Advertisement

உடம்பு ஒல்லியா தான் இருக்கு! ஆனா இந்த வயிறு மட்டும் பெருசாவே இருக்கு. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா? 2 நாள் மட்டும், இதை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

உடம்பு ஒல்லியா தான் இருக்கு! ஆனா இந்த வயிறு மட்டும் பெருசாவே இருக்கு. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா? 2 நாள் மட்டும், இதை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

நிறைய பேருக்கு உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு பிரச்சனையால் வரக்கூடிய தொப்பை இருக்கும். அது வேறு பிரச்சினை. ஆனால் சில பேருக்கு கொழுப்பு பிரச்சனை இருக்காது. உடல் ஒல்லியாக இருக்கும். ஆனால், இந்த வயிற்றுப் பகுதி மட்டும் பெருசாக இருக்கும். குண்டாக இருப்பவர்களுக்குத் தொப்பை ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை மிகவும் வேதனை தரக்கூடிய வகையில் இருக்கும். தொப்பை வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் உங்களுக்கு வாயுத் தொல்லையால் இந்த தொப்பை இருந்தால் அதை உங்களால் குறைக்க முடியாது.

thoppai

நிறைய உடற்பயிற்சி மேற்கொண்டும் நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும் குறையாத அந்த தொப்பை கூட, இந்த இயற்கையான கை வைத்தியத்திற்கு குறையும். அந்த ரெமிடி என்ன. உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கா. வாங்க பார்க்கலாம்.

வாயுத் தொல்லையால் இருக்கக்கூடிய தொப்பையை குறைக்க ரிமெடி. ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 10, ஓமம் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 2 சிட்டிகை, (கட்டி பெருங்காயம் இருந்தால் ஒரு பிஞ்ச் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.) இந்த நான்கு பொருட்களையும் எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

milagu

அடுத்தபடியாக அதே கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அது மிதமான தீயில் காய்ந்ததும் தோல் உரித்த 10 பல் பூண்டை அந்த எண்ணெயில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பூண்டின் நிறம் லைட் பிரவுன் கலர் வரணும் பாத்துக்கோங்க. இதையும் நன்றாக ஆறவைத்து மிளகு ஜீரகம் ஓமம் பெருங்காயத்தூள் சேர்த்த மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 1/4 ஸ்பூன் உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.


இப்போது நமக்கு வாயுத் தொல்லையை நீக்குவதற்கு தேவையான பொடி தயாராக இருக்கிறது. இது ஒரு லேகியம் பதத்திற்கு நமக்கு கிடைத்திருக்கும். இதை எப்படி சாப்பிடுவது. சூடாக வடித்த இரண்டு கைப்பிடி அளவு சாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் லேகியத்தினை போட்டு, 1 ஸ்பூன் நெய் விட்டு, பிசைந்து சுட சுட சாப்பிட்டுவிட வேண்டும். அவ்வளவு தான். மதியம் சாதம் சாப்பிடும் போதும் இதை சாப்பிட்டு கொள்ளலாம். தவறு கிடையாது. காலையிலேயே உங்களுடைய வீட்டில் சாப்பாடு தயாராக இருந்தால், காலையிலேயும் இதை சாப்பிடலாம் தவறொன்றும் கிடையாது.

garlic-fry

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பூண்டு பொடியினை தயார் செய்து சாப்பிட வேண்டும். இந்த பொடியை தயார் செய்து ஃப்ரிட்ஜில் எல்லாம் ஸ்டோர் செய்து வைக்க கூடாது. இதை சாப்பிட்ட பின்பு உங்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலும் அதை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் உடலில் இருக்கும் கழிவு வெளியேற்றப்படும். இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வாரத்துக்கு, இதை சாப்பிட்டால் நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். (வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்).

நிறைய பேருக்கு தூங்கி எழுந்தவுடன் காலையில் வயிறு உப்புசமாக இருக்கும். காலைக்கடனை முடித்தபின்பு வயிறு சின்னதாகும். மறுபடியும் சாப்பாடு சாப்பிட்டால் வயிறு பெருசாகும். மறுபடியும் சிறியதாகும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சரியான ரெமிடி. அடுத்தபடியாக சில பெண்களுக்கு டெலிவரிக்கு பிறகு, வயிறு உப்புசமாக இருக்கும். வயிற்றுக்குள் காற்று புகுந்து விட்டது என்று சொல்லுவார்கள் நம் வீட்டு பெரியவர்கள். அவர்களும் இதை ட்ரை பண்ணி பார்க்கலாம். நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

செயற்கையாக இதில் நாம் எந்த ஒரு பொருளையும் சேர்க்க கிடையாது. சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்கள் தான். பக்குவமாக மேல் சொன்ன முறைப்படி அந்த பொடியை தயார் செய்து, சுடு சாதத்தில் பொடியை போட்டு சாப்பிடும் போது கட்டாயமாக நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை மறக்காதீர்கள். சுத்தமான பசுநெய் கிடைத்தால் அதை சேர்த்துக் கொள்வது இன்னும் நல்லது. ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும். பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.