Advertisement

5 நிமிஷத்துல செய்யக்கூடிய புதுவித சட்னி இதோ! இப்படி சட்னி வெச்சா தட்டு மொத்தமும் காலியாயிரும்.

5 நிமிஷத்துல செய்யக்கூடிய புதுவித சட்னி இதோ! இப்படி சட்னி வெச்சா தட்டு மொத்தமும் காலியாயிரும்.

தினமும் என்னடா சட்னி செய்வது? இருக்கின்றதே நாலு வகை சட்னி தான். அதுல என்ன ஸ்பெஷலா செய்றது? இப்படி தினமும் காலையில மண்டையை பிச்சிட்டு இருக்கீங்களா? உங்களுக்காகவே இந்த சூப்பர் ஆரோக்கியமான வேர்க்கடலை சட்னி வித்தியாசமான முறையில் இப்பதிவில் பார்க்கலாம். ஒரே மாதிரி சட்னி வச்சா எல்லோருக்கும் போரடித்து விடும். அதுல கொஞ்சம் வித்தியாசம் வித்தியாசமா செஞ்சா வேற சட்னினு நெனச்சு பேசாம சாப்பிட்டு பாராட்டுச் சான்றிதழ் கொடுத்துட்டு போயிடுவாங்க.

peanut-chutney1

வேர்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

வேர்கடலை – 100g, சின்ன வெங்காயம் – 10, சீரகம் – கால் ஸ்பூன், பூண்டு – 6 பல், இஞ்சி – சிறிய துண்டு, தக்காளி – 1, வரமிளகாய் – 7, உப்பு – தேவையான அளவு, புளி – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

முதலில் 100 கிராம் வேர்க்கடலை எடுத்து வெறும் கடாயில் மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஏற்கனவே வறுத்து வைத்தால் இன்னும் சுலபமாக இருக்கும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, வர மிளகாய் சேர்க்கவும். தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்றாக வதக்கவும். இப்போது சிறிது புளி சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பச்சை வாசனை போக வதங்கியதும் கீழே இறக்கி விடுங்கள்.

peanut-chutney

இவை நன்றாக ஆறியதும், மிக்சி ஜாரில் போட்டு கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலையை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளவும். நைசாக அரைத்து பின் தாளித்தம் செய்யவும். தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு, கருவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயத்தூள் அவ்வளவு தான். சுவையான புதுவிதமான வேர்க்கடலை சட்னி தயார். இப்படி மட்டும் சட்னி செய்து கொடுத்து பாருங்கள் தட்டில் ஒரு இட்லி தோசை கூட மிஞ்சாது. அப்படி ஒரு அலாதியான சுவை இருக்கும்.