Advertisement

இந்த சாதாரண பூக்களுக்குள் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

இந்த சாதாரண பூக்களுக்குள் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

நாம் எந்த பூவாக இருந்தாலும், அதை தலையில் சூடிக் கொள்ளவும், வெறும் அழகிற்காகவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் மலரும் ஒரு மூலிகை தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு மருத்துவ பயனை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. சாதாரண பூக்கள் முதல், விலை உயர்ந்த பூக்கள் வரை ஒவ்வொரு பூக்களும் நம்முடைய வாழ்க்கையில் சாதாரண பிரச்சினையைக் கூட மிக எளிதாக தீர்த்து விடும். பூக்களுக்குள் இவ்வளவு நன்மைகள் இருப்பதை நாம் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். அப்படி சில பூக்கள் நமக்கு என்னென்ன நன்மைகள் தரும்? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

henna-flower

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக சந்தித்துக் கொண்டு இருப்பது தூக்கமின்மை பிரச்சனை தான். எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் தூங்கி விட முடிவதில்லை. இது மிகப்பெரிய சாபமாக நமது வாழ்வில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை மிக எளிதாக தீர்க்கக்கூடிய பூ ஒன்று உள்ளது. அது தான் மருதாணி. மருதாணி செடியில் இருக்கும் பூக்களை பறித்து நாம் தூங்கும் பொழுது தலையணையில் நிரப்பி விட்டு அதில் தலை வைத்து தூங்கினால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும். தினமும் இது போல் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுதலை பெறலாம். அப்புறம் என்னங்க நீங்க எப்ப நினைச்சாலும் உடனே தூங்கலாம்.

ஒரு சிலருக்கு தூங்கி எழுந்த பின் கண்களெல்லாம் வீங்கி காணப்படும். இவர்கள் உடலில் இருக்கும் நீர் சத்து வேகமாக விரயம் அடைவதால் இப்படி உண்டாகிறது. உடல் உஷ்ணத்தை தணித்து கண் பிரச்சனையை குணமாக்கும் சக்தி பாரிஜாத பூவிற்கு உண்டு. பாரிஜாத பூக்கள் பல வகைகள் உள்ளன. அதில் சிறியதாகவும், ஆரஞ்சு வண்ண காம்பு உடைய பூக்களை சிறிதளவு நீரில் ஊறவைத்து அந்த நீரால் காலையில் முகம் கழுவினால் முற்றிலும் இந்த பிரச்சனை நீங்கும்.

panner-rose

ரோஜா பூ நிறைய மருத்துவ குணங்களை கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ரோஜாப்பூவின் இதழ்களை இரவில் தேனில் ஊறவைக்க வேண்டும். இதை மறுநாள் காலையில் ஒரு ஸ்பூன் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் முந்தைய நாள் இரவே ஓரிரு சங்கு பூக்களை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் அதை குடித்தால் இந்த பிரச்சனை முற்றிலுமாக நீங்கும். உடல் உஷ்ணத்தை குறைத்து முகத்தை தெளிவாக காலையில் வைத்திருக்க சிறிதளவு மல்லி பூக்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து அதை மறுநாள் காலையில் முகம் கழுவ பயன்படுத்த வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும். முக வீக்கம், கண் வீக்கம் போன்றவை முற்றிலுமாக நீங்கிவிடும்.

onion-flower

உடல் சூடு என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குளிர்ச்சியாக எதையாவது சாப்பிட்டால் சளி பிடித்துக் கொள்ளும். சரி நமக்கு குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாது போலிருக்கிறது என்று, அவற்றை தவிர்த்து குளிர்ச்சியற்ற உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் உடல் உஷ்ணமாகி வேறு சில பிரச்சினைகள் தோன்றும். அட நாம் எதைத்தான் செய்வது? என்று குழப்பத்தில் இருக்கும் பொழுது, வெங்காய செடிகளில் முளைக்கும் பூக்களை தொடர்ந்து சமையலில் சேர்த்து வந்தால் போதும். இந்த பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

senbaga-poo1

விரைவில் ஆறாத புண்களுக்கு வெள்ளை அல்லிப்பூ நல்ல நிவாரணம் கொடுக்கும். இந்த பூவுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து தடவி வர புண்கள் விரைவில் ஆறும். தீராத வயிற்றுவலிக்கு செண்பகப்பூவை தண்ணீரில் ஒன்றிரண்டு போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். வயிற்று வலி சட்டென நின்று விடும். தேமல் பிரச்சனை இருப்பவர்கள் ஜாதி மல்லி பூக்களை சிறிதளவு எடுத்து அரைத்து தேமல் இருக்குமிடத்தில் தடவி, பின் காய்ந்ததும் கழுவினால் விரைவில் தேமல் மறைந்து விடும்.

kungumapoo

தீராத தலைவலிக்கு பாலில் சிறிதளவு குங்குமப் பூவை அரைத்து நெற்றியில் பற்று போட சட்டென நீங்கும். கருமை நீங்கி உடல் வெள்ளையாக மாற சாமந்தி பூவை காயவைத்து பவுடராக அரைத்து பயன்படுத்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் ஆவாரம் பூவை தண்ணீரில் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வர நோய் கட்டுக்குள் இருக்கும்.

neem-flower

சளி இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நுண்கிருமிகளை அழிக்கவும் வேப்பம்பூவை சிறிதளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். ரத்தசோகை பிரச்சினை இருப்பவர்களும், உடல் உஷ்ணத்தை குறைக்கவும் செம்பருத்திப்பூவை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.