நம் அன்றாட உணவில் பூண்டு என்பது மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. உடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றக் கூடிய சத்துக்கள் பூண்டில் நிறைந்துள்ளன. பூண்டில் இருக்கும் சல்ஃபர் நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தது. உடலுக்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்தாக செயல்பட கூடிய அற்புதமான ஒரு மூலிகை தான் இந்த பூண்டு. இந்நிலையில் பூண்டை நாம் சமைக்கும் பொழுது என்ன செய்யக் கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
பூண்டில் வைட்டமின் சி, பி6, மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகமாக காணப்படுகின்றன. இது நம் அணுக்களின் செயல்பாடுகளை தூண்டி விடக் கூடியதாக அமைந்துள்ளது. அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் 15 வகையான பாக்டீரியாக்கள் நம் உடலில் இருந்து ஒழித்துக் கட்ட முடியும். இத்தகைய மகத்துவம் வாய்ந்த பூண்டு ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு கூட்டி கொடுக்கிறது.
பசும்பாலில் 10, 15 பூண்டு பற்களை சேர்த்து நன்கு கொதித்து சுண்ட வைத்து பூண்டுடன் சேர்த்து பாலையும் குடித்து வந்தால் சளி, இருமல் போன்ற எந்த ஒரு தொந்தரவும் நேராது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இதனை தினமும் இரவு படுக்க செல்லும் முன் கொடுத்து வரலாம். ரத்த அழுத்தம் குறையவும் பூண்டை பாலுடன் கொதிக்க வைத்து சாப்பிடலாம். வாயுத் தொந்தரவால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
பூண்டு ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து வெளியேற்றக் கூடிய அற்புத ஆற்றல் படைத்தது. ரத்தத்தில் சேர்ந்துள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். பூண்டில் இருக்கும் சல்ஃபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கருப்பைக் கோளாறுகளை நீக்கி பெண்களுக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கும். அஜீரணம், புளிப்பு ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிற்று எரிச்சல், மலச்சிக்கல் ஆகிய அத்தனை பிரச்சனைகளையும் நீக்க பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு உடலில் இருக்கும் புழுக்களை அகற்றி பசியைத் தூண்டி நன்கு சாப்பிட வைக்கக்கூடிய அற்புத மருந்தாக செயல்படக் கூடிய இந்த பூண்டை ஒருபொழுதும் புறக்கணிக்கக் கூடாது. பூண்டை நாம் சமைக்கும் பொழுது தட்டியோ அல்லது நறுக்கிய தான் சேர்ப்பது வழக்கம். அப்படி பூண்டை நசுக்கி சேர்க்கும் பொழுது அதில் இருக்கும் ஒரு விதமான காரத்தன்மை உள்ள வேதிப் பொருள் வெளியேறி நமக்கு தீமைகளையும் உண்டு பண்ணக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே பூண்டை நறுக்கி அல்லது நசுக்கிய பின்பு பத்து நிமிடமாவது அப்படியே காற்று படும்படி விட்டுவிட வேண்டும்.
பூண்டில் காற்று பட்டு அதில் நன்மைகளை தரக்கூடிய ஒரு வகையான வேதிப் பொருளை வெளியிட செய்யும். அதன் பிறகு சமையலில் சேர்க்கும் பொழுது அந்த சமையல் ஆரோக்கியமானதாக மாறும். எனவே இனியும் பூண்டை சமைக்கும் பொழுது அவசர அவசரமாக தட்டி உடனே சமைப்பதை நிறுத்தி விடவும். பூண்டை நறுக்கி வைத்து விட்டு மற்ற வேலைகளை எல்லாம் முடித்து அதன் பின்பு சமையலில் சேர்த்து வரவும். இதனால் உங்களுடைய ஆரோக்கியம் மென்மேலும் சிறப்பாக இருக்கும்.