Advertisement

டீ, காபி தவிர்க்க நினைப்பவர்கள் இத ட்ரை பண்ணுங்க ரொம்ப நாள் ஆரோக்கியமாக இருப்பீங்க!

காலையில் எழுந்ததும் பல் தேய்த்து விட்டு முதலில் மனமும், நாவும் விரும்புவது இந்த டீ மற்றும் காபியை தான். காலம் காலமாக இந்த பழக்கத்தை விட முடியாமல் தவிப்பவர்கள் பலரும் உங்களில் இருக்கலாம். டீ, காபி அருந்துவது நல்லதில்லை என்று எவ்வளவு பேர் கூறினாலும் அதை நம்மால் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. டீ, காபி போன்றவற்றிற்கு பதிலாக இந்த கோதுமை பாயாசத்தை செய்து குடித்து பாருங்கள். இது டீ, காபியை மறக்கடிக்கவும் உதவும். அதே சமயத்தில் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் உங்களுக்கு கொடுக்கும். கோதுமை பாயாசம் அல்லது கோதுமை ட்ரிங்க்ஸ் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

tea

காபியில் இருக்கும் காஃபின்(caffeine)என்கிற பொருள் ஒரு வகை போதை தருவது. அதனால் தான் தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு அதை நிறுத்த முடியாத அளவிற்கு மூளையை தூண்ட செய்து விடுகிறது. தொடர்ந்து நாம் ஒரு நேரத்தில் காபி குடிப்பவர்களாக இருந்தால்! ஒரு நாள் குடிக்காமல் இருந்தாலும் நமக்கு ஒரு மாதிரியாக இருக்கும். குடித்தே ஆக வேண்டும் என்கிற மனநிலையை உருவாக்கும். அதைத் தான் அடிக்சன் என்கிறோம்.

ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தாலும் அதை செய்தே ஆக வேண்டும்! இல்லை என்றால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்கிற மனோபாவத்தை உருவாக்குவதற்கு பெயர் தான் அடிக்சன். இதனை மாற்றுவதற்கு கோதுமை கஞ்சி சிறந்த தேர்வாக இருக்கும். அதை எப்படி செய்வது?

cofee-powder

கோதுமை ட்ரிங்க்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை – 1/4 கப், வெல்லம் பொடித்தது – 1/2 கப், ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – 2 சிட்டிகை, தேங்காய் பால் – 1 கப்.

கோதுமை ட்ரிங்க்ஸ் செய்முறை விளக்கம்:

கோதுமை பாயாசம் செய்ய முதலில் முழு கோதுமையை கால் கப் அளவிற்கு எடுத்து கொண்டு வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி லேசாக அலசிவிட்டு அதனை மிக்ஸி ஜாரில் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை போன்றும் நைசாக இல்லாமல் அதை விட கூடுதல் கொரகொரப்பாக இருக்கும் படியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

wheat

இதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் பத்து நிமிடம் விசில் விட்டு எடுத்து பாருங்கள். தண்ணீர் முழுவதும் வற்றி கோதுமை வெந்து, கெட்டியான பதத்திற்கு வந்திருக்கும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பனங்கற்கண்டு அல்லது வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை இவற்றில் ஏதேனும் ஒன்றை அரை கப் அளவிற்கு பொடித்து தூளாக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.

வெள்ளை சர்க்கரை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. வெள்ளைச் சர்க்கரையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இருப்பதால் இதனை முற்றிலுமாக தவிர்த்து விட்டு நாட்டு சர்க்கரை பயன்படுத்துவது நல்லது. அரை டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் இளையவர்கள் என்றால் தேங்காய் பாலும் முதியவர்கள் என்றால் சாதாரண பாலும் ஒரு கப் அளவிற்கு சேர்த்து கிண்டி விட வேண்டும். இரண்டு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் கூடுதல் சுவையாக இருக்கும்.

wheat-payasam1

டீ, காபிக்கு பதிலாக ஆரோக்கியமான ட்ரிங்க்காக குடிக்க விரும்புபவர்கள் இதனை அப்படியே ஒரு டம்ளருக்கு டிரான்ஸ்பர் செய்து குடித்து விடலாம். இதில் நெய், முந்திரி போன்ற எதுவும் சேர்க்கப்படவில்லை. எனவே உடலுக்கு முற்றிலும் ஆரோக்கியம் தரும் இந்த கோதுமை பாயாசத்தை தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது.

wheat-payasam

இதனை அசல் பாயாசமாக கூடுதல் சுவையுடன் குடிக்க விரும்புபவர்கள் கோதுமையை நெய்யில் வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளலாம். பின்னர் மேற்கூறியபடி செய்து கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரிகளை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு குடித்தால் அட்டகாசமான சுவையில் பாயாசம் தயார் ஆகிவிடும். டீ, காபி தவிர்க்க நினைப்பவர்கள் இத செஞ்சி பாருங்க. அப்புறம் விடவே மாட்டீங்க.