உடல் எடையை குறைக்க, நம் வீட்டில் இருக்கும் இயற்கையான இந்த 5 பொருட்களும், 10 நாட்களும் போதுமே! இந்த ரகசிய டிப்ஸை நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?
நம்முடைய உடல் எடையை குறைக்கவும், வயிற்றுப் பகுதியில் இருக்கும் தொப்பையை குறைக்கவும், செயற்கையான முறையில், எந்த மருந்தையும் சாப்பிடாமல், இயற்கையாகவே, இயற்கையாக கிடைக்கக் கூடிய இந்த 5 பொருட்களை வைத்து, தயாரித்த லேகியம் போதும். லேகியம் என்றதும் மிகவும் சிரமப்பட்டு செய்ய வேண்டும் என்று பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமான முறையில், இந்த லேகியத்தை தயாரித்து விடலாம். இதன் மூலம் நமக்கு ஜீரணசக்தி அதிகரிக்கப்பட்டு, கெட்ட கொழுப்பு வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைவதை பத்து நாட்களிலேயே நம்மால் உணர முடியும் என்று சொன்னால், நீங்கள் நம்ப மாட்டீர்கள்! இந்த குறிப்பை படித்து முடித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்திருந்தால் தாராளமாக, இதை பின்பற்றலாம். பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதற்கு 100% உத்தரவாதம். இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பார்த்தால், பக்கவிளைவு வராது என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். சரி. குறிப்பு போகலாமா!
உடல் எடையை குறைக்க லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:
சீரகம் – 100 கிராம், உலர் திராட்சை – 100 கிராம், வெல்லம் 25 கிராம், இஞ்சி – 10 கிராம் (நான்கு தூண்கள் தோல் சீவியது), எலுமிச்சை பழம் 2 – சாறு மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு கடாயில் சீரகத்தைப் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வறுக்க வேண்டாம். வாசம் வரும் அளவிற்கு வறுத்தால் போதும். சரியான அளவு வறுத்த சீரகத்தை, உடனே ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். பின்பு அதை, மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அரைத்த சீரகத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, அதே மிக்ஸியில் உலர் திராட்சை, நறுக்கிய இஞ்சி துண்டுகள், பொடியாக நறுக்கிய வெல்லம் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து விழுதாக (nice paste) அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து, முதலில் அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பாக சீரகத் தூளையும் கடாயில் சேர்த்துக்கொண்டு, அடுப்பை சிம்மில் வைத்து, 5 நிமிடங்கள் வரை கைவிடாமல் கிளறிக் கொடுங்கள். அதாவது இந்த விழுதானது லேகிய பதத்திற்கு வரவேண்டும். கெட்டியாக திரண்டு வரும். உங்களுக்கே தெரியும். அந்த நேரத்தில் இரண்டு பெரிய எலுமிச்சை பழ சாரை இதனோடு சேர்த்து 30 வினாடிகள் வரை எல்லாவற்றையும் ஒன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.
உங்களது உடல் எடையை குறைக்கக்கூடிய, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய, எந்தவிதமான பக்கவிளைவுகளும் கொடுக்காத, லேகியம் இப்போது தயாராகிவிட்டது. நன்றாக ஆற வைத்து விட்டு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
தினம் தோறும் மதியம் சாப்பாடு சாப்பிட்ட பின்பு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், 1 ஸ்பூன் அளவு இந்த லேகியத்தை கலந்து குடித்து வந்தாலே போதும். முடியாதவர்கள் காலை நேரத்திலும் இந்த லேகியத்தை குடிக்கலாம். ஒரு நாளில், ஒரு முறை குளித்தால் மட்டும் போதும். உணவு சாப்பிட்ட பின்புதான் லேகியத்தை குடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 10 நாட்களில் இருந்து 15 நாட்களுக்குள் உங்களது உடல்நிலையில் கட்டாயம் வித்தியாசம் தெரியும். உடல் ஆரோக்கியத்திலும் கட்டாயம் வித்தியாசத்தை உணர முடியும். இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்!