ஒரு வேலையை செய்து முடிக்கவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அந்த வேலையை காலதாமதம் செய்யாமல் அப்போதே செய்து முடித்து விட வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். வெறுமனே வாயில் சொல்லிக்கொண்டு இருந்தால் மட்டும், வாழ்வில் முன்னேற்றம் வந்துவிடாது. செயலிலும், ஈடுபட வேண்டும். அதற்கு நம்முடைய உடம்பில் சோம்பேறித்தனம் இருக்கவே கூடாது. உடலுக்கு சுறுசுறுப்பு தேவை. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய மனசு, செயல்பட சோம்பேறித்தனம் இல்லாத உடல் தேவைப்படுகிறது.
நம்முடைய முன்னோர்கள், ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய் என்று சொல்லி வைத்துள்ளார்கள். இதற்குப் பின்னால் நிறைய அர்த்தம் ஒளிந்திருக்கிறது. இதைப் பின்பற்றுபவர்கள் கட்டாயம் வாழ்க்கையில் முன்னேறி கொண்டே தான் செல்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எவரொருவர் நாளை, பிறகு என்று ஒரு விஷயத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கின்றாரோ, ஒவ்வொரு நாளை அவருடைய வாழ்க்கையில் இழந்து கொண்டே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இப்படிப்பட்டவர்கள் பெரிய கஷ்டத்தை சாதிப்பார்கள்.
சரிங்க, நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எறும்பு போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் போதும். முழுக்க முழுக்க இயற்கையான இந்த பொருட்களை இந்த முறைப்படி தினம்தோறும் குடித்து வந்தால், நம்முடைய உடம்பு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இந்த கசாயம் செய்ய தேவையான பொருட்கள். சீரகம் – 100 கிராம், ஏலரிசி – 50 கிராம், சுக்கு – 50 கிராம், மிளகு – 25 கிராம், கிராம்பு – 25 கிராம், திப்பிலி – 5 கிராம், ஏலக்காய் 10, இவ்ளோ தாங்க! இந்த பொருட்களெல்லாம் நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும். பொடியாக கிடைக்கக்கூடிய பொருட்களை பொடியாகவே வாங்கிக்கொள்ளுங்கள். பொடி கிடைக்கவில்லை என்றால், அந்த பொருட்களை வாங்கி நீங்கள் மிக்ஸியில் பொடித்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். எல்லா பொடியையும், ஒன்றாக சேர்த்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.
தினந்தோறும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, ஒரு ஸ்பூன் அளவு, தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியை சேர்த்து, 5 லிருந்து 7 நிமிடங்கள் கொதிக்க விட்டு, இந்த கஷாயத்தை வடிகட்டி குடித்தால் போதும். கசப்புத் தன்மை இருக்கும் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
உங்களுடைய உடம்பில் அலுப்பு தெரியாமல் எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்துவிடுவீர்கள். உடலில் தெம்பு வந்து விட்டால், மனதில் தைரியம் தானாக பிறக்கும். எந்த ஒரு வேலையும் சுறுசுறுப்பாக துரிதமாக செய்து நிச்சயம் வெற்றி காண்பீர்கள். சோம்பேறித்தனத்தை தூக்கி போடுங்கள். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு தினமும் இதை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள். குடித்து இத்தனை நாட்கள் கழித்துதான் ரிசல்ட் தெரியும் என்பது இல்லை. இதை குடித்த உடனேயே உங்களால் உணர முடியும் நீங்கள் புத்துணர்ச்சியாக சுறுசுறுப்போடு இருக்கிறீர்கள் என்பதை.
உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால், தொடர்ந்து நீங்கள் மருந்து சாப்பிடுபவர்களாக இருந்தால், உங்களது மருத்துவரை ஒரு முறை கேட்டு, அதன் பின்பு இந்த கசாயத்தை குடிக்கலாம். மற்றபடி உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. குழந்தைகளாக இருந்தால் இதில் அளவை குறைத்துக் கொண்டு இரண்டு சங்கடை கூட கொடுக்கலாம் தவறில்லை.