Advertisement

இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க! முடி தாறுமாறா வளர ஆரம்பிக்கும். யார் நினைத்தாலும் முடி வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே முடியாது.

எவ்வளவுதான் முயற்சி செய்தும், ஏதேதோ எண்ணையை தலையில் தேய்த்தாலும், முடி கொட்டுவது நிற்கவே இல்லை. முடி வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? என்று புலம்புபவர்களுக்கு இந்த பதிவு. முடி வளர்ச்சியை அதிகரிக்க, ஒரு நிரந்தரத் தீர்வு உண்டு. ஒரு இயற்கையான எண்ணெயை நம் வீட்டிலேயே தயாரிக்கும் முடியும். தலைமுடியை வளரச் செய்யும் சில பொருட்களை வைத்து, அந்த தேங்காய் எண்ணையை எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த எண்ணையை தினம்தொரும் மயிர்கால்களில் படும்படி தேய்த்து வந்தாலே போதும். முடி வளர்வதை ஒரே மாதத்தில் நம்மால் கண்கூடாக காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவாரம் பூ எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ, அவாரம் இலை, ஆவாரம் தண்டு, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சிறிய கட்டு அளவு எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகள், பூ மற்றும் இலையோடு சேர்த்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். மருதாணி இலை ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த நெல்லிக்காய் 10 துண்டுகள்.

இந்த பொருட்கள் அனைத்தையும் அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயை இரும்பு கடாயில் ஊற்றி சூடுபடுத்தி, அதில் கொஞ்சம் போல வெட்டிவேரை போட்டு, அதன் பின்பாக, காய்ந்திருக்கும் இந்தப் பொருட்களையெல்லாம் அந்த எண்ணெயோடு சேர்த்து நன்றாக சூடு படுத்த வேண்டும்.

karisalankanni

அந்த எண்ணெயில் மேலே சொன்ன பொருட்கள் அனைத்தும் 24 மணி நேரம் வரை அப்படியே ஊறட்டும். அதன்பின்பு, இந்த எண்ணெய்யை ஒரு வடிகட்டியில் மூலம் நன்றாக வடிகட்டி, தயாராக இருக்கும் எண்ணையை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்து, தினம்தோறும் தலைக்கு தடவி வந்தால் போதும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களால் முடிந்தால் மேலே சொன்ன பொருட்களை எல்லாம் காய வைக்காமல் அப்படியே பச்சையாக, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, மைய அரைத்துக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்ற வேண்டாம். அரைத்த அந்த விழுதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்து, அந்த உருண்டைகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, அந்த தேங்காய் எண்ணெயை தலையில் தடவிக் கொள்ளலாம். உங்களுடைய விருப்பம் தான். இது இரண்டாவது முறை.

மூன்றாவதாக நீங்கள் சேகரித்த இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வெயிலில் காயவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாரு! இதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக ஊறவைத்து அந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து வரலாம். உங்களுக்கு எந்த முறை சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றி கொள்ளுங்கள். ஆக மொத்தத்தில், எண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து, ஊற வைத்து அந்த தேங்காய் எண்ணெயை நம் தலையில் தடவி வர, நிச்சயம் நம்முடைய முடி வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.