வெறும் 5 ரூபாயில் நீங்கள் எப்படி இருந்தாலும் அழகாகலாம்!
ஆண், பெண் என வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை தான். சிலர் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது முகத்தில் முகப்பருவும், பருக்கள் இருந்த அடையாளமும் முக அழகை கெடுத்து கொண்டிருக்கும். வெயிலில் சுற்றி சுற்றி கருமை படர்ந்து, உடலில் வெயில்படும் இடங்களில் மட்டும் கருமையாக ஒரு சிலருக்கு மாறி இருக்கும். அவர்களும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம். இந்த பிரச்சனைகளை வெறும் 5 ரூபாய் செலவில் நமது வீட்டிலேயே சரி செய்வதற்கு அற்புதமான டிப்ஸ் உள்ளது. அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கருப்பாக இருப்பவர்கள், முழங்கை மற்றும் முழங்கால் பகுதியை வெள்ளையாக மாற்ற நினைப்பவர்கள், அழகாக இருந்தாலும் முகத்தில் இருக்கும் தழும்புகளை பிரச்சினையாக நினைப்பவர்கள் இதை முயன்று பார்க்கலாம். இது போல் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும். நீங்களே வித்தியாசத்தை உணர ஆரம்பித்து விடுவீர்கள். அதன் பின் உங்களது பிரச்சினை தீரும் வரை தொடர்ந்து இதனை செய்து வரலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்: அரிசி மாவு, பால், எழுமிச்சை சாறு. முதலில் ஒரு கைப்பிடி அரிசியை ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. அதனுடன் பால் சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சையை எடுத்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிறிய பௌலில் எலுமிச்சை சாறை பிழிந்து அதைப் பஞ்சினால் நனைத்து முகம், கழுத்து, முழங்கால், முழங்கை போன்ற பகுதிகளில் மசாஜ் செய்து கொள்ளவும். பின் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிக் கொள்ளவும். இதனால் முகத்தில் படிந்துள்ள அழுக்குகள் கிருமிகள் போன்றவை நீங்கி விடும்.
அதன் பின் நாம் அரிசி மாவையும், பாலையும் சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து வைத்திருப்பதை முகம், கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளில் பேக் போல் தடவிக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்து ஈரப்பதம் வற்றியதும் சாதாரண தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து கொண்டு விடுங்கள்.
இதை செய்யும் பொழுது மூன்றாவது நாளிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தென்படும். முகம், கழுத்து, கை, கால், முழங்கை, முழங்கால் பகுதிகளில் இருக்கும் கருமையும் நீங்கி விடும். ஒரு வாரம் செய்து விட்டு நிறுத்தி விடாதீர்கள். உங்கள் பிரச்சினை தீரும் வரை தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் தான் முழுமையான பலனை அடைய முடியும்.
அரிசி மாவு சிறந்த ஸ்க்ரப்பராக நம்முடைய தோல் பகுதிக்கு இருக்கும். பால் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்கும். எலுமிச்சை நுண்கிருமிகளை அழித்து முகத்தை சுத்தமுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த மூன்றையும் கலந்து முகத்திற்கு தினமும் ஸ்கரப் செய்து வந்தால் முகம் பளிச்சென்று ஜொலிக்கும். திடீரென வெளியில் கிளம்பும் பொழுது முகம் பிரகாசமாக மாற இன்ஸ்டன்ட் பேக்காக இதை செய்து பார்க்கலாம். அப்புறம் பாருங்க எல்லார் கண்ணும் உங்கள் மேல் தான் இருக்கும்.
எப்போதும் அழகை பற்றிய கவலை மன உளைச்சலை ஏற்படுத்தும். இதனால் உங்கள் அழகு கூட போவதில்லை. மேலும் மேலும் குறையத்தான் செய்யும். அழகு என்பது தன்னம்பிக்கையை வளர்க்க கூடியது. அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டுமே தவிர, இப்படி இருக்கிறதே என்று கவலைப்பட்டு கொண்டிருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. முகத்தையும், மனதையும் அழகாக மாற்றி தன்னம்பிக்கையுடன் ஒளிர இந்த டிப்ஸை பயன்படுத்தி பயன் அடையுங்கள்.