Advertisement

நீங்க கண்ணாடி போட்டுட்டு இருக்கீங்களா? கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சீக்கிரம் சரியாகி, கண்ணாடியை கழட்டி தூர போட்டு விடலாம். இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க!

நீங்க கண்ணாடி போட்டுட்டு இருக்கீங்களா? கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சீக்கிரம் சரியாகி, கண்ணாடியை கழட்டி தூர போட்டு விடலாம். இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க!

இன்றைய சூழ்நிலையில் கண்ணாடி போடாத, கண் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அந்த அளவிற்கு எல்லோருக்கும் கண் பிரச்சனை.  நிறைய நேரம் டிவி பார்ப்பது, செல்போன் பார்ப்பது, லேப்டாப், கம்ப்யூட்டர் இப்படியாக நம் கண்களுக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. ஏகப்பட்ட பிரச்சனைகள். கிட்டப்பார்வை தூரப்பார்வை, கண்ணில் தேவையற்ற சதை வளர்வது, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும், கண்ணின் லென்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் இப்படியாக சின்ன சின்ன இரண்டு கண்களுக்கு எவ்வளவு பிரச்சனை?

eyelid1

இதை சரி செய்வதற்கு லேசர் ட்ரீட்மென்ட், கண்ணாடி போடுவது, இதைத் தவிர்த்து இயற்கையான முறையில் நம்முடைய கண்களை சரிசெய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்கின்றோம். இந்த பயிற்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக செய்யலாம். இன்றைக்கு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கூட கண்ணாடி மாட்டிக் கொண்டுதான் செல்கிறது அல்லவா?

சரிங்க, நேரடியா டிப்ஸ்க்கு போயிடலாம். முதலில் நம்முடைய கண்களை தினந்தோறும் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அது எப்படி? ஒரு அகலமான பாத்திரத்தில் நிரம்ப சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் உங்களது முகத்தை வைத்து உங்களது, இரண்டு கண்களிலும் தண்ணீரில் படும்படி வைத்து, கண்களை திறந்து திறந்து மூட வேண்டும்.

eye-problem1

அந்த சுத்தமான தண்ணீர் உங்களுடைய கண்களில் படவேண்டும். கண்ணில் தூசி விழுந்து விட்டது என்றால், கண்ணை தண்ணீருக்குள் வைத்து சிமிட்டி சிமிட்டி எடுத்தால், அந்த தூசி வெளிவந்துவிடும் என்று சொல்லுவார்கள் அல்லவா? அதே போல் தான் தினமும் காலை ஒரு முறை, கண்களை கழுவுங்கள். மீண்டும் மாலை ஒரு முறை உங்களது கண்களை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக நீங்கள் கண்ணாடியை 24 மணி நேரமும், அதாவது தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டே இருந்தால், கண்ணாடியை நிச்சயம் கழட்டவே முடியாது. தேவையானபோது மட்டும், அதாவது படிக்கும்போது, கம்ப்யூட்டரை பார்க்கும்போது, எழுதும்போது, இப்படி ரொம்ப சிரமப் படும் சமயத்தில் மட்டும்தான் கண்ணாடியை மாட்டிக் கொள்ள வேண்டும். மற்ற சமயங்களில் கண்ணாடியை கழட்டி விட்டு, உங்களுடைய கண்களால் மற்ற பொருட்களை பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது இரண்டாவது டிப்ஸ்.

eye-problem2

மூன்றாவதாக உங்களுடைய கண்களை எவ்வளவு சிமிட்டிக் கொண்டே இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களது கண் பார்வையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். கண் சிமிட்டாமல் ஒரு பொருளை, மெய்மறந்து உற்றுநோக்கி கொண்டே இருந்தால், கண்ணில் தொடர் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இறுதியாக விட்டமின் குறைபாட்டால் உங்களுடைய கண்களுக்கு பிரச்சனை இருக்கும். இந்த விட்டமின் குறைபாட்டை சரிசெய்ய, ஒரு சின்ன டிப்ஸ். 1 கேரட்டை தோல் சீவாமல் சிறுசிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு, நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி அரைத்து, கேரட் சக்கையை மட்டும் பிழிந்து, தனியாக எடுத்து விட்டு அந்த ஜூஸை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

carrot

அந்த கேரட் ஜூஸில் காய்ச்சிய வெது வெதுப்பாக இருக்கும் பசும்பால் 1/2 டம்ளர் அளவு கலந்து, தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து, கலந்து குடித்து விடவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் அளவு இந்த ஜூஸை குடித்து வாருங்கள். 30 நாட்களில் உங்களுடைய கண்களில் மாற்றம் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.

Carrot juice benefits in Tamil

கொஞ்சம் கொஞ்சமாக உங்களது கண்பார்வை நிச்சயம் அதிகரிக்கும். இந்த டிப்ஸை தொடர்ந்து ஃபாலோ பண்ணி பாருங்க! மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றி வந்தால், 3 மாதத்திற்கு ஒருமுறை உங்களுடைய கண்ணாடி பவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து, கூடிய விரைவில் கண்ணாடியை கழட்டி தூர தூக்கி போட்டு விடுவீர்கள். முயற்சி செய்து பாருங்கள். இயற்கையான முறையில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வது தான் நமக்கு நல்லது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

.