மஞ்சள் கறை படிந்த பற்களை பளிச்சென்று வெள்ளையாக்க, வெறும் 2 நிமிடமும், சமையலறையில் இருக்கும் 3 பொருட்களுமே போதுமே?
ஒருவருடைய முகம் அழகாக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் தங்களுடைய பற்கள் வெளியில் தெரியும்படி சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பற்களை வெளியில் காண்பித்து, வாயை மூடிக் கொள்ளாமல் சிரிக்க வேண்டும் என்றால், நம்முடைய பற்களின் நிறம் வெண்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் சிரிப்பதற்கு தைரியமே வரும், என்று கூட சொல்லலாம். உங்களுடைய பல் மஞ்சள் நிறமாக உள்ளதா? டீ கறை படிந்துள்ளதா? வெற்றிலை பாக்கு கரை படிந்துள்ளதா? அல்லது மற்ற சில பழக்கவழக்கங்களினால் கறை படிந்து இருந்தாலும் அந்தக் குறையை போக்குவதற்கு சுலபமான ஒரு முறையைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நம்முடைய வாயில் இருக்கும் நச்சுக்களை அழிப்பதற்கு வாயில், துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும், மஞ்சள் கறையை போக்குவதற்கு இந்த மூன்று பிரச்சனைக்கும் சுலபமான தீர்வு, நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களுக்கு உண்டு. அந்த மூன்று பொருட்கள் என்னென்ன? அதை எப்படி பயன்படுத்த போகின்றோம்.
மஞ்சள் தூள், உப்பு, பேக்கிங் சோடா. இந்த 3 பொருட்கள் தான் அது. வாயில் உள்ள கிருமிகளை நச்சுக்களை அழிப்பதற்கு மஞ்சள்தூள் உதவிசெய்யும். துர்நாற்றம் வீசாமல் வாயை சுத்தப்படுத்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் கறையை நீக்க பேக்கிங் சோடா ஒரு சிறந்த பவுடர் என்று கூட சொல்லலாம். வெண்மை நிறத்தை கூட்டிக் தரக்கூடிய தன்மை இந்த பேக்கிங் சோடா விற்கு உண்டு.
முதலில் ஒரு சின்ன பௌலில் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன், அளவு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். தேவைப்படுபவர்கள் இதை பல்பொடி போலவே பிரஷ்ஷில் தொட்டு பல் தேய்த்துக் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால், உங்களது விரல்களில் தொட்டு ஈறுகளில் படாமல் பல்லில் அழுத்தம் கொடுத்து தேய்த்துக் கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும். எப்போதுமே உப்பை பல்லில் வைத்து தேய்க்கும் போது, ஈறுகளில் படாமல் பல்லில் வைத்துதான் தேய்க்கவேண்டும். அழுத்தம் கொடுத்து தேய்த்தால் ஈறுகள் டேமேஜ் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
அப்படி இல்லை என்றால், இதில் சிறிது தண்ணீரை விட்டு, நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து, அதை பிரஷ்ஷில் தொட்டோ, கை விரல்களால் தொட்டு கூட, தேய்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். வாரத்தில் 3 நாட்கள் இப்படி பல் தேய்த்து வாருங்கள். உங்கள் பல்லில் இருக்கக்கூடிய கரை படிப்படியாக ஒரே வாரத்தில் குறைந்திருக்கும். நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். ஒரு வாரத்தோடு நிறுத்தி விடாமல், தொடர்ந்து செய்து வந்தால் பல் மஞ்சள் கறை பிடிக்காமல் இருக்கும்.
வாய் துர்நாற்றம் நீங்க, அடிக்கடி புதினா தழைகளை மெல்லும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும். வாயை வெண்ணீரில் உப்பு போட்டு, நன்றாக அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் படிப்படியாக குறையும். வாயில் உள்ள தேவையற்ற கிருமிகளின் மூலம் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். வாய் துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால் உடனடியாக பல் மருத்துவரை அணுகுவது நல்லது.