பதநீரை காய்ச்சி பெறக்கூடிய ‘கருப்பட்டியில்’ இவ்வளவு விஷயம் இருக்கிறதா? இது தெரிந்தால் இனி இதைத் தேடி நிச்சயமாக அலைவீர்கள்!
இன்றும் தென் மாவட்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். கிராமப்புறங்களில் கருப்பட்டியின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. ஆனால் நகரத்தில் இருக்கும் பலருக்கும் கருப்பட்டி என்கிற ஒன்றை எந்த அளவிற்கு தெரியும்? என்பது தெரியவில்லை. இன்று நீங்கள் உபயோகிக்கும் வெள்ளை சர்க்கரை உடலில் எவ்வளவு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்கிற ஆபத்தை உணராமல் அதிகமாக பயன்படுத்தி வருகிறீர்கள். ஆனால் கருப்பட்டி என்பது இயற்கையாகவே கிடைக்கும் அற்புதமான மூலிகை மருந்தாகும். இதில் இருக்கும் நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக அதனை தேடி தெருக்கள் தோறும் அலைவோம் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. வாருங்கள் கருப்பட்டி பற்றிய அதிசயங்களை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கருப்பட்டியில் இருக்கும் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் வேறு எதிலுமே இல்லாத அளவிற்கு மகத்துவமானது என்று கூறலாம். குறிப்பாக பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். உடலை வலிமையாக்கும். நம்முடைய கிராமத்து பாட்டிகள் எல்லாம் இன்றும் இளமை ததும்ப, உடல் திடத்துடன் காட்சி அளிப்பதற்கு இந்த கருப்பட்டியும் ஒரு காரணம் தான் என்று சொன்னால் நம்புவீர்களா?
நம் கிராமத்து இளைஞர்களுக்கு பனைமரம் ஏறுவது என்பது மிகவும் பிடித்த செயல் ஆகும். பனை மரத்தின் வலிமையை கேட்டால் நாமெல்லாம் வாயைப் பிளக்க வேண்டியது தான். எத்தனை சுனாமியை கூட தாங்கக் கூடிய வலிமை கொண்டது பனை மரம். அதில் இருக்கும் ஒவ்வொரு அங்குலமும் பலன் கொடுக்கக் கூடியது. நம்முடைய தாய் மொழியான தமிழ் எழுத்துக்கள் மற்றும் காப்பியங்கள் பனை ஓலையில் தான் எழுதப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சி பெறக்கூடியது தான் ‘கருப்பட்டி’. இதிலிருக்கும் சுவையும், மணமும் அலாதியான புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் இன்றும் வியக்கும் படியான பலன்களைக் கொடுக்கக்கூடியது.
இதில் இருக்கும் மருத்துவ குணங்களை தெரிந்து தான் கிராமத்தினர் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர். இயற்கையோடு இணைந்தால் தான் நம்முடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இயற்கையாக கலப்படமில்லாத கருப்பட்டியில் நம் உடலை சுத்தப்படுத்தி, நல்ல செரிமானத்தை கொடுக்கக்கூடிய தன்மை உள்ளது.
பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்தம் பருப்புடன், கருப்பட்டியை சேர்த்து களி செய்து கொடுப்பார்கள். அக்காலத்தில் கொடுக்கப்படும் இந்த உளுந்தங்களியானது பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுப் பெறுவதற்கும், அவர்களுடைய கருப்பை ஆரோக்கியமாக எப்பொழுதும் இருக்கவும் உதவியாக இருந்தது. இதனால் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் எளிமையாக நடைப்பெற்றது. மேலும் மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய வயிற்று வலி நீங்க கருப்பட்டியை சிறிதளவு சாப்பிட்டால் போதும். உடனே வயிற்று வலி நின்று ரத்தப்போக்கு சீராகிவிடும்.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து காபி குடிக்கலாம். இதனால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராத கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் கைக்குத்தல் அரிசியில் சமைத்த சாதத்துடன், கருப்பட்டியை கலந்து சாப்பிடலாம். கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்பு பண்டங்கள், பணியாரங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல் திடத்தை கொடுக்கும்.
நீண்ட நாளாக சளி தொல்லையில் அவதிப்படுபவர்கள் மற்றும் வரட்டு இருமல் பிரச்சனை தொடர்ந்து இருப்பவர்களும் குப்பைமேனி மூலிகையுடன் சிறிதளவு கருப்பட்டியை வதக்கி சாப்பிட்டு வந்தால் போதும். சளி நீக்கி இருமல் மட்டுப்படும். மேலும் வாயு தொல்லை நீங்க ஓமத்துடன் கருப்பட்டியை சேர்த்து சாப்பிடலாம். உடலில் பிரச்சனையை கொடுத்துக் கொண்டிருக்கும் வாயுக்கள் வெளியேறி நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும்.
இன்று இருக்கும் நவீன யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பட்டியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை படிப்படியாக நீங்கிவிடும். நன்கு பசி எடுக்க, சீரகம், சுக்கு வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் போதும். நன்கு பசி எடுக்க துவங்கிவிடும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருப்பட்டியை மறந்து, தீராத நோயை உண்டாக்கும் வெள்ளை சர்க்கரையை தேடித் தேடிப் போய் வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.