Advertisement

மூட்டு வலி, குதிகால் மற்றும் கணுக்கால் வலி உடனே தீர 3 எளிய வழிமுறைகள்!

மூட்டு வலி, குதிகால் மற்றும் கணுக்கால் வலி உடனே தீர 3 எளிய வழிமுறைகள்!

நமது மொத்த எடையையும் தாங்கி நிற்பது நம்முடைய கால்கள் தான். இந்த கால்களுக்கு ஓய்வின்றி அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அங்கு வலிக்கான தூண்டுதல்கள் உருவாகின்றன. ஒருவர் உயரத்திற்கு ஏற்ற எடையை கொண்டிருந்தால் அவர்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் வருவதில்லை ஆனால் உடல் பருமன் உடையவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு குதிகால் வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. உடல் பருமன் மட்டுமல்லாமல் இந்த வலிக்கு வேறு சில காரணங்களும் உண்டு, எனினும் உடல் பருமன் என்பது தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கும்.

heel-pain

தங்களுடைய உயரத்திற்கு ஏற்ற எடையை கொண்டிருப்பவர்கள் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்யக் கூடாது. அப்படி அதிக நேரம் நிற்கும் படியான வேலையில் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்களுக்கு நாளடைவில் காலில் வலியும், எரிச்சலும், அசௌகரியத்தையும் உண்டு பண்ணி விடும். இதிலிருந்து எளிதாக நிவாரணம் பெற நாம் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முதல் வழிமுறை:

அத்தியாவசிய எண்ணெய் என்று கூறப்படும் எண்ணெய் வகைகளில் யூகலிப்டஸ் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவையும் அடங்கும். இந்த மூன்று எண்ணெய்களில் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கடைகளில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வாளியில் பாதி அளவிற்கு நல்ல சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேற்கூறிய எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை திறந்து மூன்று துளிகள் மட்டும் எண்ணெயை தண்ணீரில் விடுங்கள்.

yugaliptus-oil

அந்த தண்ணீரில் உங்களுடைய கால்கள் பத்திலிருந்து, பதினைந்து நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாத வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி அத்தனையும் சரியாகிவிடும். பின்பு சுத்தமான தண்ணீர் கொண்டு கால்களை கழுவி விடலாம். யூகலிப்டஸ் எண்ணெயில் வலியை நீக்கக்கூடிய மற்றும் அழற்சியில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் ஆற்றல் உண்டு. கிராம்பு எண்ணெயில் வலி நிவாரணியாக செயல்படக் கூடிய தன்மைகள் உண்டு. லாவண்டர் எண்ணெய் வலியை கட்டுப்படுத்துகிறது.


இரண்டாம் வழிமுறை:

சூடான தண்ணீரை அரை பக்கெட் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எப்சம் சால்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து கால்களை பத்திலிருந்து, பதினைந்து நிமிடம் வரை அப்படியே அமிழ்த்தி வையுங்கள். இப்படி செய்து வர சட்டென வலி எல்லாம் நீங்குவதை நீங்களே உணரலாம். எப்சம் சால்டில் மெக்னீசியம் சல்பேட் இருக்கின்றது. இது மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை குறைத்து தசை பதற்றம் மற்றும் பிடிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

epsam-salt

மூன்றாம் வழிமுறை:

3 டீஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 சொட்டு லேவண்டர் எண்ணெய் கலந்து லேசாக அடுப்பில் வைத்து சூடேற்றி அதை மூட்டு மற்றும் கணுக்கால் மற்றும் குதிகால் ஆகிய இடங்களில் எங்கு வலி இருக்கிறதோ அந்த இடங்களில் சூடு பறக்கத் தேய்த்து விட்டால் போதும்! வலியெல்லாம் பறந்து நிம்மதியான உறக்கம் வரும். இவற்றில் எது உங்களுக்கு வசதியாக இருக்கின்றதோ, அதனை பின்பற்றி அனைவரும் பயனடையலாமே!