நகை கொடுத்த கடைக்காரரிடம் நகை வாங்க சென்ற கண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.!!
September 6, 2021
நகை கொடுத்த கடைக்காரரிடம் நகை வாங்கச் சென்ற கண்ணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
Pandian Stores Update 06.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். நேற்று கண்ணன் நகைக்கடையில் நகையை கொடுத்துவிட்டு அடகு வைத்துக் கொண்டோ அல்லது நகையை எடுத்துக்கொண்டு பணம் கேட்டார். பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் கடைசிப் பிள்ளை என்பதை தெரிந்து கொண்ட கடைக்காரர் கண்ணனை அனுப்பிவிட்டு சாயங்காலம் வர சொன்னார்.
வீட்டிற்கு வந்த கண்ணனை ஐஸ்வர்யா திட்டினார். பணம் வாங்காமல் நகையை கொடுத்துவிட்டு எப்படி வந்தீங்க. நகை நீங்க கொடுக்கல என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என ஐஸ்வர்யா கேட்ட உடனே கண்ணன் கடைக்காரரிடம் நகையை வாங்கி வருவதற்காக சென்றான். அங்கு சென்ற கண்ணனிடம் நகையை எடுத்துக் கொடுத்துவிட்டு கடைக்காரர் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.
பத்தாயிரம் ரூபாய்க்கு மாதம் 400 ரூபாய் வட்டி. சரியாக வட்டியை கொடுத்துவிட வேண்டும் என கூறி நகையை திருப்பி கொடுத்தார். மூர்த்தி அண்ணன் மேல இருக்க நம்பிக்கையில பணம் கொடுப்பதாக கூறினார். எமோஷனலான கண்ணன் இன்னமும் எங்க அண்ணனோட தயவால்தான் பிழைச்சிட்டு இருக்கேன் என கூறினார்.
அதன் பின்னர் மருத்துவமனையில் குமரன் மற்றும் முல்லை ஆகியோர் குமரனின் அம்மாவை பார்த்துக் கொள்கின்றனர். இருவரும் வெளியில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவருடன் வருகிறார். இதனை பார்த்ததும் முல்லை நல்லா இருக்குல்ல என சந்தோஷப்படுகிறார்.
அதன் பின்னர் நான் கர்ப்பமாக இருந்தா என்னோட நீங்க ஹாஸ்பிடல்ல வருவீங்களா என குமரனை கேட்கிறார் முல்லை. இதனையடுத்து குமரன் கண்டிப்பா வருவேன் நான் வராமல் வேற யார் வருவாங்க. உன்னால நடக்க முடியலையா உன்ன நடக்கவே விடமாட்டேன். காலையில சாயங்காலம் வாக்கிங் கூட்டிட்டு போவேன். பிரசவம் நடக்கும் சமயத்தில் உன் கூடவே இருப்பேன் என கூறுகிறார்.
பின்னர் குமரன் அவருடைய அம்மாவை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வீட்டுக்கு சென்றதும் தனது மகன்களுடன் அன்பைப் பரிமாறிக் கொள்கிறார். பின்னர் கயல் பாப்பாவை தூக்கி கொஞ்சுகிறார்.