Advertisement

ஒரு சில நேரத்தில் உங்களை சுற்றி குளிர்ச்சியான சூழ்நிலையில் இருந்தால், திடீரென காலில் இருக்கும் நரம்புகள் சுண்டி இழுத்து விடுவது போல் இருக்கும். பாதத்தில் இருக்கும் நடு நரம்புகள் கூட பலமாக இழுப்பது போல் இருக்கும். இப்படியிருந்தால் உங்களுடைய உடல் மிகவும் பலவீனமாக இருப்பதாக அர்த்தமாகிறது. உடல் பலம் மிக்கவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது. உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தாலும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது உண்டு.

ஒரு சில நேரத்தில் உங்களை சுற்றி குளிர்ச்சியான சூழ்நிலையில் இருந்தால், திடீரென காலில் இருக்கும் நரம்புகள் சுண்டி இழுத்து விடுவது போல் இருக்கும். பாதத்தில் இருக்கும் நடு நரம்புகள் கூட பலமாக இழுப்பது போல் இருக்கும். இப்படியிருந்தால் உங்களுடைய உடல் மிகவும் பலவீனமாக இருப்பதாக அர்த்தமாகிறது. உடல் பலம் மிக்கவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது. உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தாலும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது உண்டு.

ரத்த சோகை இருப்பவர்கள் நல்ல சத்துள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அப்படியே விட்டுவிட்டால், பல உடல் உபாதைகளும் எளிதாக தொற்றி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உலர் கருந்திராட்சை ரத்த விருத்திக்கு மிகவும் சிறந்த பொருளாகும். இதனை இரவு நேரத்தில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் சேர்த்து அப்படியே வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் ஒரே மாதத்தில் உங்களுடைய ஹீமோகுளோபின் அளவு சரியான நிலைக்கு வந்துவிடும்.

black-dry-grape

கை, கால்களில் நரம்பு சுண்டி இழுத்தல் மிகவும் மோசமான வலி உணர்வை கொடுக்கும். ஒரு சிலருக்கு அதிக உயரத்தில் இருக்கும் பொருட்களை, பாதங்களை தூக்கி எடுக்கும் பொழுது பாத நரம்புகள் அப்படியே இழுத்துக் கொள்ளும். வலி தாங்க முடியாமல் கதறுவார்கள். இது போல் நரம்பு சுண்டி இழுத்தல் பிரச்சினையை சரி செய்ய வேப்ப எண்ணெய்யை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நான்கு கற்பூர வில்லைகளைப் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

அப்படியே இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் அதனை லேசாக சூடாக்கி சூடு பொறுக்க கை, கால்களில் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் பொழுது அழுத்தம் கொடுக்கக் கூடாது. அழுத்தம் கொடுத்தால் நரம்புகள் பிசக வாய்ப்புகள் உண்டு. லேசாகத் தேய்த்து விட்டாலே போதும். அந்த எண்ணெயானது உடம்பில் ஊறி இந்த பாதிப்புகளை சீர் செய்து விடும்.

neem oil 3-compressed

அதே போல கை, கால்கள் மரத்துப் போதல் என்பதும் ரத்தத்தில் இருக்கும் பாதிப்பை குறிக்கிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய தினமும் ஒரு டம்ளர் அளவிற்கு இதனை குடித்து பாருங்கள். 300ml அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு விரல் அளவிற்கு இஞ்சித் துண்டுகளை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு கொதிக்க வைத்து 100ml குறைந்து 200ml ஆக சுண்டி வரும் பொழுது அடுப்பை அணைத்து மூடி வைத்து விடுங்கள்.

ginger 3-compressed

நன்கு ஆறியதும் இதனை பருகி விடுங்கள். காலை மாலை இருவேளையும் இது போல் செய்யுங்கள். வாரமிருமுறை இப்படி செய்ய கை, கால் மரத்துப் போதல் பிரச்சனை, நரம்பு சுண்டி இழுத்தால் பிரச்சனை, ரத்த சோகை போன்றவைகள் நீங்கி உடல் புத்துணர்வு பெறும். அடிக்கடி இந்த பிரச்சனை வருபவர்கள் இப்படி செய்தால் உங்களுடைய பிரச்சனைகள் விரைவாக நீங்கிவிடும்.