Advertisement

முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள் சட்டென போக இதை விட சிறந்த டிப்ஸ் இருக்க முடியாது. வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்களே போதும்!

முகத்திலிருக்கும் இறந்த செல்கள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாக இருக்கின்றன. முகப்பருக்களை விட இந்த கரும்புள்ளிகள் அவ்வளவு எளிதாக மறைவதில்லை. நீண்ட நாட்கள் முகத்தில் தங்கியிருந்து முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும். இதனை நீக்குவதற்கு நீங்கள் முயற்சி செய்தால் அதுவே பெரிய தொல்லையாக மாறிவிடும். அந்த இடத்தில் முகப்பருக்களும் உருவாகக்கூடும். அதனால் தான் எப்போதும் முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கரும்புள்ளிகளை பொறுத்தவரை நீங்களாகவே கைகளால் அவற்றை நீக்குவது நல்லதல்ல.

blackheads

இந்த கரும்புள்ளியை மாயமாக மறைய வைக்க நம் வீட்டில் கிடைக்கும் சாதாரணமாக இருக்கும் மூன்று பொருட்களே போதுமானது. சருமத்தை பொறுத்தவரை சோப்புகளை பயன்படுத்துவதை விட பயத்தமாவு என்கின்ற பாசிப்பயறு கொண்டு உருவாக்கப்படுகின்ற மாவை குளியலுக்கு பயன்படுத்துவது இளமையை தக்க வைக்க பெருமளவு உதவி புரியும். வயதான தோற்றத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்த பயத்தமாவுக்கு உண்டு.

அது போல் சிறந்த ஸ்க்ரபராக கல் உப்பு முகத்திற்கு பயன்படுகிறது. அதனால் இந்த கல் உப்பை தூளாக்கி நன்கு மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாலில் இருக்கும் சத்துக்கள் முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். உள்ளே இருக்கும் நுண்கிருமிகளை வெளியில் எடுத்து அழிக்கும் ஆற்றல் படைத்தது. இந்த மூன்று பொருட்களை வைத்து தான் கரும்புள்ளிகள் மாயமாக மறைய வைக்கப் போகின்றோம். வந்த சுவடே தெரியாமல் முகம் பளிச்சென்று மாற்றுவதற்கு இந்த டிப்ஸ் மிகவும் உதவியாக இருக்கும்.

salt

இந்த மூன்று பொருட்களையும் அதாவது பாசிப்பயறு மாவு, பால் மற்றும் அரைத்த கல் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். 3 டீஸ்பூன் பாலில், 2 டீஸ்பூன் கல் உப்பு சேர்க்க வேண்டும் நன்கு கலந்து கொண்ட பின் கால் கப் அளவிற்கு பயத்தமாவை எடுத்து இவற்றுடன் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பேஸ்ட்டை முகம் முழுக்க லேசாக மசாஜ் செய்ய வேண்டும். நீங்கள் மசாஜ் செய்யும் பொழுதே முகத்தில் இருக்கும் அழுக்குகள், மாசு தூசுகள், பூஞ்சைகள் போன்றவை நீங்கிவிடும். பின்னர் முகத்தில் இருக்கும் நுண் கிருமிகளும் ஒழிந்துவிடும். முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள். அதன் பிறகு மீண்டும் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் மட்டும் இந்த பேஸ்டை சிறிதளவு தடவி உலர விடுங்கள்.

face1

நன்கு உலர்ந்ததும் மீண்டும் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். மேலே கூறிய எந்த பொருட்களையும் அப்படியே பயன்படுத்த கூடாது. பாசிப்பயறை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதே போல் கல் உப்பை மிக்சியில் நன்கு நைஸாக அரைத்து வைத்திருக்க வேண்டும். நேரடியாக அப்படியே பயன்படுத்தினால் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகும். எனவே கவனமாக இவற்றைக் கையாள்வது மிகவும் முக்கியம்.

green-gram-powder

நீங்கள் மசாஜ் செய்யும் பொழுது அழுத்தி மசாஜ் செய்யக்கூடாது. லேசாக ஸ்கரப் செய்தால் போதும். இதனால் உங்களுடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள் போன்றவை நீங்கும். முகப்பருக்கள் இருந்தாலும் அவைகள் படிப்படியாக குறைந்துவிடும். அடிக்கடி கைகளை கழுவிவிட்டு முகத்தை தொடுவது நல்ல பழக்கம். இதனால் நம்முடைய சருமம் மாசு மருவின்றி எப்போதும் பளிச்சென்று மின்னும்.