Advertisement

நெஞ்சில் கட்டியிருக்கும் எப்படிப்பட்ட சளியும் ஒரே நாளில் கரைந்துவிடும். பல நாட்களாக தீராமல் வரும் இருமலையும் சட்டென நிறுத்தும் சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு.

நெஞ்சில் கட்டியிருக்கும் எப்படிப்பட்ட சளியும் ஒரே நாளில் கரைந்துவிடும். பல நாட்களாக தீராமல் வரும் இருமலையும் சட்டென நிறுத்தும் சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு.

கொஞ்சம் மழைக்காலம் வந்து விட்டாலே போதும். நெஞ்சில் சளி கட்டி விடும். இருமல் பிரச்சனை ஆரம்பித்து விடும். இதற்கு மெடிக்கல் ஷாப்பில் சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை விட, இந்த ட்ப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க. உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாத ஒரு கசாயம் இது. இதை சாப்பிடும் பட்சத்தில் நம்முடைய உடலில் இருக்கும் சூடானது குறையும். நன்றாக பசி எடுக்கும். தீராத இருமல், நெஞ்சு சளி, காய்ச்சல், சுவாசப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அந்த ஒரு பொருள் என்ன? அதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும். என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அந்த காலத்தில் கை வைத்தியத்திற்க்காக பயன்படுத்தி வந்த பொருள் இது. நாட்டு மருந்து கடைகளில் இன்றும் கிடைக்கக்கூடிய பொருள் இது. அற்புதம் வாய்ந்த அந்த பொருள் என்னவென்றால், நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் பொருளின் பெயர் ‘சித்தரத்தை’. முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சிறிய துண்டு அளவு சித்தரத்தையை நன்றாக நசுக்கி போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு 10 மிளகுகளை தட்டிப் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்தால் 10 துளசி இலை, 10 கற்பூரவள்ளி இலையையும் அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இது கொஞ்சம் காரத் தன்மை கொண்டதால், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டு கொதிக்க விடுங்கள்.(சித்தரத்தை, மிளகு, கற்பூரவள்ளி இலை, துளசி இலை, நாட்டு சர்க்கரை, 5 பொருட்கள் தான்.) மிதமான தீயில் அடுப்பை வைத்து விட்டு இந்த 2 டம்ளர் தண்ணீர், 1 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை சுண்ட விட வேண்டும். இதை ஒரு டம்ளரில் வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போதே குடித்துவிடுங்கள்.

Milagu benefits in Tamil

அவ்வளவு தான். உங்களுக்கு இருக்கும் சளி பிரச்சனை அடுத்த நாள் காலையிலேயே குறைய ஆரம்பித்து விடும். சளி, மலம் வழியாக வெளியேற தொடங்கும். இதை உங்களால் உணர முடியும். வாரத்தில் 3 நாட்கள் இதைக் குடிக்கலாம். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த கசாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.


மூன்று வயதிற்கு மேல் பத்து வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளாக இருந்தால் 4 லிருந்து 5 சங்கடை அளவு இந்த தண்ணீரை கொடுக்கலாம். 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 1/4 கப் அளவு கொடுக்கலாம். பெரியவர்களாக இருந்தால் தாராளமாக 1 டம்ளர் இந்த கசாயத்தை கொடுப்பதில் தவறு ஒன்றும் கிடையாது.

kasayam

ட்ரை பண்ணி பாருங்க. அடுத்ததாக, வாய் ஓயாமல் சிலபேருக்கு இருமல் வரும். அந்த சமயத்தில் இந்த சித்தரத்தையை எடுத்து உங்களது கடவா பல்லில் வைத்து கடித்துக் கொள்ள வேண்டும். அதில் வரும் சாற்றை, அதாவது உமிழ் நீரை நாம் மெதுவாக விழுங்கி வந்தோம் என்றால், அந்த இருமல் சட்டென்று நிற்கும் என்பதும் குறிப்பிடத்தக்க வந்து. கொஞ்சம் காரணம் இருக்கத்தான் செய்யும். அதை சமாளித்து கொள்ளுங்கள் இருமல் போக வேண்டும் அல்லவா?