முகத்தில் இருக்கும் கரும் திட்டுகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சுலபமாக, சில நாட்களிலேயே எப்படி நீக்குவது? சூப்பரான 5 டிப்ஸ் உங்களுக்காக!
பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் முகத்தில் கருந் திட்டுக்களோ, கருநிற மங்கோ அல்லது கருப்பு நிறப் புள்ளிகளோ இருந்தால் அது அவர்களுடைய அழகை நிச்சயம் பாதிக்கும். கலையாக இருக்கும் முகத்தில் கூட, களங்கம் இருந்தால், அவர்களுடைய அழகு வெளியே தெரியாமல் போய்விடும். ஆகவே, உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய பிக்மெண்டேஷனை இயற்கையான முறையில் சுலபமாக, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி நீக்கலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான 5 டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எது சவுகரியமாக இருக்கின்றதோ அதை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வரலாம்.
முதலில் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி விட்டாலே, முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனையில் பாதி தீர்ந்துவிடும். ஒரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணிரை காய வைத்துக் கொள்ளுங்கள். அது ஆவி பிடிக்கும் அளவிற்கு சூடு இருக்க வேண்டும். அதாவது அந்த தண்ணீரில் இருந்து ஆவி வெளி வரவேண்டும்.
ஜலதோஷம் பிடித்தால் ஆவி பிடிப்பதுபோல் முகத்தை அந்த பாத்திரத்திற்கு மேல் வைத்து, போர்வையைப் போட்டு போர்த்திக் கொள்ளவேண்டும். நிச்சயம் பாத்திரத்திற்கும் உங்களுடைய முகத்திற்கும் ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். 10 நிமிடங்கள் முகம் அந்த ஆவியில் இருக்கலாம். அதன் பின்பாக முகத்தைத் துடைத்து விட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள்.
அடுத்து வேறு ஒரு சுடு தண்ணிரில், காட்டன் டவலை நனைத்து கொள்ள வேண்டும். அந்தத் துண்டு சூடு பொறுக்கும் அளவிற்கு இருக்கவேண்டும். கொதிக்க கொதிக்க எடுத்து அப்படியே முகத்தில் போட்டு கொள்ள வேண்டாம். ஜாக்கிரதையாக, முகம் சூடு பொறுக்கும் அளவிற்கு அந்த துண்டு இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்துவிட்டு, அதன் பின் அந்தத் துண்டை முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
காட்டன் துண்டின் சூடு முகத்தில் மூன்று நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் முழுமையாக நீங்கிவிடும். அந்த காட்டன் துணியை வைத்து முகத்தில் அப்படியே, மெல்லமாக அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்துவிடுங்கள். அவ்வளவு தான். வாரத்திற்கு இரண்டு நாள் இந்த முறையை பின்பற்றி வந்தாலே முகத்தில் கருந்திட்டுக்கள் என்று சொல்லப்படும் பிக்மெண்டேஷன் வராது.
நம்முடைய சருமத்தில் இருக்கும் பிக்மெண்டேஷனை நீக்குவதற்கு ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த வழி. முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு, ஆலிவ் ஆயிலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, உங்கள் கைகளால் தொட்டு அல்லது காட்டன் பஞ்சினால் தொட்டு முகம் முழுவதிலும் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த மசாஜை செய்து வந்தால் கருந்திட்டுக்கள் வெகுவாக குறைய ஆரம்பிக்கும்.
ஆலிவ் ஆயில் உங்கள் வீட்டில் இல்லை என்றால், வெள்ளரிக் காயையும், துளசியையும் பயன்படுத்தலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, ஒரு வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டுக் கொள்ளுங்கள். நான்கைந்து துளசி இலைகளை அதில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதை ஒரு வடிகட்டியால் வடிகட்டி எடுத்தால் சாறு கிடைக்கும். அந்த சாறை முகத்தில் வட்டவடிவில் அப்ளை செய்து, மசாஜ் செய்து 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். இறுதியாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். முகத்தில் இருக்கும் கரு நிறம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்.
வாரத்தில் ஒரு நாள் வெறும் எலுமிச்சை பழ சாரை கொண்டு முகத்தை 20 நிமிடங்கள் மசாஜ் செய்தாலும் கருந்திட்டுக்கள் வராது. கருந்திட்டுக்கள் இருந்தாலும் அது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இது மிக மிக சுலபமான ஒரு வழி. எலுமிச்சைப்பழம் உங்களுக்கு ஒத்துவரும் என்றால் இதை முயற்சி செய்து பார்க்கலாம். எலுமிச்சை பழம் உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால், அருகம்புல் சாரு, கருந்திட்டுக்களின் மேல் தினம்தோறும் தடவி வந்தாலும், கருந்திட்டுக்கள் சுலபமாக மறையும் முயற்சி செய்து பாருங்கள்.
இவ்வாறாக உங்களுக்கு இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பில் எதை வேண்டுமென்றாலும் பின்பற்றிக் கொள்ளலாம். செயற்கையான முறையில் முகத்தில் இருக்கும் கரும் திட்டுக்களை விரைவாக நீக்கி, பக்க விளைவுகளை வர வைத்துக் கொள்வதை விட, இயற்கையான முறையில் தொடர்ந்து இப்படிப்பட்ட முறைகளை பின்பற்றி வந்தால் கருந்திட்டுக்கள் படிப்படியாக நிரந்தரமாக குறையும் என்பதில் சந்தேகமே கிடையாது.