Advertisement

பல் கூச்சம் மற்றும் பல் சிதைவு இவற்றிலிருந்து விடுபட்டு, ஆட்டம் காணும் பல்லையும் ஸ்ட்ராங்காக மாற்ற இதனை மட்டும் செய்யுங்கள்.

பல் கூச்சம் மற்றும் பல் சிதைவு இவற்றிலிருந்து விடுபட்டு, ஆட்டம் காணும் பல்லையும் ஸ்ட்ராங்காக மாற்ற இதனை மட்டும் செய்யுங்கள்.


குழந்தை பிறந்து எட்டு மாதம் கழித்து பற்கள் முளைக்கத் தொடங்கும். ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கழித்து இந்தப் பால் பற்கள் தானாகவே விழ ஆரம்பிக்கும். இது சிறுவயதில் அனைவருக்குமே பொதுவான ஒரு விஷயமாகும். ஆனால் நன்றாக வளர்ந்த சிலருக்கும் இந்தப் பிரச்சினைகள் இருக்கும். இது மிகவும் கவலை தரக் கூடிய விஷயமாகும். பற்கள் ஆட்டத்துடன் இருந்தால் எதனையும் சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும். அந்த பல்லை சுற்றி உள்ள திசுக்கள், தசைகள் வீக்கத்துடன் இருக்கும். இதனை நாம் கவனிக்காமல் இருந்தால் அது நமக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும். இவ்வாறான பல் பிரச்சினைகளுக்கான தீர்வினை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

teeth1

பற்களில் பிரச்சனை உண்டாக காரணங்கள்:

பெரும்பாலும் பற்களின் ஈறுகளில் தோன்றும் வீக்கம் மற்றும் எலும்பு இழப்பு இவற்றின் காரணமாக தான் பல் தளர்வுகளும் பல் கூச்சங்களும் உண்டாகின்றன. அதுமட்டுமல்லாமல் சரியான வாய்வழி சுகாதாரத்தினை பின்பற்றாமல் இருந்தாலும் பலவித பல் பிரச்சனைகள் உண்டாகும்.

புகை பிடித்தல், மது அருந்துதல் இவற்றின் மூலமாக பற்களில் உள்ள எனாமல் எனும் மூலப்பொருட்கள் அழிந்து, பல் கூச்சம் மற்றும் பல் தளர்வு ஏற்படும். இந்த எனாமல் எனும் மூலப்பொருள் பற்களில் கவசமாக இருக்கும். இதற்கு பாதிப்பு ஏற்படும்போது நாம் பற்களை இழக்க நேரிடும். பற்கள் லேசாக ஆட்டம் செய்யும் போது, நாம் சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் பிறகு பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பல் பராமரிப்பு:

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெயை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை வாயினுள் வைத்து பற்களை சுற்றி நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும். இவ்வாறு வாயினுள் எண்ணெயை வைத்துக் கொண்டு 10 அல்லது 20 நிமிடங்கள் கொப்பளித்து பின்னர் வெதுவெதுப்பான சுடுநீரில் வாயினை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இவ்வாறு காலையில் எழுந்தவுடனும், இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாகவும் செய்து வர வேண்டும்.


நெல்லிக்காய் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அந்த நீரினால் தினமும் ஒரு முறை வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளித்த பிறகு ஒரு மணி நேரத்திற்கு எந்த வித உணவுகளையும் சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்து வருவதால் பற்களில் இணைப்பு திசுக்கள் உருவாவாகும். ஈறுகள் மற்றும் பற்கள் வலு பெரும்.

brush-teeth

இரண்டு பல் பூண்டினை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அவற்றை சேதமடைந்த பல் அல்லது தளர்வாக இருக்கும் பல்லிர்க்கும் கன்னத்திற்கும் இடையில் வைத்துவிட வேண்டும். முடிந்தவரை 1 நேரம் இதனை வைத்திருந்து பின்னர் எடுத்துவிடலாம். இவ்வாறு செய்து வந்தால் பல் பிரச்சனைக்கு காரணமாக தொற்றுக்களை அழித்து பற்களை வலுவாக்கும்.

kadugu 4-compressed

கடுகு எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து அதனை பிரச்சனை உள்ள பற்களை மீது தடவி வந்தால் பல் பிரச்சனை அகன்றுவிடும்.

epsam-salt

கடுகு எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அதனை பேஸ்ட் போல் குழைத்து கொண்டு கூச்சம் உள்ள பற்களின் மீதோ அல்லது ஆட்டம் கொண்டிருக்கும் பல் மீதோ தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து, பின்னர் வாரம் முறை செய்து வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.