Advertisement

3 நாட்களில் குதிகால் வெடிப்பு முழுமையாக காணாமல் போய்விடும். அழகான பாதங்கள் உங்களுக்கு வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க!

3 நாட்களில் குதிகால் வெடிப்பு முழுமையாக காணாமல் போய்விடும். அழகான பாதங்கள் உங்களுக்கு வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க!

நிறைய பேருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், பாதங்களில் அழகு இருக்காது அல்லது வேறு ஏதாவது தோல் பிரச்சனையின் மூலம் பின்னங்கால் வெடிப்பு விட்டு இருந்தாலும், அதை விரைவாக சரிசெய்ய நிரந்தர தீர்வை கொடுக்கும் ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒருவர் முழுமையாக அழகாக இருக்க வேண்டும் என்றால், தலை முதல் பாதம் வரை அழகு என்பது ஆடம்பரமாக இருக்க கூடாது. அதே சமயம் அழகைக் குறைக்கும் அளவிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது. நம்முடைய அழகை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு பாத அழகு ரொம்பவும் முக்கியம்.

foot-fingers1

அதற்காக ஆண்களுக்கு பாத அழகு முக்கியம் இல்லை என்று சொல்ல வரவில்லை. அழகு என்றால் அதில் பெண்களுக்கு ஒருபடி அதிகமான முக்கியத்துவம் உள்ளதல்லவா? சரி குறிப்புக்கு செல்லலாம். ஒரு சிறிய பௌலில் வெள்ளைநிற டூத் பேஸ்ட் – 1 ஸ்பூன், தக்காளிப் பழச்சாறு – 1 ஸ்பூன், வாசலின் (vaseline) – 1/2 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு – 1/2 ஸ்பூன், இந்த 4 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜெல் போல தயாரித்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, உங்களது பாதங்களை வெந்நீரில் சுத்தமாக கழுவிவிட்டு, பாதங்களில் எங்கெல்லாம் வெடிப்பு இருக்கின்றதோ அந்த இடத்தில் இந்த க்ரீமை முழுமையாக அப்ளை செய்து விடுங்கள்.

1/2 மணி நேரம் இந்த ஜெல் காலில் நன்றாக ஆறிய பின்பு, தூங்கச் செல்ல வேண்டும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து வெதுவெதுப்பான நீரில் முதலில் க்ரீமை சுத்தமாக கழுவி விடுங்கள். அடுத்தபடியாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு, அந்தத் தண்ணீரை பக்கெட்டில் ஊற்றி உங்களது கால்களை ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் உப்பு தண்ணீரில் ஊற விட வேண்டும்.

foot

அதன்பின்பு ஸ்மூத்தாக இருக்கும் பிரஷ் அல்லது ஸ்மூத்தாக இருக்கும் நார் கொண்டு பாதங்களை நன்றாக தேய்த்து அதாவது வெடிப்பு இருக்கும் இடங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்பு ஒரு காட்டன் துணியை வைத்து மெதுவாக பாதங்களை துடைத்து விடுங்கள்.

வாரத்தில் 3 நாட்கள் இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய பாதங்களில் உள்ள வெடிப்புகள் விரைவாக மறைய தொடங்கும். மீண்டும் மீண்டும் வெடிப்பு வராது. பக்கவிளைவுகளும் ஏற்படாது. அழகான பாதங்களை விரும்புபவர்கள் இந்த டிப்ஸ் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! நல்ல ரிசல்ட் கொடுத்தால் உங்களது பாதங்களும் அழகாக மாறும்.