Advertisement

உங்க வீட்ல 2 உருளைக்கிழங்கு இருந்தா போதும்! 2 நிமிஷத்துல இந்த ஸ்நாக் செஞ்சி முடிச்சிடலாம்.

உங்க வீட்ல 2 உருளைக்கிழங்கு இருந்தா போதும்! 2 நிமிஷத்துல இந்த ஸ்நாக் செஞ்சி முடிச்சிடலாம்.

உருளைக்கிழங்கை வேக கூட வைக்க வேண்டாம். சுலபமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து சுவையான ஸ்நாக்ஸ், கட்லெட் எப்படி செய்யலாம்? இந்த புதுவிதமான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போமா? குறிப்பாக உருளைக்கிழங்கில் செய்யும் ஸ்னாக்ஸ் எதுவாக இருந்தாலும் அது எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா?

potato-cutlet

உருளைக்கிழங்கு ஸ்நாக் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

வேகவைக்காத பெரிய உருளைக்கிழங்கு – 2, கான்பிளவர் மாவு – 250 கிராம்,  துருவிய கேரட் – 1, பொடியாக வெட்டிய வெங்காயம் – 1, துருவிய முட்டைகோஸ் – சிறிதளவு (முடிந்தால் பொடியாக வெட்டிக் கொள்ளலாம்). பச்சைமிளகாய் 2 –  பொடியாக வெட்டியது, தக்காளி – 1 பொடியாக வெட்டியது, சிவப்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன், தேவையான அளவு – உப்பு.

வேகவைக்காத இரண்டு உருளைக்கிழங்கை, தோல் சீவி, நன்றாகக் கழுவி விட்டு, துருவலில், துருவிக் கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட் துருவுவதில், சிறிய பல் உள்ள பக்கம் துருவ கூடாது. பெரிய பல் இருக்கும் பக்கத்தில் துருவிக் கொள்ளுங்கள். துருவிய இந்து உருளைக் கிழங்குடன், இப்படியாக துருவி வைத்திருக்கும் கேரட், பொடியாக வெட்டி வைத்திருக்கும் முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், பொடியாக வெட்டி வைத்திருக்கும் தக்காளி, கரம் மசாலா, எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு, பொடியாக வெட்டிய கொத்தமல்லி தழை போட்டு முதலில் பிசைந்து கொள்ளவும்.

cutlet

அதன் பின்பு இறுதியாக நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை, சிறிது சிறிதாக தூவி உங்கள் ஐந்து விரல்களாலும், உருளைக் கிழங்கு கலவையை பிசைய வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டிருந்தால் தான் மாவு கெட்டிப் பதத்தில் இருக்கும். இதில் நாம் சேர்த்திருப்பது வேகவைத்த உருளைக்கிழங்கு, மற்ற பொருட்களும் பச்சையாக தான் செய்திருக்கின்றோம். ஆகவே, மாவு கொஞ்சம் கெட்டிப் பதத்தில் இருக்காது. ஒரு பொருளோடு ஒரு பொருள் ஒட்டாத, உதிரி உதிரியாக தான் இருக்கும். தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.


இந்த கலவையில் இருக்கும் வெங்காயம், உப்பு, லெமன் ஜூஸ் இவை மூன்றும் சேர்த்து சரியான பதத்திற்கு வந்துவிடும். இதில் சேர்த்திருக்கும் கான்பிளவர் மாவு, இவை அனைத்தையும் ஒன்றாக ஒட்டிக் கொள்ள வைக்கும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடு செய்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொள்ளுங்கள். தயார் செய்து வைத்திருக்கும் கலவையை எடுப்பதற்கு, கொஞ்சம் பெரிய அளவிலான ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

heart-shape-cutlet

நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையில் இருந்து, ஒரு ஸ்பூன் எடுத்து, தோசைக்கல்லில் சின்ன சின்ன, குட்டி தோசைகளை போல அல்லது முக்கோண வடிவத்தில், ஸ்பூனாளையே ஊற்றி, எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்தீர்கள் என்றால்,  சுவையான உருளைக்கிழங்கு ஸ்னாக் ரெடி ஆகிவிடும். (தோசைப் போல் வார்க்க முடியாது. இந்த கலவையை அள்ளி தோசைக்கல்லில் வைத்து, லேசாக பரப்பி விட்டு விடுங்கள்! அவ்வளவுதான்.)இதை மொத்தமாக  செய்து முடிப்பதற்கு 20 திலிருந்து 25 நிமிடம் கூட எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் குழந்தைகளுக்கு ஒரே முறை செய்து கொடுத்து பாருங்கள்! ஈஸியான ஸ்நாக்ஸ் தானே! ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!