நீங்க கருப்பா இருந்தாலும், மாநிறமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், உங்கள் முகம் பலபலன்னு 10 நாளில் பளிங்கு கல் போல ஜொலிக்கும். கிளாசி லுக்கிற்க்கு சூப்பர் டிப்ஸ் இது. மிஸ் பண்ணாதீங்க.
நிறைய கேரளா கேல்ஸ் இந்த டிப்ஸ் யூஸ் பண்ணிட்டு வராங்க. இந்த டிப்ஸ்ல நாம முட்டையோட வெள்ளைக்கருவை பயன்படுத்த போகின்றோம். நீங்கள் முழு சைவம், அப்படி இல்லை, முட்டை வாடை உங்களுக்குப் பிடிக்காது என்பவர்கள் இந்த குறிப்பினை தவிர்த்துக் கொள்ளலாம். (முட்டையின் வெள்ளை கருவில் வாடை அடிக்காது. மஞ்சள் கருவை நாம் பயன்படுத்த போவதில்லை. அதனால் கெட்ட வாடை வருவதற்கு சான்சே இல்ல.) ஆனால் இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி தினமும் குளித்தால், கட்டாயம் பல பலனு மின்னுவீங்க. இதை போட்டு குளித்தால், முட்டை வாடை எல்லாம் கட்டாயம் வீசாதுங்க! நம்பிக்கை இருந்தா ட்ரை பண்ணி பாருங்க. இல்லன ஸ்கிப் பண்ணிடுங்க.
100 கிராம் அளவு பாசிப்பயறுக்கு இரண்டு முட்டைகள் தேவைப்படும். முதலில், அந்த இரண்டு முட்டைகளில் இருந்து வெறும் வெள்ளைக் கருவை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். முட்டை ஓட்டை மேலே, சின்னதாக ஓட்டைப் போட்டு ஒரு கிண்ணத்தில் வடித்தீர்கள் என்றால் வெள்ளைக்கரு மட்டும் தனியாக வந்துவிடும்.
ஒரு அகலமான தாம்புல தட்டில் முதலில் பச்சைபயிறை பரவலாக போட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு தயாராக இருக்கும் இந்த வெள்ளை முட்டை கருவை பச்சை பயிறோடு சேர்த்து, நன்றாக கலந்து விடவேண்டும். பச்சைப்பயிறு முழுவதும் இந்த வெள்ளைக்கரு ஒட்டுவதற்கு கொஞ்சம் சிரமம்தான். நன்றாக உங்களது கைகளைக் கொண்டும் கலக்கலாம். கையை வைக்க விருப்பம் இல்லாதவர்கள், ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டு விடுங்கள்.
அதன் பின்பு இந்த தட்டை வெய்யிலில் வைத்து விடுங்கள். அந்த வெள்ளை கருவானது நன்றாக ஈரப்பதம் போகும் வரை வெய்யிலில் காய வேண்டும். முதல்நாள் மேல்பக்கம் நன்றாக காய்ந்து விடும். இரண்டாவது நாள் தட்டில் பச்சைப்பயிறு ஒட்டியிருக்கும். அதை கரண்டியாலோ, கத்தியாலோ பெயர்த்து எடுத்து, திருப்பிப் போட்டு மீண்டும் காயவைக்க வேண்டும்.
உங்களுடைய ஊரில் நன்றாக வெயில் காயும் போது இத ட்ரை பண்ணி பாருங்க! முட்டை நன்றாக காய வில்லை என்றால் கொஞ்சம் வாடை அடிக்க ஆரம்பித்துவிடும். நன்றாக உலர்ந்ததும் இந்த பச்சை பயிறை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தயார் செய்த இந்த குளியல் பொடி, ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். ஈர கைபடாமல் ஸ்பூன் கொண்டு அள்ளி கொஞ்சமாக, குளியல் அறைக்கு எடுத்துச் செல்லவேண்டும். மொத்தமாக குளியல் அறையில் வைத்தால் ஈரம் பட்டு கெட்டுப்போய் விடும்.
உங்களுடைய உடல் முழுவதும் இந்த பவுடரை தேய்த்துக் குளிக்கலாம். உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் உங்கள் சருமம் சீக்கிரத்தில் சுருங்கவே சுருங்காது. உடலுக்கு தேவை இல்லை, முகத்திற்கு மட்டும் போதும் என்பவர்கள், முகத்திற்கு மட்டும் தேய்த்து குளிக்கலாம். 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து தேய்த்து குளித்தால் போதும்.
இந்த பவுடரை பயன்படுத்திய 10 நாட்களில் நீங்கள் எப்படி பலபலன்னு மாறப் போறீங்கன்னு மட்டும் பாருங்க. சூப்பர் ரிசல்ட் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் ட்ரை பண்ணி பாத்துக்கோங்க! அழகா இருக்கணும்னு நினைக்கிற உங்களுக்கு இந்த டிப்ஸ் ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். கட்டாயம் எல்லாரும் கேப்பாங்க, உங்க தோல் பளபளப்பா மாறி இருக்கே. அது எப்படி அப்படின்னு!