கர்ப்பமாக இருக்கும் போது மீன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஞாபக சக்தியை உடனே அதிகரிக்கும் 5 டிப்ஸ்?
முந்தியெல்லாம் ஒரு பொருளை ஓரிடத்தில் வைத்தால் அது அந்த இடத்தில் தான் இருக்கிறது என்பதை சட்டென சொல்லிவிட முடியும். ஆனால் சமீப காலமாக நேற்று வைத்த பொருள் கூட எங்கு வைத்தோம் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கும். இதற்கு காரணம் நினைவாற்றல் குறைவது ஆகும். இவை இந்த நவீன காலத்தில் பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது வேதனைக்குரிய விஷயம் தான். ஒரு குழந்தை சிசுவாக இருக்கும் பொழுதே அதனுடைய மூளை வளர்ச்சி சிறப்பாக இருந்துவிட்டால் அந்த குழந்தை புத்திசாலித்தனத்துடன் இருக்கும். இதற்கு கருவை சுமக்கும் தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்? ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் சில உணவுப் பொருட்கள் என்னென்ன? அதைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ஞாபகசக்தி இழப்பதற்கு மிக முக்கிய காரணம் மூளை நரம்புகள் சோர்வடைவது தான். இதற்கு வயது முதிர்ச்சியும், தேவையான ஊட்டச்சத்து இல்லாததாலும், மன அழுத்தத்துடன் இருப்பதாலும் ஏற்பட்டு விடுகிறது. மூளை நரம்புகள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகத்துடன் இருக்க போஷாக்கான உணவுகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பமான பெண்கள் அதிக அளவு மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
கர்ப்பமான பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் போஷாக்கு நிறைந்ததாக இருந்தால் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். அவ்வகையில் அதிக அளவு மீன் உணவை எடுத்துக் கொள்ளும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மீன் உணவில் இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். மூளை வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மீன் உணவில் அதிகம் இருப்பதால் இதனை அதிக அளவு ஆரோக்கியமான முறையில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வதால் பிறக்கும் குழந்தை புத்திக்கூர்மையுடன் இருக்கும்.
சரி அப்போது நம்முடைய தாய்மார்கள் விட்டுவிட்டார்கள். மீன் உணவை எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது ஞாபகத் திறன் குறைந்து விடுகிறது. இனி என்ன செய்யலாம்? அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை பச்சை காய்கறிகள், கீரைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. உண்மையில் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறி மற்றும் கீரைகளுக்கு ஞாபக சக்தியை தூண்டும் ஆற்றல் உள்ளது.
1. பச்சையாக இருக்கும் பசலைக்கீரை, ப்ரோக்கோலி போன்றவையில் அதிக அளவு விட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் இருப்பதால் மூளைத் திறனை அதிகரிக்க செய்து ஞாபக மறதியை குறைக்க செய்யும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
2. மனித உடலில் மட்டுமல்லாமல் மூளையிலும் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் இருக்கிறது. அதிகம் தண்ணீர் பருகாதவர்களுக்கு மூளையில் வறட்சி ஏற்பட்டு நினைவாற்றல் திறனை குறைக்க செய்துவிடும். இதனால் அடிக்கடி ஞாபக மறதி உண்டாவது ஏற்படலாம்.
3. ஆல்கஹால் உடலுக்கு கெடுதல் என்பதால் தடை செய்யப்பட்டிருந்தாலும் ரெட் ஒயின் எனப்படும் ஒயின் மூளைக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி அல்சீமர் நோயிலிருந்து பாதுகாப்பு தரும். ஞாபக மறதி அதிகம் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் நல்ல பலன் பெறலாம். இது மூளைக்கு மற்றும் இதயத்திற்கு மிகவும் நல்லது.
4. தினமும் பத்து பாதாம், பத்து பிஸ்தா சாப்பிட்டால் மூளை மட்டும் அல்ல, உடல் முழுவதும் ஆரோக்கியம் பெறும். இதிலிருக்கும் விட்டமின் E மற்றும் பி6 மூளையின் சிறப்பான ஆற்றலுக்கு உதவியாக செயல்படும்.
5. தினமும் காலையில் க்ரீன் டீ பருகும் நபர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். இதில் இருக்கும் பாலிஃபீனால் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உடலுக்கு சுறுசுறுப்பை மட்டுமல்ல, மூளைக்கு உற்சாகத்தைக் கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு.
மேலும் பால் சார்ந்த பொருட்கள், நட்ஸ் வகைகள், தேன், பெரீஸ் வகை பழங்கள், ரோஸ்மேரி, முட்டை, தானிய வகைகள், சிவப்பு அரிசி, ஓட்ஸ் போன்றவையும் சிறப்பான ஞாபக சக்திக்கு உந்து கோலாக இருக்கும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல நினைவாற்றலை பெறலாம்.