இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் போதும். அழகு, ஆரோக்கியம், இளமை இவை மூன்றும் சுலபமாக கிடைத்திடும்.
இன்றைய தலைமுறையினர் தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் மிகவும் விருப்பமாக இருப்பார்கள். அதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. இவ்வாறு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் சில நாட்களில் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்பட்டு என்னதான் மேக்கப் செய்தாலும் முகத்தில் பொலிவு இருக்காது. இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை அடைய நேரிடும். இவ்வாறான மூன்று வித பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான ஜூசை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 1, பீட்ரூட் – 1, கேரட் – 1.
செய்முறை:
ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதன் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வடிகட்டி பயன்படுத்தி ஜூசை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேரட் பீன்ஸ் கேரட் இவை மூன்றையும் பயன்படுத்தி செய்யப்படும் இது ஏபிசி ஜூஸ் என்று அழைக்கப்படும் இந்த ஜூஸை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் முகமும் பொலிவுடன் எப்பொழுதும் இளமையாக காட்சி அளிக்கிறீர்கள் நீங்கள் கருப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வர உங்கள் நேரத்தை நல்ல பொலிவு உண்டாகும் போகலை பார்ப்பவர்களும் கூட திடீரென்று இப்படி மாறி விட்டாய் என்று மிகவும் ஆச்சரியத்துடன் உங்களைப் பார்த்து கேட்பார்கள்.
ஆப்பிள் பயன்கள்:
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் வராது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆப்பிளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருக்கின்றன. உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. ஆப்பளில் விட்டமின் ஏ உள்ளதால் உடலை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
பீட்ரூட் பயன்கள்:
பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான விட்டமின்களும் மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மிகுதியாக இருக்கின்றன இதனை சாப்பிட்டு வருவதன் மூலம் மன அழுத்தத்தை குறைத்து உடலில் ரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் நிம்மதியான உறக்கம் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் முகம் பொலிவுடன் இருக்கும்.
கேரட் பயன்கள்:
கேரட்டில் இருக்கும் விட்டமின் ஏ கண் பார்வை சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தம் செய்வதால் இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் அமைப்பு சீராக இருக்க துணை புரிகிறது.