வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு இயற்கையான உடனடி தீர்வு! இத 1 டம்ளர் குடிச்சா, கெட்ட வாயு அனைத்தும் 10 நிமிடங்களில் வெளியேறிவிடும்.
அட, வெறும் கேஸ்டிக் பிராப்ளம் தானே! என்று நினைத்து வாயுத்தொல்லையை அலட்சியப்படுத்தக் கூடாது. நம்முடைய உடம்பில் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு அடித்தளத்தை விதைப்பதே, இந்த வாயு தொல்லை தான். முதலில் வாயுத்தொல்லை எதனால் வருகிறது? வாயுத் தொல்லையினால் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன? வாயுவை நம் உடலில் இருந்து வெளியேற்ற இயற்கையான கை வைத்தியம் என்ன? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஒருவருடைய உடலில் வாயுத் தொல்லை அதிகமாகிவிட்டது என்றால், முதலில் அவர்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படும். அதன் பின்பு, வயிறு உப்புசம் ஏற்படும். இதன் மூலம் ஜீரண சக்தி குறைய ஆரம்பிக்கும். நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களுடைய ஊட்டச்சத்து முழுமையாக ரத்தத்தில் போய் சேராது. இதனால் மூட்டுவலி, கை கால் வலி, பலவீனம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வருவதற்கு முதல் காரணமே இந்த வாயுத் தொல்லை தான்.
வாயுத் தொல்லை வராமல் இருக்க வேண்டுமென்றால், மூன்று வேலையும் நேரம் தவறாமல் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை அதிகமாக உடல் உழைப்பை கொண்டவர்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது நல்லது. நேரம் தவிர்த்து, இரண்டு வேளை சாப்பாட்டை மொத்தமாக சேர்த்து, சாப்பிடுபவர்களுக்கு கட்டாயம் இந்த வாயு பிரச்சனை வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதோடு சேர்த்து நம் உடலிலிருந்து வாயுவானது வெளியேற்றப்படும் சமயங்களில் அதை நாம் அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக ஆசன வாய் வழியாக வாயு வெளியேறும். ஏப்பம், தும்மல், இருமல், பெருமூச்சு, கொட்டாவி, இவை வந்தால் அதை அடக்கிக் கொள்ளாமல் நன்றாக வெளியே விட்டு விடுங்கள். இயற்கை உபாதைகளை அடக்கி வைத்துக் கொள்வது நம்முடைய உடலுக்கு பேராபத்தை ஏற்படுத்திவிடும்.
சரிங்க, இப்ப வைத்தியத்தை பார்த்திடலாம். தினமும் காலை உணவை முடித்துவிட்டு, அதன் பின்பாக, 11 மணி அளவில் ஒரு டம்ளர் நீர் மோரில், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து குடிக்க வேண்டும். வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் புதினா சட்னி, கொத்தமல்லி சட்னியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புதினா கொத்தமல்லி சட்னியோடு, தேங்காய் சேர்த்து சட்னி அறைக்கக்கூடாது.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள் அதில், 1/2 – ஸ்பூன் வெந்தயம், 1/2 – ஸ்பூன் சீரகம், 1/2 – ஸ்பூன் ஓமம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை தண்ணீரில் இந்த பொருட்கள் அனைத்தும் வெந்ததும், இறுதியாக 2 சிட்டிகை பெருங்காயத்தூள், 2 சிட்டிகை உப்பு சேர்த்து வடிகட்டிய அந்த நீரை குடித்து விடவேண்டும்.
இந்த தண்ணீரை உணவு சாப்பிட்ட பின்பு, 1/2 மணி நேரம் கழித்து குடிக்கலாம். உடலில் இருக்கக்கூடிய வாயு அனைத்தையும் வெளியேற்றக் கூடிய சக்தி இந்த ஒரு டம்ளர் தண்ணீரில் அடங்கியுள்ளது. இந்த டிப்ஸ ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! இயற்கை உபாதைகளை எக்காரணத்தைக் கொண்டும் கட்டுப்படுத்த வேண்டாம் இந்த கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
.