உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கம், நீங்க நிரந்தர தீர்வு! 1 மாதத்தில் முகம் இளமையாக மாறும்.
முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கம் இருந்தால் நம்முடைய தோற்றம் பொலிவிழந்து, வயதானது போல் தெரியும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு, செயற்கை முறையில் எந்த கிரீம் போட்டாலும், அது நிரந்தர தீர்வை கொடுக்காது. இயற்கையான பொருட்களை வைத்து, முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒரே மாதத்தில் எப்படி குறிப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால், பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
முதலில் ஒரு உருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதிலிருக்கும் சாரை மட்டும் பிரிந்து தனியாக, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக, பப்பாளிப் பழத்தில் இருக்கும் தோல் கொட்டைகளை நீக்கிவிட்டு, அந்த பழத்தை மட்டும் மிக்சியில் போட்டு அரைத்து அந்த விழுதை, உருளைக்கிழங்கு சாறோடு கலந்து விடுங்கள்.
அடுத்ததாக, பாசிப்பருப்பு தூள் 1 ஸ்பூன், வெண்ணை நீக்கிய தயிர் 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1/2 ஸ்பூன், இவைகளை தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சாறு பப்பாளி பழ விழுதோடு கலந்து விட வேண்டும். (அதாவது உருளைக்கிழங்கு சாறு 2 டேபிள் ஸ்பூன், பப்பாளி பழ விழுது 2 டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு தூள், வெண்ணெய் நீக்கிய தயிர், தேங்காய் எண்ணெய், இந்த ஐந்து பொருட்களை, ஒன்றாக மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் சரியான முறையில், பேஸ்ட் போல் தயாரிக்க வேண்டும் அவ்வளவுதான்.)
இதை முகம், கழுத்துப் பகுதிகளில் கீழிருந்து மேல் பக்கமாக தடவி விட்டு, 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும். வாரத்தில் மூன்று முறை இந்த குறிப்பை பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் உங்கள் முகம் பொலிவடைவதை உங்களால் கட்டாயம் பார்க்க முடியும்.
முகத்தில் இருக்கும் கரும் திட்டுக்களை நீக்க உருளைக்கிழங்கு ஜூஸ் உபயோகமாக இருக்கும். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்க பப்பாளி பழம் உதவி செய்யும். முகத்தில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, முகம் பொலிவு பெற பாசிப்பருப்பு உபயோகமாக இருக்கும். தயிர், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்கிவிடும். தேங்காய் எண்ணெய் சூரிய வெளிச்சத்திலிருந்து நம் முகத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும்.
இதோடு சேர்த்து உங்களது உணவு பழக்க வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள். சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரை, வகைகள் பழ வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து எவ்வளவு தண்ணீர் பருகி வருகிறோமோ, அந்த அளவிற்கு நமது சருமம் பளபளப்பாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. உங்களுக்கு, உங்கள் ஆரோக்கியத்தின் மேல், உங்கள் அழகின் மேல், அதிக அக்கறை இருந்தால் மேல் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை, தாராளமாக பின்பற்றி வரலாம்.