Advertisement

உங்கள் முடியின் நிறம் கருப்பா இல்லாம வேற நிறத்தில் இருக்கா? இது முடிக்கு ஆபத்து! 1 வாரத்தில் கருகருன்னு மாற இத மட்டும் செய்யுங்க போதும்!

உங்கள் முடியின் நிறம் கருப்பா இல்லாம வேற நிறத்தில் இருக்கா? இது முடிக்கு ஆபத்து! 1 வாரத்தில் கருகருன்னு மாற இத மட்டும் செய்யுங்க போதும்!

எல்லோருக்குமே கருமையான கூந்தல் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் நம்மை சுற்றி இருக்கும் சில விஷயங்களினால், உண்ணும் உணவினாலும் முடியின் நிறம் செம்பட்டையாக, அல்லது கருமை இழந்து காணப்படுகிறது. நல்ல கருகருவென்று இருந்தால் தான் முதலில் அதை ஆரோக்கியமான கூந்தல் என்று கூற முடியும். வெளிநாட்டவர்கள் எல்லாம் கருமையாக வைத்திருக்கிறார்களா என்ன? என்று கூறத் தேவையில்லை. அவர்களுடைய இயற்கை நிறமே அது தான்.

combing-hair

ஆனால் நம்மை பொறுத்தவரை நம்முடைய கூந்தல் இயற்கையான நிறம் சுத்தமான கருமை. கார்கூந்தல் என்கிற வார்த்தையே கவிக்கு அழகு. அத்தகைய அழகு நம்முடைய கூந்தலில் இல்லையே என்று புலம்புபவர்கள் இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் 1 வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் கருகருவென்று கார்மேகம் போன்று மாறிவிடும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை இனி இப்பதிவில் பார்ப்போம்.

சிலருக்கு முடியின் நிறம் கருமை போய் பிரவுன் ஆக மாறி இருக்கும். இதை செம்பட்டை என்பார்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உங்களுடைய கூந்தல் வளர்ச்சிக்கு ஆபத்து தான் நல்லதல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நிறம் மாறி கருகருவென வளர என்ன செய்யலாம்?

free-hair

முடி வறண்டு போய் செம்பட்டையாக இருந்தால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு முடியின் வேர்க்கால்களில் படும்படி ஆக நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் பொழுதே உங்களுக்கு மண்டை ஓட்டில் இருக்கும் தோல் பகுதியில் வலிக்க ஆரம்பிக்கும். இப்படி உங்களுக்கு வலி இருந்தால் முடியின் வேர் கால்களுக்கு பலம் இல்லை என்பது தான் அர்த்தம். மசாஜ் செய்தபின் ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு அலசி விடலாம். இப்படி செய்ய விரைவாகவே செம்பட்டை முடி கருமை அடைந்து விடும்.

உங்களுடைய முடி கருகருவென்று அசைந்தாட காலை உணவில் தோசை சாப்பிடும் பொழுது செம்பருத்தி பூ சேர்த்து தோசை வார்க்கலாம். செம்பருத்தி பூ தோசை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொண்டு அடிக்கடி காலை உணவில் சேர்த்து வந்தால் உங்களுடைய முடியின் நிறம் கருமையாக மாறும்.

sembaruthi-poo-dosai

பொதுவாகவே செம்பட்டையாக இருக்கும் கூந்தல் உடையவர்கள் வறண்ட கேசத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அடிக்கடி தலையில் எண்ணெய் தேய்க்காமல் அப்படியே விட்டுவிடுவதால் காலப்போக்கில் முடியின் நிறம் கருமை இழந்து, பலமும் இழந்து போய் விடுகிறது. நீங்கள் தினமும் தலைக்கு குளிக்கும் பொழுது தேங்காய்ப்பால் தடவி ஊற வைத்து பின் குளித்தால் முடியும் பலம் பெறும். நாளடைவில் கருமையும் திரும்ப வரும்.

coconut-milk-for-hair

ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்த பின் தலைக்கு குளித்து வந்தால் முடியின் நிறம் மாறும். நரை முடி கூட கருமை அடைந்து விடும். மரிக்கொழுந்து, நில ஆவாரை இந்த இரண்டு மூலிகை இலையையும் அரைத்து சாறெடுத்து அரை மணி நேரம் அளவிற்கு தலையில் ஊற வைத்து பின்னர் தலைமுடியை அலசி வந்தால் இழந்த பொலிவு மீண்டும் வரும். கருகருவென கார்மேகம் போல் கார்கூந்தல் அசைந்தாடும். நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பயன் அடையுங்கள்.