Advertisement

ஒருமுறை பாலை இப்படி காய்ச்சி குடித்து பாருங்கள். தொண்டையில் இருக்கும் சளி அத்தனையும் கரைந்து வெளியேறிவிடும். திரும்பவும் சளி தொந்தரவு உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்காது.

ஒருமுறை பாலை இப்படி காய்ச்சி குடித்து பாருங்கள். தொண்டையில் இருக்கும் சளி அத்தனையும் கரைந்து வெளியேறிவிடும். திரும்பவும் சளி தொந்தரவு உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்காது.

ஒருமுறை பாலை இப்படி காய்ச்சி குடித்து பாருங்கள். தொண்டையில் இருக்கும் சளி அத்தனையும் கரைந்து வெளியேறிவிடும்.
ஒருமுறை பாலை இப்படி காய்ச்சி குடித்து பாருங்கள். தொண்டையில் இருக்கும் சளி அத்தனையும் கரைந்து வெளியேறிவிடும்.

பருவ காலத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால், அந்த காலநிலை மாற்றங்கள் நம்முடைய உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. வெயில் குறைந்து, மழை தொடங்கிய சில நாட்களிலேயே சில்லென்ற காற்று நம் மீதுபட்டவுடன் சளி பிடித்துவிடும். தொண்டை கட்டிக் கொள்ளும். இருமல் வந்துவிடும். இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இயற்கையான முறையில் சுலபமான ஒரு தீர்வு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cold

நிறைய பேர் தொண்டையில் இருக்கும் சளியை நீக்குவதற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு, இருமலை போக்குவதற்கு, பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பார்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் காய்ச்சிய சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் நமக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது கிடையாது. பாலில் மஞ்சள் தூளை போட்டு காய வைத்து தான் பருக வேண்டும். அப்படி காய்ச்சும்போது மஞ்சள் தூளுடன் இன்னும் சில பொருட்களைச் சேர்க்கும்போது நமக்குக் கிடைக்ககூடிய பலன் இரட்டிப்பாகிறது. தொண்டையில் இருக்கக்கூடிய பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கொடுக்க கூடிய இந்த மஞ்சள் பொடி சேர்த்த பாலை பக்குவமாக முறைப்படி எப்படி காய்ச்சுவது.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவு பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த பால் நன்றாக காய்ந்து பொங்கி வரும் சமயத்தில் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகு தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பட்டை – 1 சிறிய துண்டு, சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். குறிப்பாக முக்கியமாக இறுதியாக பாலை இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு 1/2 ஸ்பூன் நெய் இதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

milk1

நல்ல கொழுப்புள்ள நெய் இறுதியாக இதில் சேர்ப்பதன் மூலம், இந்த பாலில் கலந்திருக்கும் அனைத்து விதமான சத்துகளும் நம் உடலில் சரியான முறையில் போய் சேரும். நெய் வாசம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நெய்க்கு பதிலாக 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தேங்காய் எண்ணெய் சுத்தமானது தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்து இந்தப் பாலில் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு இதை வடிகட்டி இதற்கு தேவையான நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து கலந்து சுட சுட குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

milk2

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தொண்டை கரகரப்பு நீங்கும். சளி உடனடியாக வெளியேற்றப்படும். தினமும் காலையில் இந்த பாலை குடிக்கலாம். அப்படி இல்லை என்றால் இரவு தூங்கும்போது குடித்துவிட்டு தூங்கலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். முடிந்தவரை இதற்கு பசும்பாலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் பாக்கெட் பாலை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.