Advertisement

இந்த எண்ணெயை ஒரு சொட்டு இரவில் தூங்கும் போது தடவினாலே போதும். காலையில் எந்திரித்து கண்ணாடி பார்க்கும் போது, உங்களுடைய முகமா இது! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அழகா மாறுவீங்க!

இந்த எண்ணெயை ஒரு சொட்டு இரவில் தூங்கும் போது தடவினாலே போதும். காலையில் எந்திரித்து கண்ணாடி பார்க்கும் போது, உங்களுடைய முகமா இது! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அழகா மாறுவீங்க!

எல்லோருக்குமே தங்களுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணம் இருக்கும். நம்முடைய தோலின் நிறத்தை விட்டுவிடுங்கள். கருப்பு நிறமாக இருந்தால் என்ன? மாநிறமாக இருந்தால் என்ன? பார்ப்பதற்கு கலையாக இருக்க வேண்டும். சிரித்த முகமாக இருக்க வேண்டும் முதலில் அதுதான் அழகு. முகத்தில் தேவையற்ற கரும்புள்ளிகள், தேவையற்ற முகப்பருக்கள், துவாரங்கள் இவ்வாறாக சரும பிரச்சனைகள் இல்லாமல், சருமம் மொழு மொழுவென்று அழகாக இருந்தாலும் போதும். நமக்கு தன்னம்பிக்கை கூடுதலாக வரும்.

carrot

உங்களுடைய முகம் கருப்பாக இருந்தாலும் சரி அது வெள்ளையாக மாற, வெள்ளையாக இருந்து முகப்பரு கரும்புள்ளி பிரச்சனைகள் இருந்தாலும், அவைகள் அனைத்தும் நீங்க, எல்லா பிரச்சனைகளுக்கும் சுலபமான தீர்வாக ஒரே ஒரு எண்ணெயை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நேரடியா குறிப்பை பார்த்துவிடலாம். இதற்கு தேவையான பொருட்கள் 50ml சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், கேரட் 1 தோல் சீவாமல் துருவியது. ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து விட்டு, தேங்காய் எண்ணையை அதில் ஊற்றி விடுங்கள். அது சூடாவதற்கு முன்பாகவே கேரட் துருவலை அந்த எண்ணெயில் சேர்த்து, வதக்க தொடங்குங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, அந்த கேரட் விழுது, தேங்காய் எண்ணெயோடு சேர்த்து சரியாக 5 நிமிடங்கள் வழங்கினால் போதும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். கவனித்துக் கொள்ளுங்கள். கை விடாமல் வதக்கி கொண்டே இருக்கவேண்டும். கேரட் கருகியும் போய்விடக்கூடாது. கேரட்டில் இருக்கும் சத்து எண்ணெயில் இறங்காமலும் போய்விடக்கூடாது.

carrot1

கேரட் நன்றாக வதங்கியவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, இந்த விழுதை நன்றாக ஆற விட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் சுத்தமான காட்டன் துணியை விரித்து, இந்த கேரட் விழுதை அந்தத் துணியில் போட்டு உங்கள் கைகளாலேயே முறுக்கி நன்றாகப் பிழிந்து எண்ணெயை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டும். 50ml எண்ணெய் ஊற்றினால் மொத்தமாகவே ஏழிலிருந்து எட்டு ஸ்பூன் எண்ணெய் தான் உங்களுக்கு கிடைக்கும்.(நீங்கள் தயார் செய்த எண்ணெய் ஆரஞ்சு நிறத்தில் தங்க நிறத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் சரியான பக்குவம்.)

சிறிய கண்ணாடி பாட்டிலில் இந்த எண்ணெயை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கும் போது இரண்டு சொட்டு உங்களுடைய விரல்களில் தொட்டு உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடத்தில் அது காய்ந்து விடும். இந்த எண்ணெயை முகத்தில் அப்ளை செய்த உடனேயே உங்களது முகம் பள பளப்பாக மாறியதை உங்களால் உணர முடியும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். (இந்த எண்ணெயை இரவு நேரங்களில் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பவர்கள் பகல் நேரத்தில் கூட முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம்.)

carrot2

மறுநாள் காலை எழுந்ததும் வழக்கம் போல முகத்தை நீங்கள் கழுவிக் கொள்ளலாம். தொடர்ந்து 10 நாட்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தி வாருங்களேன். பிறகு உங்களுடைய முகத்தில், முகத்தோற்றத்தில், தோலில் ஏற்படக்கூடிய மாற்றத்தை! நிச்சயம் மாநிறமாக உள்ளவர்கள் கலர் கொஞ்சம் அதிகரிக்கும். வெள்ளையாக உள்ளவர்களுக்கு மேலும் பொலிவான அழகு கிடைக்கும்.

face4

தோல் ரொம்ப கருப்பா இருக்கிறவங்களோட நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாநிறமாக மாற ஆரம்பிக்கும். இந்த எண்ணையை உடலில் கழுத்துப் பகுதி, முட்டி பகுதி இப்படியாக ஏதாவது இடத்தில் கரு நிறம் அடர்த்தியாக இருந்தால் கூட, அந்த இடத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருநிறம் குறைய ஆரம்பிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.