Advertisement

நம் வீட்டு சமையல் பொருட்களில் இதெல்லாம் கூட சேர்ப்பார்களா? உணவு பொருட்களில் ஏற்படும் கலப்படத்தை தெரிந்து கொள்ள சூப்பரான ஐடியாக்கள்!

நம் வீட்டு சமையல் பொருட்களில் இதெல்லாம் கூட சேர்ப்பார்களா? உணவு பொருட்களில் ஏற்படும் கலப்படத்தை தெரிந்து கொள்ள சூப்பரான ஐடியாக்கள்!


உணவு என்பது இன்றியமையாதது ஆகும். மனிதனுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் உணவும் ஒன்று. அந்த உணவில் இப்பொழுது கலப்படம் செய்யும் வேலை படுஜோராக கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பலருக்கும் உணவில் இருக்கும் கலப்படத்தை எப்படி தெரிந்து கொள்வது? என்பது தெரியாமலேயே உள்ளது. இந்த பதிவின் மூலம் சில குறிப்பிட்ட உணவு வகைகளுடன் என்ன கலப்படம் செய்வார்கள்? அதை எப்படி சுலபமாக வீட்டிலேயே கண்டுபிடிப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

cofee-powder

காபி தூள்:

காபி தூளுடன் சிக்கரி கலக்கப்படுவது உண்டு. இதனை கண்டுபிடிக்க ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிதளவு காபி தூளை தூவி கொள்ளுங்கள். காபி தூள் அப்படியே மிதக்கும் ஆனால் அதில் சிக்கரி கலந்திருந்தால் அடியில் படிந்துவிடும். இதை வைத்து காபியில் சிக்கரி கலந்திருப்பதை அறியலாம்.

மிளகாய்:

மிளகாயுடன் செங்கல் தூள் கலப்பது உண்டு. ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மிளகாய்த் தூளை தூவுங்கள். மிளகாய் தூள் கலந்த பிறக்கும் தண்ணீரின் நிறம் மாறாமல் இருந்தால் அது செங்கல் கலக்கப் படாத மிளகாய் தூள் ஆகும். நிறம் மாறினால் அதில் செங்கல் தூள் கலக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ice cream 2

ஐஸ்கிரீம்:

நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் சோப்பு தூள் கலக்கப்படுவது உண்டு. இதனைத் தெரிந்து கொள்ள ஐஸ்கிரீமில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை தெளித்தால் நுரை போல் பொங்கி வரும். இதை வைத்து அதில் சோப்பு தூள் கலந்து இருப்பதாக உறுதி செய்து கொள்ளலாம்.


தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயுடன் வேறு சில எண்ணெய்கள் கலக்கப்பட்டு இருப்பது எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா? சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் முழுமையாக உறைந்து விட்டிருக்கும். அப்படி உறையவில்லை என்றால் அதனுடன் வேறு சில எண்ணெய்களையும் கலந்திருப்பதாக நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ghee

நெய்:

சுத்தமான நெய்யா? இல்லை தாவர எண்ணெய் கலக்கப்பட்டு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஒரு கண்ணாடி பாட்டிலில் நெய்யை உருக்கி ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சிட்டிகை அளவிற்கு சர்க்கரை சேர்த்து குலுக்கினால் ஐந்து நிமிடத்தில் தாவர எண்ணெய் கலக்கப்பட்டு இருந்தால் சிகப்பாக மாறிவிடும். சுத்தமான நெய் என்றால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

சர்க்கரை:

சர்க்கரையுடன் சுண்ணாம்புத் தூள் கலந்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சர்க்கரையை போட்டு பார்த்தால் சுண்ணாம்புத் தூள் கலக்கப்பட்டு இருந்தால் நீரின் மேலே மிதக்கும். இல்லை என்றால் சர்க்கரை கீழே அடியில் படிந்துவிடும். இதை வைத்து சர்க்கரை உண்மையானதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

honey 2

தேன்:

தேனுடன் பெரும்பாலும் சர்க்கரை பாகு சேர்த்து வருகிறார்கள். இதனைத் தெரிந்து கொள்ள தேனுடன் சிறிதளவு வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்தால் நுரை போல் வரும். இப்படி நுரை உண்டானால் அது சுத்தமான தேன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அயோடின் உப்பு:

சுத்தமான அயோடின் உப்பு என்பதை தெரிந்து கொள்ள பாதி உருளைக்கிழங்கை வெட்டி அதில் உப்பை தூவி சிறிது நேரம் கழித்து சில துளி எலுமிச்சை சாறு கலந்தால் நீல நிறமாக மாறிவிடும். இதை வைத்து சுத்தமான அயோடின் உப்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.

pachai pattani

பச்சை பட்டாணி:

நாம் வாங்கும் பச்சை பட்டாணியில் பச்சை நிறமி சேர்க்கப்படுகிறது. இதனை அறிந்து கொள்ள பட்டாணியில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்தால் நீர் பச்சை நிறமாக மாறிவிடும். இதை வைத்து நிறமி சேர்க்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

jeeragam

தனியாத்தூள்:

தனியா தூள் அல்லது சீரகத்தூள் இந்த இரண்டிலும் கலப்படமாக உமி மரத்தூள் சேர்க்கப்படுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் சீரகத் தூள் அல்லது மல்லித்தூள் ஏதாவது ஒன்றை போடும் பொழுது அப்படியே கீழே படிந்து விட்டால் அது கலப்படம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் நீரின் மேலே மிதந்தால் அதில் மரத்தூள் கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளது ஆகும்.