Advertisement

சமையலறையில் நீங்கள் கவனிக்கத் தவறும் இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட, பெரிய ஆபத்தை உருவாக்கிவிடுமாம்!

சமையலறையில் நீங்கள் கவனிக்கத் தவறும் இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட, பெரிய ஆபத்தை உருவாக்கிவிடுமாம்!

சமையலறையில் நீங்கள் கவனிக்க மறந்து செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய ஆபத்தை உண்டாக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆரோக்கியம் என்பது சமையலறையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சமைக்கும் உணவு, சமைக்கும் நபர், அதைக் பரிமாறுவார்கள், சாப்பிடும் நம்முடைய கை இது அத்தனையும் சரியாக, சுத்தமாக இருக்கும் பட்சத்தில் தான் நம் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகாமல் இருக்கிறது. சமையலறையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kitchen2

பாக்டீரியாக்களை உருவாக்கும் இடம் கழிவறை மற்றும் சமையலறை எனவே இந்த இரண்டையும் மற்ற அறைகளை விட அதீத சுத்தத்துடன் பராமரிக்க வேண்டும். இதில் கவனக்குறைவாக இருந்தால் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் கத்தி மற்றும் காய்கறி வெட்டும் பலகை இந்த இரண்டுமே மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. காய்கறிகளை வெட்டும் கத்தியை தெரியாமல் கூட இறைச்சியை வெட்ட பயன்படுத்தாதீர்கள்.

அதற்கென தனியாக ஒரு கத்தியை வைத்துக் கொள்ளுங்கள். அதே போல காய்கறி வெட்டும் பலகையும், இறைச்சியை வெட்ட பயன்படுத்தக் கூடாது. இரண்டையுமே தனித்தனியாக வைத்துக் கொள்வது தான் நல்லது. அது போல ஒருமுறை பயன்படுத்திய பின் கத்தி மற்றும் பலகை இரண்டையுமே கைகளால் சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

knife-and-cutter

எந்த இறைச்சி, மீன், கோழி போன்றவை எதுவாக இருந்தாலும் குளிர்சாதன பெட்டியில் ஃப்ரீசரில் வைப்பது தான் நல்லது. அதீத குளிர் மற்றும் வெப்பம் இறைச்சியை சில நாட்களுக்கு பாதுகாப்பாக வைக்கும். இல்லை என்றால் அது நன்றாகவே இருந்தாலும் அதை சாப்பிடும் பொழுது உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். இது ஆரோக்கியத்திற்கு சீர்கேடு ஆகும். ஃப்ரீசரில் அதிக பனி இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அது இறைச்சிகளுக்கு நல்லது தான். முட்டை போன்றவற்றை பிளாஸ்டிக் அல்லது அட்டை டப்பாக்களில் வைத்து திறக்காதவாறு பராமரிக்க வேண்டும். முட்டைகளை கழுவிப் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது தான் முட்டையை கழுவ வேண்டும்.


காலை முதல் மாலை வரை சேகரித்த குப்பைகளை எப்போதும் இரவில் அப்படியே வைத்திருக்க கூடாது. அன்றைய நாள் குப்பைகளை அன்றைய நாளே சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தி விடுவது நல்லது. அதை அப்படியே விட்டுவிட்டால் அதிலிருந்து உருவாகும் கொசுக்கள், பாக்டீரியாக்கள் உணவுப் பொருட்களிலும் வந்து உட்காரும். உங்கள் வீட்டில் பல்லிகள், கரப்பான்கள் நடமாட்டம் இருக்கிறது என்றால் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு முறை தண்ணீரில் கழுவி விட்டு பின்னர் பயன்படுத்துவது தான் நல்லது.

cockroach1

எப்போது எது வந்து பாத்திரத்தின் மீது உட்காரும் என்று நமக்கு தெரியாது. சமைக்க வாணலி, கரண்டி போன்றவற்றை எடுக்கிறீர்கள் என்றால் தண்ணீரில் அலசிவிட்டு பயன்படுத்துங்கள். சாப்பிட தட்டு எடுக்கிறீர்கள் என்றால் ஒரு முறை தண்ணீரில் அலசி விட்டு பின்னர் பயன்படுத்துங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் போகப் போக பழகி விடும். குறிப்பாக சாப்பிடும் பொழுது எப்படி கைகளை கழுவிவிட்டு சாப்பிட வேண்டுமோ! அதே போல சமைக்கும் முன்னரும் கைகளை கழுவிவிட்டு சமைப்பது தான் நல்லது. இதனால் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற ஆபத்தை விளைவிக்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பை பெறலாம்.

meat

முந்தைய நாள் சமைத்த இறைச்சிக் குழம்பை மறுநாள் பயன்படுத்தவே கூடாது. ஆனால் பலரும் அதை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவது உண்டு. இதனால் உடலில் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இப்படி சிறு சிறு விஷயங்களில் நாம் செய்யும் தவறுகள் நம் ஆரோக்கியத்திற்கு கேள்விக்குறியாக நிற்க வைக்கிறது! என்பதை மனதில் கொண்டு இனியும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.