Advertisement

சொன்னா நம்பவே மாட்டீங்க! தலைமுடி உதிர்வை 10 நாட்களில் சரிசெய்ய, இதை விட சுலபமான தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

தலை முடி உதிர்வு பிரச்சனையை உடனடியாக நிறுத்தி, வழுக்கை விழுந்த இடத்தில், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்ய, இந்த குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கிறது. உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் தலை மொத்தமாக வழுக்கையாகிவிடும் என்று நினைப்பவர்கள், இந்த குறிப்பை உடனடியாக செய்து பாருங்கள். நல்ல பலனை அடையலாம். இந்தப் பதிவில் இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம்.

Vendhayam

முதல் குறிப்பு:

தலை முடி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வையும், உடனடி தீர்வையும் தரக்கூடிய சக்தி நம் சமையலறையில் இருக்கும் வெந்தயத்திற்கு உள்ளது. 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே, சுத்தமான குடிக்கிற தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிடுங்கள். ஒரு டம்ளர் அளவு தண்ணீருக்கு 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் போதுமானது. மறுநாள் காலை எழுந்து, வெந்தயத்தை மட்டும் தனியாக பிழிந்து, தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து, அந்த தண்ணீரை உங்களது தலைமுடியில் மசாஜ் செய்ய வேண்டும்.

உங்களுடைய வீட்டில் ஹேர் ஸ்ப்ரே பாட்டில் இருந்தாலும் கூட, அதில் இந்த வெந்தய தண்ணீரை ஊற்றி, உங்களது முடிகளின் வேர் பகுதிகளில் படும்படி ஸ்பிரே செய்து விடலாம். அதன்பின்பு, மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் நன்றாக இந்த தண்ணீர் உங்களது மயிர்கால்களில் ஊறிய பின்பு, தலையை அலசி விடுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த முறையை பின்பற்றி கொள்ளலாம். நம்முடைய முடிகளில் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்த பின்பு அப்படியேவும் விட்டு விடலாம். ஆனால், வெந்தயத் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால், குளிர்ச்சியான உடல் நிலை உள்ளவர்களுக்கு, காய்ச்சல் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

vendhaya-water

இரண்டாவது குறிப்பு:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் போட்டு, இரண்டு நிமிடங்கள் வரை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வருத்த வெந்தயத்தையும் கருவா பிள்ளையும், நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். (கருவேப்பிலையை கட்டாயம் கழுவி விட்டு தான் பயன்படுத்த வேண்டும்.)

vendhaya-oil

அதே கடாயில் 4 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, பொடி செய்து வைத்திருக்கும் வெந்தயம் கருவேப்பிலை பொடியை எண்ணெயில் சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இந்த எண்ணெய் ஆறியபின்பு வடிகட்டி எடுத்து, இந்த எண்ணெயை தினந்தோறும் தலையில் தேய்த்து பயன்படுத்தி வர வேண்டும்.

hair-massage

நிச்சயம் நம்பவே மாட்டீர்கள்! இதை பயன்படுத்தி 10 நாட்களில் உங்களுடைய முடி உதிர்வு பிரச்சினை நின்று, முடி வளர்வதை கண்கூடாக காணலாம். இதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த முறைகளை பின்பற்றி வரும் போது உங்களது முடியானது பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும். 10 நாட்களிலிருந்து 1 மாதத்திற்குள் உங்களது தலை முடியில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.