மாதம் 1 முறை இதை குடித்தால் நாட்பட்ட கழிவுகளும் உடலிலிருந்து வெளியேறி உடல் சுத்தமாகும் தெரியுமா?
இன்றைய நவீன யுகத்தினருற்கு மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனை என்றால் அது மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் தொந்தரவு இருப்பவர்கள் நாளடைவில் மற்ற பல்வேறு நோய்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். உடலில் இருந்து கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருந்தால், உடலானது வேறு வேறு பிரச்சனைகளை கொடுக்க ஆரம்பித்துவிடும். ஆரோக்கியமான உடலைக் கொண்டவர்கள் அதிகாலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன்களை முடித்து விட வேண்டும். இப்படி செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது அர்த்தமாகிறது. எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட சுலபமாக எந்த வழியை கையாள்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதனால் வரும் பின் விளைவுகள் மிகவும் மோசமானதாக அமைந்து விடுகிறது. உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாவிட்டால் ரத்தம் சுத்திகரிப்பு செய்வதில் பாதிப்புகள் உண்டாகிறது. உடலும் சோர்ந்து போய்விடுகிறது. ஒருவர் சரியான அளவில் உணவை எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
நீங்கள் தொடர்ந்து அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் உங்களுடைய குடலும் அதற்கேற்றாற் போல் விரிவடைந்து விடும். அதன் பிறகு நீங்கள் குறைவாக சாப்பிட்டால் பசி உணர்வு ஏற்படும். அதனால் அதிகம் சாப்பிட்டு விரைவிலேயே உடல் பருமன் அடைந்து விடுகிறார்கள். அதே போல் தான் தொடர்ந்து குறைவாக உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கும், குடலானது சுருங்கி விடும். அதற்கு பிறகு நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட நினைத்தாலும் உங்களால் சாப்பிடவே முடியாது. வயிறு நிரம்பியது போல் ஒரு உணர்வு ஏற்படும்.
இதனால் தான் உணவு சரியான அளவில் இருப்பது அவசியமாகிறது. மலச்சிக்கலுக்கு முறையற்ற உணவு பழக்கம் முதன்மை காரணமாக கூறப்படுகிறது. அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட உணவிற்கும், இப்பொழுது நாம் சாப்பிடும் உணவிற்கும் நிறையவே மாற்றங்கள் உள்ளன என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த உணவு முறை மாற்றத்தின் விளைவாக நாம் ஆரோக்கிய சீர்கேட்டை பரிசாக வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான மனிதன் சரிவிகித உணவு எடுத்துக் கொண்டால், அவன் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ முடியும். மலச்சிக்கலால் பெரும்பாலானோர் தாங்க முடியாத வயிற்று வலியை சந்தித்திருப்பார்கள். உணவு முறை மாற்றம் மட்டுமல்ல, முறையற்ற உறக்கமும் இதற்கு முக்கிய காரணம். சரியான நேரத்தில் தூங்க முடியாமல் இருப்பவர்கள், இந்த பிரச்சனையை சந்திப்பார்கள். உணவு எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு உறக்கமும் முக்கியம். உறக்கமின்மை நாம் சாப்பிடும் நேரத்தையும், உணவையும் முறையற்றதாக மாற்றி விடுகிறது.
இந்த பிரச்சனை எல்லாம் தீர்வதற்கு நல்ல தீர்வு உண்டு. நம் உடலில் இருக்கும் நாட்பட்ட கழிவுகளை கூட சுத்தம் செய்து உடலை புத்துணர்வுடன், சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வதற்கு நிச்சயமாக பயன் தரும். மாதம் ஒருமுறை இதை செய்வது மிகவும் நல்லது. முதலில் தேன் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில் ஒரு டீஸ்பூன் கலந்து காலையில் நீங்கள் எழுந்தவுடன் முதல் வேலையாக வெறும் வயிற்றில் இதனைக் குடித்து விட வேண்டும். இதை செய்யும் பொழுது அதிகாலையில் எழுவது மிக மிக நல்லது. காலையில் ஆறு மணிக்குள் இதை செய்து விடுவது கூடுதல் பலன் தரும்.
இதனால் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் சுத்தமாக வெளியேறிவிடும். நன்கு பசி எடுக்கத் துவங்கும். ஆரோக்கியமான, குளிர்ச்சியான உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சட்டென உணவு பழக்கத்தை மாற்றி விடக்கூடாது. உங்கள் உடல் உஷ்ண நிலைக்கு ஏற்ப தான் உணவை எடுத்துக் கொள்வது நல்லது. உடல், அழுத்தமின்றி இலேசாக உணர்வீர்கள். எப்போதும் இல்லாத சுறுசுறுப்பு உங்களிடம் தொற்றிக் கொள்வதை நீங்களும் காண முடியும். உற்சாகமான மனநிலையே ஒரு நாளை நமக்கு சிறப்பாக மாற்றித் தருகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை தீர்வதற்கு இந்த எளிய வழிமுறையை பின்பற்றி பயன் பெறுங்கள்.