ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டுமா? இளமையாகவும் நோயின்றி வாழவும் தினமும் இந்த 5 பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே மாற்றம் புரியும்.
இப்போது நாம் வாழும் சூழ்நிலையில் ஆயுட்காலம் என்பது 60 வயது என்பதே அதிகமாகத்தான் உள்ளது. உடலின் ஆரோக்கியம் என்பது எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமென்றாலும் எவ்வளவு பெரிய பிரச்சனை வேண்டுமென்றாலும் வரும் என்ற நிலையில் தான் உள்ளது. அதற்க்கு மிக முக்கிய காரணம் நமது உணவில் நிறைய வேதிப்பொருட்கள் கலந்திருப்பதே. இத்தகைய சூழ்நிலையில் நாம் ஆரோக்கியமாகவும் எவ்வித நோயும் இல்லாமலும் நீண்ட நாட்கள் இருக்க இந்த 5 உணவினை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. வாருங்கள் அந்த ஐவகை உணவு குறித்து விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நெல்லிக்காய்:
மருத்துவ குணத்தில் முதலிடம் வாய்ந்தது நெல்லிக்காய். இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒருவரின் உடல்பருமன் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல் சமமாக இருப்பது என்பது அரிதாக உள்ளது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் 20 அல்லது 30 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலையில் குடிக்க உணவில் இருக்கக்கூடிய அதிகமான கொழுப்புகள் கரைந்து உடலில் தங்கியுள்ள நாட்பட்ட கொழுப்புக்களும் கரைந்து வெளியேறும். மேலும் எலும்புகள் உறுதியாக இருப்பதற்கும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. உடலில் எலும்புகளில் இருக்கும் ஆஸ்டியோ கிளாஸ் என்னும் செல்கள் தான் எலும்புகளை வலுவிழக்கச் செய்கிறது. அத்தகைய செல்கள் நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதன் மூலம் குறைகிறது. இதோடு மட்டும் அல்லாமல் நமது கண் பார்வை தெளிவாக இருக்கவும் நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. கண்ணில் ஏற்படும் கண் புரை, கண் அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இதற்க்கு உள்ளது. அதே சமயம் மிகவும் இளமையாக இருக்கவும் நெல்லிக்காய் துணைபுரிகிறது.
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது பேரிச்சம்பழம்:
பேரிச்சம்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சோகை நோயை குணப்படுத்துகிறது. மேலும் உடலுக்கு தேவையான எனர்ஜியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பேரிச்சம் பழத்தில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. பெண்கள் பேரிச்சம்பழத்தை கட்டாயம் சாப்பிடவேண்டும். பெண்களுக்கு வரும் எலும்புருக்கி நோயை கட்டுபடுத்த இது பேருதவி பபுரிகிறது. வயதானவர்களுக்கு வரக்கூடிய எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றுக்கு தீர்வாகவும் இது உள்ளது. நீரிழிவு நோயாளிகளும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று பேரிச்சம் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாவதாக நாம் பார்க்க இருப்பது நாட்டுக்கோழி முட்டை:
வெள்ளையாக இருக்கும் லெகான் முட்டையை விட நாட்டுக்கோழி முட்டையே உடலுக்கு மிகவும் சிறந்தது. கொலஸ்ட்ரால் இதில் அதிகமாக இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவை அதிகரிப்பதில்லை. கண்பார்வை கோளாறு, கண் அழுத்தம் போன்ற நோய்கள் புரத சத்து குறைப்பாட்டினால் தான் வருகின்றது. நாட்டுக் கோழி முட்டையில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வருவதன் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள், உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டையை தவறாமல் எடுத்து வருவது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
நான்காவதாக நாம் பார்க்க இருப்பது பூண்டு:
பூண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. முக்கியமாக ரத்த குழாய் அடைப்பு, ஓபன் ஹார்ட் சர்ஜரி, ஆஞ்சியோ, ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பூண்டு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பூண்டில் மிகவும் மருத்துவ குணமிக்க அமிலத்தன்மை உள்ளது. பூண்டை வறுத்து சாப்பிடுவதன் மூலம் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் பூண்டிற்கு உள்ளது. உடல் அளற்சியையும் இது குறைக்கிறது. பூண்டை பச்சையாக அரைத்து ஜூஸ் எடுத்து சாப்பிடுவதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். சளி ஆஸ்துமா சுவாச பகுதியில் உள்ள பாக்டீரியா தொற்றுகள் போன்றவற்றை குணப்படுத்தவும் பூண்டு உதவுகிறது.
ஐந்தாவதாக நாம் பார்க்க இருப்பது நார்ச்சத்துள்ள காய்கறிகள்:
நமது உணவில் நார்ச்சத்துள்ள காய்கறிகளை பழங்களையும் தினமும் தவறாமல் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல நன்மைகளை நாம் பெற முடியும். மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்களில் உள்ள காய்கறிகளையும் பழங்களையும் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகமுள்ள முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, பாகற்காய், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும், பழங்களில் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, அவகேடா போன்றவற்றையும், நார்ச்சத்து அதிகமாக உள்ள சிறுதானியங்களையும் தினமும் நமது சாப்பாட்டில் சேர்த்து வருவதுடன், முடிந்தவரை கிழங்கு வகைகளை தவிர்த்து வருவது உடலுக்கு மிகவும் நல்லது.
நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்க, வயது அதிகரிக்கும் போது நாம் சில தேவையற்ற உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அதே சமயம் மேலே குறிப்பிட்ட உணவுகளை சிறிய வயது முதல் பெரிய வயது உடைய அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் மற்றும் உணவு ரீதியான சில நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இந்த உணவனுகளை எடுத்துக்கொள்ளலாம்.