மண்ணுக்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அது எந்த மண்? அந்த மண்ணில் அப்படி என்ன அற்புதம் வாய்ந்த சக்தி நிறைந்து இருக்கின்றது. அதை எப்படி நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்பதைப் பற்றிய சில அரிதான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sand-bath3

இந்த சிகிச்சை முறையானது நேற்றோ இன்றோ வந்த பழக்கம் அல்ல. ஆண்டாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்க முறைகளில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் இது மறைந்து விட்டது. அவ்வளவு தான்.  இன்று நாம் அதை நினைவு கூற போகிறோம்.

கரையான் புற்று என்று சொல்லுவார்கள் அல்லவா? அந்த மண்ணைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை நம்முடைய ஊர்களில் பாம்பு புற்று என்று சொல்லுவார்கள். இது பாம்பு கட்டும் புற்று அல்ல. கரையான்கள் சேர்ந்து கட்டும் புற்றில், பாம்பு வந்து குடி கொள்ளும். இந்தப் புற்று மண்ணுக்குத் தான் நம்முடைய சரும பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி அதிகமாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம்.

sand-bath

ஒரு எறும்பு வகையைச் சேர்ந்ததுதான் கரையான். இந்த கரையானின் வாயில் இருக்கும் உமிழ்நீரில் ஃபோலிக் ஆசிட் என்று சொல்லப்படும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இந்த ஃபோலிக் ஆசிடை வெளிப்படுத்தி மண்ணோடு சேர்த்து கலந்து கட்டும் புற்றுதான் கரையான் புற்று. இன்று நம்முடைய சருமத்தை அழகுபடுத்த இந்த ஃபோலிக் ஆசிடை பயன்படுத்தி தான் பல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இந்த கரையான் புற்று மண், உங்களுக்கு கிடைத்தாலும் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் எறும்புகள் மண்ணை தோண்டி எடுத்து புற்று வைத்திருக்கும். அந்த மண் கிடைத்தாலும் பரவாயில்லை. அதை எடுத்து நீங்கள் உங்களுடைய சரும பிரச்சனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படி பயன்படுத்துவது என்பதனை பார்த்து விடுவோம்.

sand-bath2

கரையான் புற்று மண் அல்லது எறும்புகள் வைத்திருக்கும் புற்றுமண் இதில் உங்களுக்கு எது கிடைக்கிறதோ அதை நீங்கள் ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பாம்பு குடியிருக்கும் புற்றை எல்லாம் போய் தோண்டி விடாதீர்கள். இதே போல் எந்த ஒரு கெமிக்கலும் கலக்காத மண்ணாக பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

sand-bath4

அந்த மண்ணைக் கொண்டு வந்து வெய்யிலில் போட்டு நன்றாக காயவைத்து சல்லடையில் சலித்து நைசாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்தால் எப்போது வேண்டும் என்றாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் மண்ணை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து 1 மணி நேரம் ஊற வைத்தால் போதும். ஊறவைத்த இந்த மண் கலவையை உங்களுடைய சருமத்தில் எங்கெல்லாம் பிரச்சனை உள்ளதோ அந்த இடத்தில் எல்லாம் தடவி, 30 நிமிடங்கள் மிதமான வெயிலில் இருந்து விட்டு அதன் பின்பு வந்து குளித்து விட வேண்டும்.

skin

சருமத்தில் படை பிரச்சனை, சொரியாசிஸ் பிரச்சனை, உடம்பில் கொப்பளம் ஆங்காங்கே இருப்பது, முகப்பரு பிரச்சனை, இதுதவிர தோல் சம்பந்தப்பட்ட வேறு எந்தப் பிரச்சினைக்கும் இந்த மண்குளியல் ஒரு நிரந்தர தீர்வைக் கொடுக்கும். முடிந்தால் நிறைய மண் கிடைத்தால் உங்களுடைய உடல் முழுவதும் கூட இந்த மண் கலவையை தடவி வெயிலில் காய வைத்துவிட்டு அதன் பின்பு குளித்து பாருங்கள்.

face12

சருமத்தில் பிரச்சனை உள்ளவர்கள் மாதம் 1 முறை தாராளமாக இந்த மண் குளியல் எடுக்கலாம். சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால் மூன்று மாதத்திற்கு 1 முறை இந்த குளியல் எடுத்தால் எதிர்காலத்தில் நம் சருமத்திற்கு எந்த ஒரு பெரிய பிரச்சனையும் வராமல் தடுத்துக் கொள்ளவும் முடியும். அந்த அளவிற்கு சக்திவாய்ந்தது தான் இந்த மண்குளியல் உங்களுக்கு இந்த தகவல் பிடித்திருந்தால், உங்களுக்கு சருமத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.