Advertisement

இந்த எண்ணெயை 1 ஸ்பூன் தேய்த்தாலே போதும். ஆயுசுக்கும் உங்க முடி நரைக்கவே நரைக்காது. கருகரு முடியை பெற சுலபமான டிப்ஸ்.

இந்த எண்ணெயை 1 ஸ்பூன் தேய்த்தாலே போதும். ஆயுசுக்கும் உங்க முடி நரைக்கவே நரைக்காது. கருகரு முடியை பெற சுலபமான டிப்ஸ்.

நம்மை, பார்ப்பவர்கள் கண்ணுக்கு நாம் அழகாக தெரிய வேண்டும் என்றுதான் நம்மில் பலபேர் நினைப்போம். நம்முடைய அழகிற்கு மேலும் அழகு சேர்க்க நம்முடைய முடிக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அந்த முடி கருப்பாகவும் அழகாகவும் இருந்தால், நம்முடைய அழகு மேலும் அழகாக இருக்கும். இதற்காக முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் இல்லாதவர்கள் எல்லாம் அழகு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் கரு கரு முடி ஒரு தனி அழகை கொடுக்கும் என்று சொல்லலாம் அல்லவா? நிறைய பேருக்கு சிறிய வயதிலேயே இளநரை பிரச்சனை வந்துவிடும். சில பேருக்கு 30 வயதைக் கடந்ததும் முடி நரைக்க தொடங்கிவிடும். வாழ்நாள் முழுவதும் நம்முடைய தலையில் இருக்கும் ஒரு முடிகூட நரைக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கான ஒரு ரெமிடியைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

hair2

இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், நெல்லிக்காய் எண்ணெய் 2 ஸ்பூன், பிருங்கராஜ் தைலம் 2 ஸ்பூன். (பிருங்கராஜ் தைலம் என்பது கரிசலாங்கண்ணி இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்.) ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த மூன்று பொருட்களையும் சம அளவு போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு நீங்கள் இரவு தூங்கும் போது இந்த எண்ணெயை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அது உங்கள் தலையில் அப்படியே ஊறட்டும். மறுநாள் காலை தலைக்குக் குளித்து விடலாம்.

வாரத்தில் மூன்று நாட்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். காலையில் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொண்டு, மாலையிலும் தலைக்கு குளிக்கலாம் அது உங்களுடைய இஷ்டம்தான். இந்த எண்ணெய் கொஞ்சம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. உங்களுடைய உடல் குளிர்ச்சியாக இருந்தால், எண்ணெயை தலையில் தடவுவதற்கு முன்பு வெதுவெதுப்பாக சூடு பண்ணி வெதுவெதுப்பாக தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

நரைமுடி வந்தவர்கள் இதை பயன்படுத்தி வரும் பட்சத்தில் படிப்படியாக நரைமுடி கருமையாக மாறும். நரை முடி இல்லாதவர்கள் இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நரை முடியை வராமல் தடுக்கும் சக்தி இந்த எண்ணெய்க்கு உண்டு.

இயற்கையான பொருட்களை பயன்படுத்தி தான் நாம் இந்த குறிப்பை பின்பற்ற போகின்றோம். இதனால் பக்க விளைவுகள் ஏதேனும் வந்து விடுமோ என்ற பயமும் உங்களுக்கு தேவையில்லை. கஷ்டப்பட்டு பொருட்களை வாங்கி அரைத்து காய்ச்ச வேண்டும் என்ற வேலையும் உங்களுக்கு கிடையாது. இந்த எண்ணெய் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கின்றது.

bringaraj

இதோடு சேர்த்து பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் தினம்தோறும் உங்களது சாப்பாட்டில் கருவேப்பிலை பொடியை சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். முடி வளர்ச்சிக்கு கருவேப்பிலையை உணவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உணவில் சத்தான காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளை, சேர்த்துக் கொள்வதும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். இவை எல்லாவற்றையும் விட உங்களது சருமமும் முடியும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீரை பருக வேண்டும்.

hair

இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களையும் பின்பற்றி மேலே சொல்லப்பட்டிருக்கும் எண்ணெயையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்களது இளமையும் அழகும் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நிரந்தரமாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோமா?