Advertisement

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்கள் போதுமே! 10 நாட்களில் கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையத்தை காணாமல் ஆக்கி விடலாம்.

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்கள் போதுமே! 10 நாட்களில் கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையத்தை காணாமல் ஆக்கி விடலாம்.

நிறைய பேருக்கு முக அழகை கெடுப்பது கண்ணுக்கு கீழே உள்ள கருவளையம். முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். ஆனால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் அவர்களது தோற்றத்தை நோயாளிகள் போல காண்பிக்கும். இதை சுலபமான முறையில் சீக்கிரமாகவே மறைய வைக்க ஒரு சூப்பர் டிப்ஸ்சைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்காக நிறைய செலவு கூட செய்ய வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும். அந்த பொருட்கள் என்னென்ன? அதை எப்படி பயன்படுத்தினால் சீக்கிரமே பலன் தெரியும் என்பதைப் பற்றி பார்த்து விடலாமா?

eye

முதலில் ஒரு சின்ன பவுல் எடுத்துக்கோங்க! அதில் தண்ணீர் – 1/2 கப், பால் – 1/2 கப், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், சுத்தமான தேன் – 2 ஸ்பூன், இவைகளை சேர்த்து நன்றாக கலக்கி விடவேண்டும். மஞ்சள்தூள் போய் அடியில் நின்று விடும். ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலக்கி விட்டு, ஐஸ் டிரேயில் நிரப்பி விடுங்கள். இதை ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் க்யூப் ஆக மாற்றி கொள்ளுங்கள். இந்த ஐஸ் கியூபை உங்களது கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் போதும். தினமும் 15 நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்யலாம்.

அதாவது தொடர்ந்து ஐஸ் கியூபை கண்களின் மேலேயே வைத்து விடாமல், ஒரு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ரெஸ்ட் கொடுங்கள். மீண்டும் ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். மீண்டும் 30 செகென்ஸ் ரெஸ்ட் கொடுங்கள். இப்படியாக விட்டுவிட்டு 15 இலிருந்து 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வர வேண்டும். பத்தே நாட்களில் கருவளையம் குறைவதை உங்களால் உணரமுடியும். தொடர்ந்து செய்து வாருங்கள் நல்ல பலன் உண்டு. கருவளையம் குறைய ஆரம்பித்த பின்பு, வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த ஐஸ் மசாஜ் செய்தால் போதும்.

Turmeric

அடுத்தபடியாக 1 ஸ்பூன் மஞ்சள் தூளில், 2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம். முகம் முழுவதும் தேவையில்லை என்று நினைப்பவர்கள் கண்ணை சுற்றி இருக்கக்கூடிய கரு வளையத்தில் மட்டும் கூட போட்டுவிட்டு, 20 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின்பு, குளிர்ந்த தண்ணீரை போட்டு கழுவி விடுங்கள். ஐஸ் மசாஜோடி சேர்ந்து, இந்த பேக்கை போடும்போது ரிசல்ட் இன்னும் அதிகமாகவே கிடைக்கும்.

இந்த ஃபேஸ் பேகானது சுருக்கத்தை சீக்கிரம் குறைக்கக் கூடியது. முகத்தில் சுருக்கம் அதிகமாக இருந்தாலும், கண்ணுக்கு கீழ்ப் பகுதிகளில் மட்டும் சில பேருக்கு சுருக்கம் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சுருக்கங்கள் சீக்கிரம் குறைவதற்காகத்தான் இந்த மஞ்சளும், தேனும் சேர்ந்த கலவை பயன்படுத்தப்படுகிறது.

ice-cubes

சீக்கிரமே உங்களுடைய கண்களும் முகமும் அழகாக மாற வேண்டும் என்றால் இந்த டிப்ஸை முயற்சி செய்து பாருங்க உங்களுடைய அழகு மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுத்து ஓய்வில்லாமல் இருந்து கொண்டே இருந்தாலும், கண்களுக்கு கீழே கருவளையம் விழுவதற்கு வாய்ப்புள்ளது.

eye2

நிறைய நேரம் கணினி முன்பாக, நீங்கள் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தால் தினம்தோறும் வெள்ளரிப் பிஞ்சுகளை, வட்ட வடிவத்தில் வெட்டி, இரவு தூங்கும் போது 15 நிமிடங்கள் கண்களின் மேலே வைத்துக் கொள்வது கண்களுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். அடிக்கடி கைபேசி பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை தவிர்த்துக் கொள்வது நல்லது. கண்கள் மிகவும் நாசுக்கானது அதை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் நம்முடைய கடமை.