நம் அழகுக்கு மேலும் அழகு சேர்க வேண்டுமென்றால், நம்முடைய முடி அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும். காலம் மாறுவதற்கு ஏற்ப, சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, நம்முடைய முடி உதிர்வு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. இந்த முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு, ஒரு எண்ணெய் உள்ளது. நம்முடைய எல்லோரது வீட்டிலும், இருக்கக்கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தி எப்படி அந்த எண்ணெயை தயாரிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்ளலாமா?
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும், பெரிய வெங்காயம் தான் அந்தப் பொருள். இந்த பெரிய வெங்காயத்தை, தோல் உரித்து, நான்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்தால் 2 பெரிய வெங்காயம் எடுத்துக் கொள்ளலாம். பெரிய சைஸ் வெங்காயம் என்றால் 1 பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
தோலுரித்து நான்காக வெட்டிய, பெரிய வெங்காய துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு, 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் ஊற்றி, நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரும்பு கடாயில் 100 கிராம் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொண்டு, அதில் அரைத்த விழுதை சேர்த்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் சிடசிடப்பு அடங்கும் வரை, கொதிக்க வைக்க வேண்டும். ஏழிலிருந்து எட்டு நிமிடங்கள் கொதித்தால் சிடசிடப்பு அடங்கிவிடும்.
அதன்பின்பு, இந்த எண்ணெயை நன்றாக ஆற விட வேண்டும். ஆறிய வெங்காய விழுதை, ஒரு காட்டன் துணியில் கொட்டி, நன்றாக பிழிந்து எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணையை வாரத்தில் 2 நாள் உங்களுடைய தலையில், மயிர் கால்களில் படும்படி நன்றாக தடவி, மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்து விடுங்கள்.
வாரம் 2 முறை இப்படி செய்தால் நிச்சயம் வழுக்கை இடத்தில் கூட முடி சீக்கிரமே வளர ஆரம்பிக்கும். தலையை நன்றாக ஷாம்பு போட்டு சுத்தப்படுத்திவிட்டு, அதன் பின்பு அதிகமாக வழுக்கை இருக்கும் இடத்தில் இந்த எண்ணெயை லேசாக தொட்டு தடவி விட்டு விடுங்கள். அந்த எண்ணெய் எப்போதும் வழுக்கை விழுந்த இடத்தில், இருப்பது போல பார்த்துக் கொள்ளவேண்டும்.
அதாவது தினந்தோறும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்வீர்கள் அல்லவா? அதேபோல் வழுக்கை இடத்தில் மட்டும் இந்த எண்ணெயை 2 சொட்டு எடுத்து நன்றாக தடவி விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். நிச்சயம் முடி உதிர்வு குறைக்கப்பட்டு, முடி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டு, அழகு கூடும் என்பதில் சந்தேகமே கிடையாது.