Advertisement

வாழ்நாள் முழுவதும் இளமையோடு, ஆரோக்கியத்தோடு, அழகாக இருக்க வேண்டுமா?

வாழ்நாள் முழுவதும் இளமையோடு, ஆரோக்கியத்தோடு, அழகாக இருக்க வேண்டுமா? இன்றிலிருந்தே இதை குடிக்க தொடங்குங்கள்!

இந்த பதிவில் கொடுக்கப்போகும் குறிப்பை பார்த்து விட்டு, இதை குடிக்க காசு நிறைய செலவாகுமே, என்று பயந்து விடாதீர்கள்! ஏனென்றால், உடல்நிலை சரியில்லாமல் போனால், லட்ச லட்சமாக மருத்துவமனைக்கும், மருந்து வாங்குவதற்கும் காசு செலவு பண்ணுவதற்கு நமக்கு மனசு வரும். ஆனால், ஆரோக்கியமான உணவை வாங்கி சாப்பிடுவதற்கு வரவு செலவு கணக்கை நாம் பார்ப்போம். மருத்துவமனைக்கு செல்லக்கூடாது, ஆரோக்கியமாக வாழ வேண்டும். நன்றாக உழைத்து சம்பாதிக்க வேண்டும், என்று நினைத்தால் இந்த ஒரு குறிப்பை பின்பற்றினாலே போதும். உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் வராது. வாழ்நாள் முழுவதும் தோல் சுருக்கம் விழாமல், அழகாக, இளமையாக இருக்கலாம்.

donkey milk

பாதாம் பருப்பு, இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உடல் எடையும் அதிகம் கூடாது. அதே சமயம் கால்சியம் சத்து அதிகரிக்கும். பாதாம்பருப்பை எந்த முறையில் தினந்தோறும் நம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அழகு குறையாமல் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ஒரு 100 கிராம் அளவு பாதாம் பருப்பை வாங்கி, அது கொஞ்சம் ஈரப்பதத்தில் இருந்தால், கடாயில் போட்டு லேசாக சூடு படுத்தி கொள்ளுங்கள். அதன் பின்பு அதை நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு, அதில் நான்கில் இருந்து ஐந்து ஏலக்காய் சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Badam benefits in Tamil

அரைத்த அந்த பாதாம் பருப்பு கொஞ்சம் சூடாக இருக்கும். நன்றாக ஆறவைத்து காற்றுப்புகாத கண்ணாடி டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் இரவு உணவு சாப்பிட்ட பின்பு, ஒரு மணி நேரம் கழித்து, ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய வெதுவெதுப்பான, பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பசும்பாலாக இருந்தால் சிறந்தது. அதில் ஒரு ஸ்பூன் அளவு பாதாம் பவுடரை கலக்கவேண்டும். ஒரு சிட்டிகை மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை. இவைகளை போட்டு கலந்து விட வேண்டும்.

பாலை மிதமான சூட்டில் வெதுவெதுப்பாக எடுத்துக்கொள்ளுங்கள். கட்டாயம், மிதமான சூட்டில் உள்ள பாலில்தான் பாதாம் பவுடர், மிளகுத்தூள், நாட்டு சர்க்கரையை கலக்க வேண்டும். சிரமம் பார்க்காமல் இதை மருந்தாக நினைத்து தினம்தோறும் குடித்து வாருங்கள். இதை குடித்த பின்பு 1/2 மணி நேரம், கழித்துதான் தூங்க செல்ல வேண்டும்.


பத்து நாட்கள் தொடர்ந்து இந்தப் பாலை குடித்து வந்தாலே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நன்றாக வித்தியாசம் தெரியும். பத்து நாட்கள் குடித்து விட்டு அதோடு விட்டுவிடாதீர்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு, தோல் சுருக்கம், இவைகள் அனைத்தும் நீங்கி உற்சாகமாக செயல்படுவதற்கு இந்தப் பால் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.