பல் வலி, பல் சொத்தை, பூச்சிகளால் ஏற்படும் பல் அரிப்பு இவைகளுக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு தரும், வீட்டு வைத்தியம். உங்கள் சமையலறையில் இந்த 1 பொருள் இருக்கா?
நம்முடைய உடல் உறுப்புகளில், எந்த பாகத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்கான ட்ரீட்மென்டை கட்டாயம் எடுத்துக் கொள்வோம். ஆனால், பல் பிரச்சனை என்றால் மட்டும், அதை கவனிப்பதே கிடையாது. பல் தானே! அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடுவோம். சிறிய அளவில் ஆரம்பிக்கும் இந்தப் பல் பிரச்சனை, அந்த பல்லை பிடுங்கி எடுக்கும் அளவிற்கு பெரியதாக மாறிவிடும். உங்களுடைய பற்களிலும் பிரச்சினை உள்ளதா? பல் சொத்தை, பல் புழு, மஞ்சள் கரை, புகையிலை கரை, இவற்றால் அவதிப்பட்டு வருகிறீர்களா? உங்களுக்கான ஒரு சின்ன கை வைத்தியம், ஆனால் பெரிய ரிசல்ட் தரும் ஒரு கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நம் எல்லோரது வீட்டிலும் கட்டாயம் பூண்டு இருக்கும். அந்த பூண்டிலிருந்து, 4 பல் பூண்டை எடுத்து தோலை உரித்துக் கொள்ளுங்கள். கேரட் துருவலில், இந்த பூண்டை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். துருவிய இந்த பூண்டு விழுதுடன், கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். உங்களிடம் கடுகு எண்ணெய் இருந்தால், 1/2 ஸ்பூன் அளவு, இந்த விழுதோடு கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். கடுகு எண்ணெய் இல்லாதவர்கள் அதை 1/2 ஸ்பூன் அளவு தக்காளி சாறு பிழிந்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
அவ்வளவு தாங்க! இந்த விழுதை ஸ்பூனில் நன்றாக கலந்து விட்டு, உங்களது ஆள்காட்டி விரலில் அந்த விழுதிலிருந்து, ஒரு பின்ச் அளவு எடுத்து, எங்கெல்லாம் உங்கள் பல்லில் பிரச்சனை இருக்கின்றதோ, அந்த இடத்தில் எல்லாம் நன்றாக தடவி வர வேண்டும். கடவா பல்லில் சொத்தை இருந்தால், சொத்தை இருக்கும் அந்த உள் பக்கத்திலேயே இந்த விழுதை தடவலாம். காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை, இரண்டு முறை இந்த விழுதை உங்களது பல்லில் தடவ மீண்டும்.
உங்களது பல் மஞ்சள் நிறமாக மாறி, தேவையற்ற கறைகள் படிந்து இருந்தாலும்கூட, இந்த விழுதை உங்களது விரல்களால் தொட்டு அந்தப் பல்லில், மென்மையாக தேய்த்து தர, கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் நிறம், வெள்ளை நிறத்தில் மாறும். ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு குறையும். பல் புழு சுத்தமாக அழிந்துவிடும். சொத்தைப் பல்லில் இருக்கக்கூடிய கிருமிகள் தானாக வெளியேறும்.
ஒரு வாரத்திற்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த கை வைத்தியத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் அளிக்கும். இந்த வைத்தியத்தை செய்து, உங்களது பல் பிரச்சனை தீரவில்லை என்றால் உடனடியாக பல் மருத்துவரை அணுகுவதுதான் சரியான வழி. நம்மில் நிறைய பேர் பல் பிரச்சனையை அலட்சிய படுத்துகின்றோம். ஆனால் நம் உடல் உறுப்புகளில் மிக மிக அவசியமான பொறுப்புகளில் நம்முடைய பல்லும் ஒன்று என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.
சாப்பிட்ட பின்பு வாயை கொப்பளித்து சுத்தம் செய்வது, இரவு தூங்க செல்வதற்கு முன்பாக பிரஷ் செய்வது, இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது, இவை அனைத்துமே நம் பல்லை பாதுகாப்பாக பராமரிக்க கூடிய வழி முறைகள்தான். பல் பிரச்சனைதானே, பல் வலி தானே, என்று யாரும் இனி அலட்சியப்படுத்தாதீர்கள். சில பல் பிரச்னைகள் கேன்சர் போன்ற பெரிய பிரச்சினைகளை உருவாக்கும் அளவிற்கு கூட பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
.