அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள, பார்ப்பதற்கு பலபலன்னு இருக்க, இவ்வளவு ஈஸி டிப்ஸா? காசு கூட நிறைய செலவாகாது. இந்த 2 பொருள் போதும்.
இளம் வயதில் இருக்கும் நிறைய பெண்களுக்கு, தங்களுடைய அழகை பாதுகாத்து கொள்வதற்கு, தங்களுடைய அழகை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. நேரத்தை மிச்சப்படுத்தியெல்லாம் உங்களை அழகு படுத்திக் கொள்ள முடியவில்லையா, உங்களுக்கான ஈஸியான டிப்ஸ் தான் இது. இந்த கலவை 1 மாதத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் கூட வைக்க வேண்டாம். இயற்கையான இந்த இரண்டு பொருட்களை வைத்து, உங்களை எப்படி அழகுபடுத்திக் கொள்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா.
இதுக்கு தேவையான பொருள் அரிசி மாவு 1/2 கப் அளவு, பீட்ரூட் அல்லது கேரட் தேவைப்பட்டால் இரண்டையுமே எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட் என்றால் அதில் பாதி அளவு வெட்டி எடுத்து, துருவிக் கொள்ள வேண்டும். துருவிய பீட்ரூட்டை பிழிந்தாலே நமக்கு நான்கிலிருந்து ஐந்து டேபிள் ஸ்பூன் அளவு பீட்ரூட் சாறு கிடைத்து விடும். தண்ணீர் ஊற்றி ஜூஸ் எடுக்கக் கூடாது.
பீட்ரூட்டில் இருந்து வரக்கூடிய தண்ணியை, மட்டுமே பிழிந்து ஜூஸ் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, அடுப்பில் மிதமான தீயில் வைக்க வேண்டும். தீயை அதிகமாக வைத்தால், எல்லா ஜூசும் ஆவியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜூஸை மிதமான தீயில் வைத்து, சூடுபடுத்தும் போது தண்ணீர் பதத்தில் இருக்கும் ஜூஸ் கொஞ்சம் கெட்டி பதத்திற்கு வரும். ஒரு நிமிடம் காய வைத்தாலே போதும். அந்த சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கி வையுங்கள். மிகவும் கொஞ்சமான அளவில்தான் சிவப்பு நிற கலவை கிடைக்கும், பரவாயில்லை.
இந்த சிவப்பு நிற கலவையோடு தேவையான அளவு அரிசி மாவைப் போட்டு கட்டியாகாமல் உங்கள் கைகளாலேயே பிசைந்துவிட வேண்டும். அப்படி பிசையும் போது அந்த மாவு கொஞ்சம் பிங்க் நிறத்தில் வரும் அளவிற்கு, அரிசி மாவு சேர்த்தால் போதும். மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த பீட்ரூட் கலவையில் லேசான ஈரப்பதம் மட்டும், இந்த அரிசி மாவில் இருக்கும். அதையும் ஒரு தட்டில் போட்டு ஃபேன் காற்றில் உலர வைத்தாலே போதும். ஈரப்பதம் நன்றாக போனவுடன், இதை காற்று புகாத ஒரு டப்பாவில் சேகரித்து, வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதே போல் கேரட்டைத் துருவி, அந்த ஜூஸில் கூட, அரிசி மாவைக் கலந்து கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இல்லை 2 ஜூஸூம் ஒன்றாக சேர்த்து கொதிக்கவிட்டு கலவையை தயார் செய்து கொள்ளலாம். ஆனால் பீட்ரூட்டில் கிடைப்பதுபோல், கேரட்டில் ஜூஸ் அதிகமாக வராது. மிக்ஸியில் அரைத்து தான் எடுக்க வேண்டும். அது உங்களுடைய இஷ்டம்தான். சரி, இதை எப்படி பயன்படுத்துவது?
தினம்தோறும் குளிக்கும்போது, இந்தப் பவுடரில் கொஞ்சம் பன்னீர், ரோஸ் வாட்டர், தயிர், இதில் உங்கள் சருமத்திற்கும் எது சேருமோ, அதை சேர்த்து குழைத்து வேண்டுமென்றாலும் உடம்பில் மசாஜ் செய்து தேய்த்து குளிக்கலாம். உடம்பில் தேவை இல்லை என்றால், முகத்திற்கு மட்டும் 5 நிமிடம் மசாஜ் செய்து குளித்து வந்தால், உங்களது முகம் பளபளப்பாக மாறும். அழகு நிரந்தரமாக இருக்கும். முகத்தில் தேவையற்ற அழுக்குகள் தங்காது.
இந்தக் கலவையை முகத்தில் அப்ளை பண்ணி, 10 நிமிடங்கள் காய விட்டு, அதன் பின்பு ஸ்க்ரப் மசாஜ் பண்ணி கூட, வாரத்தில் ஒரு முறை முகத்தை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். முகம் பொலிவாக மாறும்.
உங்களிடம் ரோஸ் வாட்டர், பன்னீர் தயிர் பால் எதுவுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. கொஞ்சமாக தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் குழைத்து, அதை முகத்தில் மசாஜ் செய்து குளித்து வந்தாலே போதும். ஆனால் டப்பாவிலிருந்து ஈரம் படாமல், தேவையான அளவு பவுடரைக் மட்டும் தனியாக கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் பட்டால் சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!