Advertisement

தமிழருடைய பாரம்பரிய வகை காய்கறிகளும்! அது செய்யும் வேலையையும்! நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆதி காலம் முதல் இப்போது வரை தமிழர்கள் காய்கறி வகைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுத்து வருகின்றனர். மாமிச உணவு வகைகளை அதிகம் உண்பதை விட, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் நமக்கு ஏற்படுவதில்லை என்பதை அப்போதே நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களை சற்று மறந்தே தான் போய் விட்டோம். விலை அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களை விட, நாம் அலட்சியமாக நினைக்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய சில காய்கறி வகைகள் நமக்கு தீவிரமான பல நோய்களை கட்டுபடுத்துகிறது. அப்படியான காய்கறி வகைகளையும், அது செய்யும் வேலையை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

veggitables

பச்சை மிளகாய்:

பச்சைமிளகாய் சூடு என்பதால் பெரும்பாலும் காய்ந்த மிளகாயை பயன்படுத்துகிறோம். பச்சை மிளகாய் பருக்களை குறைத்து சருமம் சார்ந்த பிரச்சனைகளை நீக்குகிறது. எனவே இதை தேவையான அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் நன்மை உண்டு.

கருவேப்பிலை:

சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைத்து விடுவதால் பலருக்கும் கறிவேப்பிலையின் சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. நீங்கள் சமைக்கும் பொழுது சமையலில் மிக்ஸியில் அரைக்கும் பொருட்களுடன் சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து அரைத்து விட்டால் போதும். அந்த உணவும் ருசிக்கும், கல்லீரல் மற்றும் கண் சார்ந்த நோய்களையும் தடுக்கும். முடி உதிர்வதும் விரைவாக குறையும்.

எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழத்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானத்திற்கும் நல்லது. பல் சார்ந்த நோய்களும் ஏற்படாமல் தடுக்கப்படும்.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் போன்ற கொடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

pavakkai

பாகற்காய், கொத்தவரை:

பாகற்காய் மற்றும் கொத்தவரங்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் அற்புதமான காய்கறி வகைகளாகும். இதனை வாரம் ஒரு முறையாவது கட்டாயம் சமைக்க பழகிக் கொள்ளுங்கள். இதனால் கிடைக்கப்போகும் நன்மைகளை வயதாகும் பொழுது நீங்கள் உணரலாம்.

இஞ்சி:

தினமும் குடிக்கும் தேநீரில் இஞ்சியை தட்டி போட்டு குடிப்பது, உணவில் இஞ்சி அதிகம் சேர்ப்பதும் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.

வாழைக்காய்:

வாழைக்காய் மற்றும் வாழைப்பூ வயிற்றில் சிறுநீரக கல் உருவாகுவதை தடுக்கிறது. இப்போது இந்த பிரச்சனை நிறைய பேருக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், சிறு கற்கள் கூட சிறுநீருடன் வெளியேறிவிடும். மேலும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது.

அவரைக்காய்:

சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி அவரைக்காயை சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து நல்ல நிவாரணம் காண்பீர்கள்.

avarakai

கத்திரிக்காய்:

கத்திரிக்காய் அரிப்பை ஏற்படுத்தும் என்று பயந்து இதனை தவிர்க்கின்றனர். ஆனால் அனைவரையும் அச்சுறுத்தும் கேன்சர் நோய் அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிடுபவர்களுக்கு வருவதில்லையாம்.

மாதுளை:

ரத்த சோகை மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு அடிக்கடி மாதுளை பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது. கருத்தரித்திருக்கும் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும்.

brinjal

முருங்கைக்காய்:

முருங்கைக்காய் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கி ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டுள்ளது. எளிதாகக் கிடைக்கும் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நம் ஆயுளை கூட்டக் கூடியது.

உருளைக்கிழங்கு:

வாய்வு என்று ஒதுக்கி வைக்கப்படும் உருளைக்கிழங்கில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனை சமைக்கும் பொழுது பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத் தொல்லை ஏற்படாது.

potato-urulai

வெண்டைக்காய்:

உடல் எடையை சீராக வைப்பதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. உடல்பருமன் இருப்பவர்கள் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும்.

பீர்க்கங்காய்:

பீர்க்கங்காய் இளமையில் வரும் கண் பார்வை குறைபாட்டை எளிதாக சரி செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி பீர்க்கங்காய் சமைத்துக் கொடுப்பது நல்லது.

புடலங்காய், சுண்டைக்காய்:

புடலங்காய் மற்றும் சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் மிகவும் நல்லது.

சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயத்தில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் சொல்லில் அடங்காதவை. எத்தகைய கொடிய நோய் தொற்றும் ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி சின்ன வெங்காயத்தை உணவில் தாராளமாக சேர்த்து வர வேண்டும். பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் மிகுதியான ஆரோக்கியத்தை தரக்கூடியது.

onion

தக்காளி:

தக்காளி இல்லாமல் உணவே இல்லை என்று கூறலாம். தமிழருடைய சமையலில் தக்காளிக்கு தான் முதலிடம் உள்ளது. தக்காளியை விதைகள் நீக்கி சமைப்பது நன்மையாகும். மேலும் தக்காளியை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் கேன்சர் செல்கள் உருவாகும் முன்பே அழிந்துவிடுகிறது.

அண்ணாச்சி:

உஷ்ணம் என்று ஒதுக்கி வைக்கும் அன்னாசியில் காய்ச்சலை குறைக்கும் தன்மை உள்ளது. காய்ச்சல் இருக்கும் பொழுது அன்னாசிப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

naval-pazham

நாவல் பழம்:

சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று முருகன் அவ்வையாரிடம் விளையாடிய நாவல்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

வாழைப்பழம்:

தினசரி உணவில் வாழைப்பழம் இடம்பெறுவதால் சரும வெடிப்புகளை தடுக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காய் பெரியது மற்றும் சிறியது எதுவாக இருந்தாலும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் சளி தொந்தரவு என்பதே வராது. உடல் சூட்டினால் வரும் வாய் புண் உடனே நீக்குவதற்கு நெல்லிக்காய் சாப்பிடலாம்.

கருணைக்கிழங்கு:

நாக்கு அரிக்கும் என்பதால் கருணைக் கிழங்கை உணவில் தவிர்த்து வருகிறோம். ஆனால் கருணைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

karunai-kizhangu

பப்பாளி:

பப்பாளி பழத்தில் கண் சார்ந்த நோய்களை தடுக்கும் ஆற்றலும் தோலில் இருக்கும் வெண்மை நோய் நீங்கவும் உதவும் தன்மை உள்ளது.

முளைக்கீரை:

கீரை வகைகளில் முளைக்கீரை பசியை தூண்டி கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. கண்களில் ஏற்படும் உஷ்ணத்திற்கு, முளைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை கிடைக்கும்.

mulai keerai

சுரைக்காய்:

உடல் உஷ்ணத்தை வெகுவாக குறைத்து உடலை எளிதாக குளிர்ச்சியடைய வைக்கும் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

பூசணிக்காய்:

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி பூசணிக்காய் சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்.

cucumber

வெள்ளரிக்காய்:

தண்ணீர் அருந்துவதற்கு சோம்பல் தனம் படுபவர்கள் நீர்க்கடுப்பு நோயை அனுபவிப்பார்கள். அந்த நீர்கடுப்பு நோயிலிருந்து நிவாரணம் பெற தண்ணீர் குடிக்காவிட்டாலும், அடிக்கடி நீர்சத்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிட்டு வாருங்கள்.

நிலக்கடலை:

உடலில் சக்தி இல்லாதது போல் உணர்ந்தால் உடனே நிலக்கடலையை சாப்பிட்டுப் பாருங்கள். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் நிலக்கடலை தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.

peanut

கொய்யாப்பழம்:

கொய்யா பழம் கண் பார்வை தொடர்பான விஷயங்களில் இருந்து நம்மை காக்கிறது.

முட்டைகோஸ்:

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் முட்டைகோஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்திற்கும் சிறந்த தேர்வாக விளங்குகிறது.